Saturday, August 03, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 12

அசோக்நகர்  கருமாரி த்ரிபுரசுந்தரி ஆலயம்

அம்மனின் அலங்காரங்கள் 
ருத்ராணி ( மாஹேஸ்வரி) 

மகேஸ்வரனின் சக்தி


 இவ்வருடன் உற்சவர் அம்மன் சப்த  மாதர்களாக அருள் பாலித்தாள்.


ப்ராஹ்மி 

பிரம்மனின் சக்தி 






கௌமாரி 

குமரனின் சக்தி 




விஷ்ணு துர்க்கை 


தினமும் இரவு மேருவிற்கு விசேஷ அபிஷேகமும், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும் சிறப்பாக நடைபெற்றது. 


சரஸ்வதி பூஜையன்று 
சரஸ்வதி அலங்காரம்




விஜய தசமியன்று அஷ்ட தச புஜ 
 மகிஷாசுர மர்த்தினி  அலங்காரம் 




முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு





                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Labels: , ,

Thursday, August 01, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 11

 விஜய தசமி 


அதர்மமாம் மகிஷனை அம்பாள் வதம் செய்த நாளையே  நாம் விஜய தசமியாக கொண்டாடுகிறோம்.  நாம் ஒன்பது நாட்கள் நவராத்திரியாக  கொலு வைத்து சிறப்பாக கொண்டாடுகிறோம் . அதுவே கிழக்குப் பகுதியில் துர்கா பூஜை என்று நான்கு நாட்கள்  மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். சென்னை காளி பாரி ஆலயத்தில் துர்கா பூஜை கொண்டாடப்படுகின்றது.   கொல்கத்தா  தக்ஷினேஸ்வர் ஆலயம் போன்று அமைக்கப்பட்டுள்ள இக்காளி ஆலயத்தில் கடந்த சில ஆண்டுகளாக கொலு  வைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஒரு கருவை ஒட்டி கொலு அமைகின்றது. சென்ற வருடம் கணபதி என்ற கருவில் பல் வகை விநாயகர் பொம்மைகள் கொலு வைத்தனர் இவ்வருடம் இராமர் மற்றும் ஆஞ்சநேயர் என்ற கருவில் அமைந்துள்ள கொலு காட்சிகளை கண்டு களியுங்கள்.    

காளி அன்னை
இராமர் பட்டாபிஷேகம் 


துர்கா பூஜை

துர்கை , லக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகர், முருகன் 


திருக்கயிலாயத்திலிருந்து தாய்வீட்டிற்கு 
  பல்லக்கில் வந்த பார்வதி


துர்கா பூஜை சமயத்தில் திருக்கயிலாயத்தில் இருந்து பார்வதி தேவி பூவுலகிற்கு, அதாவது தனது தாய்  வீட்டிற்கு வருவதாக ஐதீகம். எனவே தனது மகள்களை பார்வதியாகவே கொண்டாடுகிறார்கள் இவர்கள். 



ஹனுமன்  கோலம் 



அசோக வனம் 

கண்டேன் சீதையை !


அனுமன் பிறந்தான் 


ஹிருதய கமலத்தில்  எப்போதும் சீதாராமன் 



இராம பட்டாபிஷேகம் 



தான் சுவைத்த பழங்களையே  தந்தனள் தாய் சபரி 
தருவதற்கொன்றுமில்லை தலைவனே நீ ஆதரி



கூரையில் அனுமனின் கதைகள்

******************

மங்கள கீர்த்தனம்
ராகம் – ஸ்ரீ                               தாளம் - ஏகம்

பல்லவி

ஸ்ரீகமலாம்பிகே சிவே பாஹிமாம் லலிதே
ஸ்ரீபதி விநுதே ஸிதாஸிதே சிவ ஸஹிதே (ஸ்ரீ)

சமஷ்டி சரணம்

ராகாசந்த்ரமுகி ரக்ஷிதகோலமுகி
ரமாவாணி ஸகீ ராஜயோகஸுகி

மத்யமம்

சாகம்பரி சாதோதரி சந்த்ரகலாதரி
சங்கரி சங்கர குருகுஹ பக்தவசங்கரி
ஏகாக்ஷரி – புவநேச்வரி – ஈஸப்ரியகரி
ஸ்ரீகரி – ஸுககரி –ஸ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி (ஸ்ரீ)


விஷ்ணுவாள் துதிக்கப்பட்டவளே! வெண்மை மற்றும் கருமை நிறத்தில் விளங்குபவளே! சிவனுடன் உறைந்திருப்பவளே! மங்கள ஸ்வரூபிணியே! இனிமையானவள் என்பதால் லலிதா என சிறப்புப் பெயர் பெற்றவளே!

முழுமதி போன்ற திருமுகம் உடையவளே! வாராஹீ என்ற மாத்ரு தேவதையின் தலைவியே! அலைமகளையும், கலைமகளையும் தோழியராகப் பெற்றவளே! சிவராஜ யோகத்தில் லயித்திருப்பவளே! பஞ்ச காலத்தில் பயிர்களை தழைக்கச் செய்தவளே! சிற்றிடையாளே! பிறைச் சந்திரனை  சிரசில் தரித்தவளே! சங்கரனின் துணைவியே! சங்கரன் குமரன் ஆகியவர்களின் பக்தர்களை கவர்ந்தவளே!  ஹ்ரீம் என்னும் ஏகாக்ஷர மந்திர ஸ்வரூபமாய் ஒளிர்பவளே! அகிலங்கள் யாவற்றுக்கும் நாயகியே! ஈசனுக்கு இனியவளே! ஐசுவரியங்களின் விளை நிலமே! மஹா த்ரிபுர சுந்தரி என்ற புகழ்ப்பெயருடையவளே! என்னை காத்தருளம்மா! ஸ்ரீகமலாம்பிகையே என்னைக் காத்தருள்வாய்.

இக்கீர்த்தனை அன்பர்களுக்கு கவசமாய் அமையும். 

(நவராத்திரி நிறைவு பெற்றதென்றாலும் இன்னும் சில ஆலயத்தின் படங்கள்  உள்ளன எனவே பதிவுகள் தொடரும்)


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு





                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Labels: , , ,

  • Other Articles
  • Unicode enable