Tuesday, July 30, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 10

ஒன்பதாவது ஆவரணம் 
வேங்கீஸ்வரம்  சொர்ணாம்பிகை
கணாம்பாள் அலங்காரம்


******************

ஒன்பதாவது ஆவரணம் .

ராகம்:  ஆஹிரி                                                                             தாளம்: ரூபகம்

பல்லவி

ஸ்ரீ கமலாம்பா ஜயதி அம்பா ஸ்ரீ கமலாம்பா ஜயதி
ஜகதம்பா ஸ்ரீ கமலாம்பா ஜயதி ஸ்ருங்காரரஸ கதம்பா
மதம்பா ஸ்ரீ கமலாம்பா ஜயதி சித்பிம்பா
பிரதி பிம்பேந்து பிம்பா ஸ்ரீ கமலாம்பா ஜயதி

மத்யமம்

ஸ்ரீபுர பிந்து மத்ய்ஸ்த சிந்தாமணி மந்திரஸ்த
ஸிவாகார மஞ்சஸ்தித  ஸிவகாமேஸாங்கஸ்தா (ஸ்ரீ கமலாம்பா)

அனுபல்லவி

ஸுகராநநாத்யர்சித மஹாத்ரிபுரசுந்தரீம்
ராஜராஜேஸ்வரீம் ஸ்ரீகர ஸர்வநந்தாமய
சக்ர வாஸினீம் ஸுவாஸினீம் சிந்தயேஹம் (ஸ்ரீ கமலாம்பா)

திவாகர ஸீதகிரண பாவகாதி விகாஸ கரயா
பீகர தாபத்ரயாதி பேதந துரீணதரயா
பாகரிபு ப்ரமுகாதி ப்ரார்தித ஸுகளேபரயா
ப்ராய பராபரயா பாலிதோ தயாகரயா  (ஸ்ரீ கமலாம்பா)

சரணம்
ஸ்ரீ மாத்ரே நமஸ்தே சிந்மாத்ரே ஸேவித ரமா-ஹரிகாவிதாத்ரே
வாமாதி சக்தி பூஜித பரதேவதாயக: ஸ்கலம் ஜாதம்
காமாதி  த்வாதஸ பிரூபாசித காதி ஹாதி ஸாதி
மந்த்ர ரூபிண்யா: ப்ரமோஸ் பத ஸிவ குருகுஹ ஜநந்யாம்
பிரீதியுக்த மச்சிதம் விலயது
ப்ரஹ்ம மய ப்ரகாஸிநி
நாமரூப விமர்ஸிநி
காமகலா ப்ரதர்யாதி ஸாமரஸ்ய நிதர்ஸிநி  (ஸ்ரீ கமலாம்பா)  


 ஸ்ரீ  கமலாம்பா  வெற்றி வாகையுடன் விளங்குகிறாள். அன்னை கமலாம்பிகை   வெற்றி  முழக்கமிடுகின்றாள்.    உலகம்மையான     ஸ்ரீகமலாம்பிகை  போற்றி! போற்றி!  .சிருங்கார ரசத்தின் நேர்த்தியான கலவையாக விளங்குகின்றாள்.
என்னுடைய தாயான ஸ்ரீ கமலாம்பிகை மேன்மேலும் வெற்றியுடன் திகழ்கிறாள். ஞான சொருபத்தின் பிரதிபிம்பமாக சந்திரனுக்கு சமானமாக  விளங்கும்  ஸ்ரீகமலாம்பிகை வெற்றிகள் மிளிர விளங்குகின்றாள்.

ஸ்ரீபுரம் என்னும்  ஸ்ரீ சக்ரத்தின் பிந்து ஸ்தானத்தின் மத்தியில் உள்ள சிந்தாமணி கிருஹத்தில் இருக்கும் சிவாகார மஞ்சத்தில் கோயில் கொண்டுள்ள சிவகாமேச்வரரின் அங்கமான அவரின் மடிமீது அமர்வது காட்சிதரும் ஸ்ரீ கமலாம்பா ஜய மங்களத்துடன் சர்வோத் க்ருஷ்டமாய் காட்சி தருகிறாள்.

வாராகி முதலிய சக்திகளால் அதாவது தண்டநாதா, மந்த்ரினீ முதலிய சக்திகளால் துதிக்கப்பட்ட மஹாத்ரிபுரசுந்தரியை, ராஜ ராஜேஸ்வரியை,  ஸ்ரீசக்ரத்தின் சர்வாவந்தமய  சக்ரம் என்ற ஐஸ்வர்யங்கள் ததும்பும் சக்கரத்தில் வீற்றிருக்கும் நித்ய சுமங்கலியான ஸ்ரீகமலாம்பிகையை  நான் தியானிக்கிறேன்.

சூரியன், சந்திரன்,   அக்னி   போன்றோருக்கு பிரகாசம் அளிப்பவள்,
பயத்தை கொடுக்கின்ற தாபத்ரயங்களால் உண்டாகும் இடர்ப்பாடுகளை  நீக்குவதில் வல்லமை  உள்ளவள், இந்திராதி தேவர்கள் பிரார்த்தனை செய்து  கொண்டதன் பேரில்  மங்கள  எழிலார்ந்த  திருவுருவோடு தோன்றி அருளியவள்.  

ப்ரக்ட யோகினி முதல் பராபராதிரகஸ்ய யோகினி வரையுள்ள ஒன்பது யோகினி ஸ்வரூபமுள்ளவள். இத்தகைய சிறப்புகளுடைய ஸ்ரீகமலாம்பிகையால் காத்தருளப்பட்டவன் நான். அப்பராபர தேவியை மனதில் போற்றுகின்றேன்.

ஸ்ரீ மாதா என்ற பெயர் கீர்த்தி உடைய லலிதா தேவியை வணங்குகிறேன்.  ஞான மயமானவளே!, லக்ஷ்மி, திருமால், ஈஸ்வரன், பிரம்மா, ஆகியோர் வணங்கிய உன்னைப் பணிகிறேன்.

பிரம்மா ,விஷ்ணு ருத்ர திருமூர்த்திகளின்  சக்திகளான வாமா, ஜ்யேஷ்டா  ரௌத்ரி, ஆகிய தேவதைள்  பூஜிக்கும் பரதேவதேவதையிடமிருந்தே  அனைத்து பிரபஞ்சங்களும் தோன்றியது.  மனு சந்திரன், குபேரன், லோபாமுத்ரா, மன்மதன், அகத்தியர். நந்திகேஸ்வரர், சூரியன், திருமால், குமரன், சிவன், துர்வாசர் முதலிய பன்னிருவரால் உபாசிக்கப்பட்ட ககாரத்தை ஆதியாகக் கொண்ட காதிவித்யை, ஹகாரத்தை ஆதியாகக் கொண்ட ஹாதி வித்யை, ஸகாரத்தை ஆதியாகக் கொண்ட ஸாதி வித்யை முதலான 12 வித்யைகளால் உபாசிக்கப்பட்ட மந்திரரூபிணி கமலாம்பிகைக்கு நான் அன்புக்குரியவன்.

சிவனுக்கே குருவான குமரப்பெருமானின் அன்னையிடத்தில் பிரியத்தோடு கூடிய என் மனம் லயிக்கட்டும். ப்ரஹ்ம ஸ்வருபத்தின்  ஜோதியுடன் பிரகாசிப்பவள், பெயர்கள் - உருவங்கள்  கொண்ட இந்த நாம-ரூப பிரபஞ்சத்தை விளங்கச் செய்பவள். ஸ்ரீவித்யா ஸம்ப்ரதாயத்தில் காமகலா என்ற உபாசனா மூர்த்தியாக இருப்பவள். சகல உயிர்களிடத்தும் சமன் நோக்கு  உள்ளவள். இவ்வளவு பெருமைகளைக் கொண்ட கமலாம்பிகையான நீங்கள் வெற்றியுடன் விளங்குகின்றீர்கள்.  அடியேனது மனது எப்போதும் தாயே! ஸ்ரீகமலாம்பிகையே!  உன்னிடத்திலேயே நிலைத்து நிற்கட்டும் .

ந்த ஒன்பதாவது  ஆவரணத்தின் சக்ரம்  சர்வாநந்தமயம் ஆகும். இச்சக்ரம் சிவசக்தி ஐக்ய பிந்துவாகும். இச்சக்கரத்தின் நாயகி மஹா திரிபுரசுந்தரி. இதில் அட்டித்து விளங்கும் யோகினி பராபர ரகஸ்ய யோகினி. சவிகல்ப சமாதி  ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் வாமாதியர்கள் ஆவர்.

இக்கீர்த்தனையில் எட்டு வேற்றுமைகளும் கையாளப்படுகின்றன. இக்கீர்த்தனத்தால் எதிலும் வெற்றி கிட்டும், மனம் எப்போதும் பரவச நிலையில் விளங்கும், மந்திர சித்தி உண்டாகும், உள்மனம் சலனமின்றி இன்பத்தில் லயிக்கும். 

முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு
                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Labels: , , ,

ஸ்ரீசக்ர நாயகி - 9

எட்டாவது ஆவரணம் 

இவ்வருடம் புலியூர் பாரத்வஜேஸ்வரத்தில் சொர்ணாம்பாள் பெண்களின் பல் வேறு நிலைகளைக் குறிக்கும் திருக்கோலங்களில் அருள் பாலித்தாள்.


 முதல் நாள் குழந்தை ரூபம்.

புலியூர் சொர்ணாம்பாள் 
சுமங்கலி ரூபிணி அலங்காரம்  
சொர்ணாம்பாள்  சுவாசினி ரூபிணி அலங்காரம் 

சொர்ணாம்பிகை வானபிரஸ்த ரூபிணி அலங்காரம் சொர்ணாம்பாள் யோக ரூபிணி திருக்கோலம் 


********************

எட்டாவது ஆவரணம்

ராகம்:
 கண்டா                                               தாளம்: ஆதி

பல்லவி

ஸ்ரீ கமலாம்பிகே அவாஅவ சிவே   கரத்ருத ஸுக ஸாரிகே              (ஸ்ரீ கமலாம்பிகே)

அநுபல்லவி

லோக பாலினி கபாலிநி சூலினி லோக ஜனநீ பகமாலிநி ஸக்ருதா

மத்யமம்லோகமய மாம் ஸர்வஸித்தி
ப்ரதாயிகே த்ரிபுராம்பிகே பாலாம்பிகே     (ஸ்ரீ கமலாம்பிகே)சரணம்ஸந்தப்த ஹேம ஸந்நிப தேஹே ஸதாக்கண்டைக ரஸ ப்ரவாஹே

ஸந்தாப- ஹர த்ரிகோண –கேஹே ஸகாமேஸ்வரி ஸக்தி ஸமூஹே

ஸந்ததம் முக்தி கண்டா மணி கோஷாயமான கவாடத்வாரே

அநந்த குருகுஹ விதிதே கராங்குலி நகோதய விஷ்ணு தசாவதாரேமத்யமம்


அந்த:கரேணக்ஷு கார்முக
சப்தாதி பஞ்ச தந்மாத்ர விஸிகாத்யந்த ராக பாச

 த்வேஷாங்குஸதரகரேதி ரஹஸ்ய யோகிநீ பரே (ஸ்ரீ கமலாம்பிகே)

மங்கள உருவான சிவசக்தியே! எட்டு விதமான சியாமளை ரூபங்களில்  கிளிப்பிள்ளையை திருக்கரங்களில் ஏந்திய சாரிகா ரூபத்தில் இருப்பவளே!, ஸ்ரீகமலாம்பிகையே!  என்னைக் காப்பாற்று! காப்பாற்று!.

உலகங்களை  காத்தருள்பவளே, பிரம்ம கபாலத்தைக் கையினில் தாங்கியவளே, சூலத்தைக் கையினிலேந்தி சூலினி  துர்கையாக காட்சியளிப்பவளே, சகல உலகங்களையும் படைத்து காத்து அருளும் தாயாக தனக்கு ஒரு தாயற்ற உலகம்மையே, சித்திகளை மாலையாக அணிந்திருப்பவளே! ,ஸர்வஸித்திப்ரதாயக சக்ரேஸ்வரியாக உள்ள த்ரிபுராம்பிகையே கமலாம்பிகையே! ஒருமுறையாவது என் மேல் கருணை வைத்து பாரம்மா!. தங்க திருமேனியைக் கொண்ட பங்காரு காமாட்சியாகக் காட்சி தருபவளே, எப்போதும் அகண்ட ரஸ ப்ரவாகமாக பிரும்மானந்தத்தைப் பெருக்குபவளே, தாபத்ரயத்தைப்    (ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதி பௌதீகம்)  போக்கியருளும் மஹாகாமேஸ்வரி, மஹாவஜ்ரேஸ்வரி, மஹாபகமாலினீ, ஆகிய மூன்று ஆவரண தேவதைகளாக  ஸ்ரீசக்ரத்தின் எட்டாவது முக்கோணத்தில் உறைபவளே, காமேஸ்வரி முதலான சக்தி  தேவியர்கள் சூழ விளங்குபவளே!  முக்தி என்னும் கோட்டைக் கதவங்கள் தனது பக்தர்களுக்காக  எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன  என்ற அறிவிப்பை மணியோசையின் மூலம்  ஒலிக்கச் செய்பவளே!, அனந்த  குருகுஹன்  முருகனால்  நன்கு அறியப்பட்டவளே!, கை விரல் நகங்களிலிருந்து விஷ்ணுவின் தசாவதாரங்களைத் தோற்றுவித்தவளே.

அந்தகரணமென்னும் கரும்புவில்லில் சப்தம்,-ரூபம்-ரஸம்-கந்தம்-ஸ்பர்ஸம் எனப்படும் ஐந்து தன்மாத்ரைகளை அம்புகளாக்கி அங்கு ஏற்படும் மிக அதிகமான பற்றையும், பாசத்தையும், க்ரோதத்தையும், நீக்குவதற்காக கையினில் அங்குசம் தரித்திருக்கும் திருக்கரங்கள் உடையவளே, அதிரஹஸ்ய யோகினியாக இருப்பவளே கமலாம்பிகையே என்னை ஒருமுறையாவது கடைக்கண்ணால் பார்த்தருள்வாயாக! 

ந்த எட்டாவது  ஆவரணத்தின் சக்ரம்  சர்வ சித்திப்ரதம் ஆகும். இச்சக்ரம் (மத்ய) த்ரிகோணமாக  விளங்குகின்றதுஇச்சக்கரத்தின் நாயகி திரிபுராம்பா. இதில் அட்டித்து விளங்கும் யோகினி அதிரகசிய யோகினி. அவஸ்தை நித்யாசனம்  ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் பாணிநீ முதலான  எண்மர்  ஆவர். 


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு


                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Labels: , , , ,

Monday, July 29, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 8

ஏழாவது ஆவரணம் கற்பகாம்பாள் சரஸ்வதி அலங்காரம் 


தாமரை மலர்ச் சடை 
சென்ற வருட அலங்காரம் 

ஊஞ்சல் மண்டபத்தில் நவதானியக் கோலம் மஹா மண்டபத்தில் திருவிளையாடற் புராண வரலாறு  ***************

ஏழாவது  ஆவரணம்

ராகம்: சஹானா                                                               தாளம்:திரிபுட

பல்லவி

ஸ்ரீ கமலாம்பிகாயாம் பக்திம் கரோமி
சிரித கல்ப வாடி காயாம் சண்டிகாயாம்  ஜகதாம்பிகாயாம்            (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)

அனுபல்லவி

ராகா சந்த்ர வதநாயாம் ராஜீவ நயனாயாம்
பாகாரிநுத சரணாயாம் ஆகாசாதி கிரணாயாம்

மத்யமம்
ஹ்ரீம்கார விபிந ஹரிண்யாம் ஹ்ரீம்கார சுஸுசரீரிண்யாம்
ஹ்ரீம்கார தருமஞ்ஜர்யாம் ஹ்ரீம் காரேஸ்வர்யாம்  கௌர்யாம்     (ஸ்ரீ 
 கமலாம்பிகாயாம்)

சரணம்
ஸரீர த்ரய விலக்ஷண ஸுகதர ஸ்வாத்மாநு போகின்யாம்
விரிஞ்சீ ஹரீசான ஹரிஹய வேதித ரஹஸ்ய யோகின்யாம்
பராதி வாக்தேவதா ரூபவசின்யாதி விபாகின்யாம்
சராத்மக ஸர்வரோகஹர நிராமய ராஜயோகின்யாம்

மத்யமம்
கரத்ருத வீணா வாதிந்யாம் கமலா நகர  விநோதின்யாம்
ஸுர நர முநி ஜன மோதின்யாம் குருகுஹ வர ப்ராசாதிந்யாம்.    
     (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)

உலகத்திற்கே தாயாகவும், கோபத்தினால் சிவந்து உக்ரமுடைய சண்டிகை எனப்பெயர் உடையவளும், அடியவர்களுக்கு கற்பகச்சோலை போன்று கேட்ட வரங்களை கொடுப்பவளுமாகிய  கமலாம்பிகையை நான் பக்தி செய்து வணங்குகிறேன்.

முழுமதியை நிகர்த்த திருமுகத்தினள், கமல மலர் விழியாள், பாகன் என்ற அசுரனின் எதிரியான இந்திரன் வந்து வணங்கும் சரணங்களை உடையவள், ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களை தன்னுடைய பிரகாசத்தால் ஒளிர வைப்பவள், ஹ்ரீம் காரம் என்னும் நந்தவனத்தில்   திரியும் பெண் மான், ஹ்ரீம் என்கிற பீஜாக்ஷரத்தை தன்னுடைய மங்களகரமான சரீரமாக கொண்டவள், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரமாகிய மரத்தில் பூத்த மலர்போல் விளங்குபவள், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்திற்கே ஈஸ்வரியானவள். பொன் நிறமான வடிவுடன் கௌரி என்று அழைக்கப்படுபவள், இத்துணை பெருமை மிக்க  ஸ்ரீகமலாம்பிகையின் மீது நான் பக்தி செய்து வணங்குகிறேன்.

ஸ்தூலம்-ஸூஷ்மம்-காரணம் எனப்படும் மூன்று வகையான மேனிகளுக்கப்பால்  ஆத்ம சரீரம்  ஆனந்தமயமான உள்ளது. அப்படிப்பட்ட ஸ்வாத்மனுபவ போகமே அன்னை. சாதகனின் சிரசிற்கு மேலனுபவத்தில் சூக்கு பரையாக விளங்குபவள்.

பிரம்மா ,விஷ்ணு, மஹேஸ்வரன், ஹயக்ரீவர்   முதலானோர் அறிந்துகொண்ட  ரஹஸ்ய யோகினி அவள், பரா-பஸ்யந்தி-மத்யமா-வைகரீ ஆகிய நிலைகளின் வாக்தேவியரின் ஸ்வரூபமான வசிநீ முதலான வாக் தேவியர்களாகவும்,  சக்தி தேவியர்களாகவும் பல வகையாகப் பிரிந்து இருப்பவளும் அவளே. சராத்மக பிரபஞ்  ரோகத்தை அழிக்கும்சர்வரோகஹர சக்கரத்தில் ஆரோக்கிய ராஜயோகினியாக விளங்குபவள்,

திருக்கரங்களில் வீணையை ஏந்தி இசைப்பவளும், கமலாநகரம் என்ற திருவாரூரில் பேரானந்தத்தில் திகழ்பவளும், தேவர், மனிதர், முனிவர்களை மகிழ்ச்செய்பவளும், குருகுஹனுக்கு வரங்கள் வழங்குபளான ஸ்ரீ கமலாம்பிகையை நான் எப்போதும் பக்தி செய்து வணங்குகிறேன்.


ந்த ஏழாம் ஆவரணத்தின் சக்ரம்  சர்வ ரோகஹர சக்ரம் ஆகும். இச்சக்ரம் எட்டு முக்கோணங்களாக (அஷ்ட கோணம்)  விளங்குகின்றதுஇச்சக்கரத்தின் நாயகி திரிபுராசித்தா. இதில் அட்டித்து விளங்கும் யோகினி ரகசிய யோகினி. அவஸ்தை மனனம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் வாக் தேவியர்கள் எண்மர்  ஆவர். இக்கீர்த்தனத்தின் சிறப்புப் பலன்கள், விருப்பங்கள் ஈடேறும், ஹ்ரீம் பீஜத்தின் சக்திகள் கிடைக்கப்பெறும், ஆத்ம போதம் தெற்றென விளங்கும், வாக் தேவியர்களின்  அருளால் அறிவு நலம் மேலோங்கும்  நோய்கள் நீங்கும்,


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Labels: , , ,

Sunday, July 28, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 7

ஆறாவது ஆவரணம்  


மேற்கு மாம்பலம்  விசாலாக்ஷியம்மன் 
ஊஞ்சல் சேவை கொலு கொடி மரத்தில் கொடி ஏற்றியுள்ளனர் 

திருமயிலை   அங்காளம்மன் 

திரௌபதியம்மன் 

முண்டகக்கண்ணியம்மன்
 சரஸ்வதி அலங்காரம் 
**************


ஆறாவது ஆவர்ணம்

ராகம் - புன்னாகவராளி                                                                  தாளம் - ரூபகம்

பல்லவி

கமலாம்பிகாயாஸ்தவ  பக்த்தோஹம்  ஹம்சங்கர்யா:
ஸ்ரீகர்யாசங்கீத ரஸிகாயா   ஸ்ரீகமலாம்பிகாயா)

அனுபல்லவி

ஸுமஸர இக்ஷு கோதண்ட பாஸாங்குஸ பாண்யா: 
அதி மதுர தர வாண்யாஸர்வாண்யாகல்யாண்யா:

மத்யமம்
ரமணீய புன்னாக வராளீ விஜித வேண்யா:  (ஸ்ரீகமலாம்பிகாயா..)

சரணம்

தச கலாத்மக வஹ்நி ஸ்வரூப பிரகாஸாந்தர்த்தஸார
 ஸர்வ ரக்ஷாகர சக்ரேஸ்வர்யாதிரிதஸாதிநுத
 கசவர்கத்வயமய ஸர்வஜ்ஞாதிதஸ சக்தி ஸமேத
 மாலினி சக்ரேஸ்வர்யா:  திரிதஸ விம்ஸத்வர்ண கர்பிணீ குண்டலிந்யா:

தசமுத்ரா ஸமாராதித கௌளிந்யா;தஸரதாதி நுத குருகுஹ-ஜநக ஸிவபோதிந்யா:
தஸகரண வ்ருத்தி மரீசி நிகர்ப யோகிந்யா: (ஸ்ரீகமலாம்பிகாயா)

பக்தர்களுக்கு அளப்பரிய  செல்வத்தை அள்ளி வழங்கும், சங்கீத ரசிகையான பரமசிவனின் பத்னியுமான  கமலாம்பிகையின் பக்தன் யான்.
நான்கு திருக்கரங்களில்  மலரம்புகள், கரும்பு வில், பாசம், அங்குசம் தரித்திருப்பவள். மிகவும் இனிமையான குரல் உள்ளவள்,  சர்வன்  பரமசிவனின் பத்னி  மங்கல வடிவினள் கமலாம்பிகையின் பக்தன் யான்.

புன்னை மலர்களில் வாசம் செய்யும்  கருவண்டுகளை பழிக்கும்  கரிய கூந்தலை உடையவள், புன்னாகவராளி ராகத்திற்கும் ஆடும் ஸர்பத்தைபோல ஆடும் கூந்தல் அளாகாபாரம் உடையவளுமான ஸ்ரீகமலாம்பிகையின் பக்தன் யான்.

பத்து கலைகளை கொண்ட  அக்னி ஜுவாலையின் மத்தியில், பத்து தளமுடைய ஸர்வரக்ஷாகரம் என்னும் சக்கரத்தில் மிளிர்பவள், தேவர்களால் துதிசெய்யப்பட்ட க மற்றும் ச என்ற எழுத்துக்களான ஸர்வஜ்ஞாதி சக்திகளான பதின்மரோடு கூடிய மாலினீ ஸக்ரேஸ்வரியாக இருப்பவள்.

முப்பது மற்றும் இருபது அக்ஷரங்களை உள்ளடக்கிய குண்டலிநீ சக்தி ஸ்வரூபிணியாக இருப்பவள், தசமுத்ரா தேவியரால் துதிக்கப்படும் கௌலீனீயாக இருப்பவள், தசரதர் போன்ற பேரரசர்களால்  துதிக்கப்படுபவள், குருகுஹனை உலகுக்கு அளித்தவள், சிவபெருமானின் சிவஞானபோதம் அருளும் சிவஞான பிரதாயினீ இவளே, இந்திரியங்களின் செயல்பாடுகளின் கிரணங்கள் வடிவான நிகர்ப்ப யோகினிகளாக இருப்பவள், இவ்வளவு சிறப்புகள் பெற்ற  ஸ்ரீ கமலாம்பிகைக்கு நான் பக்தன்.

ந்த ஆறாம் ஆவரணத்தின் சக்ரம் சர்வ ரக்ஷாகர சக்ரம் ஆகும். இச்சக்ரம்  உள் பத்து முக்கோணங்களாக  விளங்குகின்றதுஇச்சக்கரத்தின் நாயகி திரிபுராமாலினி. இதில் அட்டித்து விளங்கும் யோகினி நிகர்ப்ப  யோகினி. அவஸ்தை உபதேசம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் ஸர்வஸம்க்ஷோபினி  முதலான பதின்மர் ஆவர். இக்கீர்த்தனத்தின் சிறப்புப் பலன்கள், இசை ஞானம், குரல் வளம், பேச்சாற்றல், மங்கலங்கள் பெருகும்,நோய்கள் நெருங்கா, கர்ம ஞானேந்திரியங்கள் ஆற்றலுடன் விளங்கும், மனோரதங்கள் கைகூடும். 


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

Labels: , , , ,

  • Other Articles
  • Unicode enable