Tuesday, October 29, 2013

ஆனந்த நவராத்திரி -6

அன்னையின் இன்னும் சில அற்புத  அலங்காரங்கள்

விநாயகர் வைர அங்கி தரிசனம் 

துர்க்கை அம்மன் வைர அங்கி தரிசனம் 

இரண்டு ஆலயங்களில் துர்க்கை அம்மனுக்கு வஜ்ராங்கியில் தரிசனம் கிட்டியது ( வைரம்= அமெரிக்கன் வைரம்) அந்த காட்சிகள் இந்தப் பதிவில் இடம்பெறுகின்றன்.  ஒரு ஆலயத்தில் விநாயருக்கும் சேர்த்து வஜ்ராங்கி செய்திருக்கின்றனர். அவரையும் தரிசனம் செய்கின்றீர்கள்.


ஓம் காத்யாயனாய வித்மஹே!  கன்யகுமாரி தீமஹி  |
தந்ந துர்கி ப்ரசோதயாத்  ||

சொர்ணாம்பாள் இராஜராஜேஸ்வரி அலங்காரம் 


கருமாரி அம்மன் கொலு 



சென்னை நுங்கம்பாக்கம் 
பிரசன்ன வெங்கடாசலபதி ஆலயம்
பத்மாவதி தாயார் தைர்ய லக்ஷ்மி அலங்காரம் 


இவ்வாலயத்தில் நவராத்திரியின் போது  அஷ்ட லக்ஷ்மி அலங்காரம் செய்கின்றனர்


ஜய வர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ர மயே
ஸுரகண பூஜித சீக்ர ஃபலப்ரத
ஜ்ஞான விகாஸினி சாஸ்த்ரநுதே  |
பவபய ஹாரிணி பாப விமோசநி
ஸாது ஜநாச்ரித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி
தைர்யலக்ஷ்மி ஸதா பாலய மாம்  ||




பிரஹத் சுந்தர குஜாம்பாள்   மீனாக்ஷி அலங்காரம்


 ஓம் அங்கயற்கண் அம்மை போற்றி
ஓம் அறம் வளர்த்த நாயகியே போற்றி
ஓம் மலையத்துவஜன் வாழ்வே போற்றி
ஓம் மண் சுமந்தோன் மாணிக்கமே போற்றி போற்றி.

Labels: , , , ,

ஆனந்த நவராத்திரி -5

அம்மன் கொலு தர்பார்


அசோக்நகர் சொர்ணாம்பாள் 
கருமாரி அம்மன் அலங்காரம்



தாயே கருமாரி! எங்கள் தாயே கருமாரி!
தேவி கருமாரி! துணை நீயே மகமாயி!

 மேற்கு மாம்பலம் 
விசாலாக்ஷி அம்பாள் கொலு


மேற்கு மாம்பலம் விஸ்வநாதர் ஆலய
 நவராத்திரி கலை நிகழ்ச்சியில் பரத நாட்டியம்




மகாலிங்கபுரம் பிரஹத் சுந்தர குஜாம்பாள்
 கன்னியாகுமரி அலங்காரம்


 நீலதிரைக் கடல் ஓரத்திலே நின்று
 நித்தம்  தவம் செய்யும் குமரி அன்னை தாள் போற்றி



பிரஹத் சுந்தர குஜாம்பாள்
மஹா லக்ஷ்மி அலங்காரம்


திருமகளே  திருப்பாற் கடலூடன்று தேவர் தொழ
வரு மகளே  உலகமெல்லாமும் என்றென்றும் வாழ வைக்கும்
ஒரு மகளே திருமால் உரத்தே உற்று உரம் பெரிது
தரு மகளே தமியேன் தலை மீது நின் தாளை வையே!



ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 



(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

14-17 ஸ்லோகங்கள்


 குடை- சாமரம் முதலியவற்றால்  உமையம்மைக்கு  உபசாரங்கள் செய்வித்து மரியாதை செய்வதை இந்த பதினான்காவது ஸ்லோகத்தில் ஜகத்குரு சங்கரர் அருளுகின்றார்.
லக்ஷ்மீர்-மௌக்திக லக்ஷ-கல்பித-
 ஸிதச்சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீ  ரதிச்ச சாமரவரே
 தத்தே ஸ்வயம் பாரதீ  I
வீணா-மேண-விலோசனா:ஸுமனஸாம்
  ந்ருத்யந்தி தத்ராகவத்-
பாவைராங்கிக-ஸாத்விகை:ஸ்புடரஸம்
  மாதஸ்-ததா லோக்யதாம்  ||
க்ஷ்மீ: மௌக்திக-லக்ஷ-கல்பித-
 ஸித:-சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீ  ரதி: ச சாமர-வரே
 தத்தே ஸ்வயம் பாரதீ  I
வீணாம்-ஏண-விலோசனா:ஸுமனஸாம்
 ந்ருத்யந்தி தத் ராகவத்-
பாவை: ஆங்கிக-ஸாத்விகை:
 ஸ்புட-ரஸம் மாத:! தத் ஆலோக்யதாம்  || 14

ஹே அன்னையேலக்ஷ்மிதேவிபல முத்து மணிகளால் ஆகிய வெண்பட்டுக்குடையை ஆர்வமாக தாங்கி தலைமேல் பிடிக்கிறாள்.  பிரேமையால் இந்த்ராணியும்ரதியும் இரு வெண் சாமரங்களை வீசுகின்றனர்ஸரஸ்வதி தேவியும் வீணை வாசிக்கிறாள்.  மான் விழி படைத்த மற்ற தேவ மங்கையர் ராக பாவங்களையொட்டி கை கால் அசைவுகளாலும்ஸாத்விக பாவங்களாலும் ரஸம் ததும்ப நடனம் புரிகின்றனர்.  அன்னையே இவை எல்லாம் கேட்டு மகிழலாமே!
ஸிதச்சத்ரம்-வெண்குடை, ரஸாத்-பிரேமையால், ஏண விலோசனா ஸுமனசாம்: மான்விழி படைத்த  தேவ கன்னிகைகள் ஸ்புடரஸம்- உள்ளத்தின் உணார்ச்சிகளை வெளிப்படுத்தும்.

மானசீக பூஜையின் நிறைவாக, பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து  மலையரையன் பொற்பாவையை வணங்குவதை இந்த பதினைந்தாவது ஸ்லோகத்தில் குரு புங்கவர் சங்கர தேசிகர் அருளுகின்றார். 
ஹ்ரீங்காரத்ரய-ஸம்புடேன
 மனுனோபாஸ்யே த்ரயீ-மௌலிபி:
வாக்யைர்-லக்ஷ்யதனோ தவ ஸ்துதிவிதௌ
 கோ வா க்ஷமேதாம்பிகே I
ஸல்லாபாஸ்துதயப்ரதக்ஷிண-சதம்
 ஸஞ்சார ஏவாஸ்து தே
ஸம்வேசோ மனஸஸமாதி-ரகிலம்
 த்வத்ப்ரீதயே கல்பதாம் II
ஹ்ரீம்கார-த்ரய-ஸம்புடேன
 மனுனா உபாஸ்யே த்ரயீ-மௌலிபி:
வாக்யை:-லக்ஷ்ய-தனோ!  தவ ஸ்துதி-விதௌ
 கோ வா க்ஷமேத அம்பிகே  I
ஸல்லாபாஸ்துதயப்ரதக்ஷிண-சதம்
 ஸஞ்சார: ஏவ-Sஸ்து தே
ஸம்வேசோ மனஸஸமாதி: அகிலம்
 த்வத்-ப்ரீதயே கல்பதாம் II 15
ஹே அம்பிகே! மூன்று ஹ்ரீங்காரங்களின் கூட்டால் அறிய வேண்டியவள் நீஉபநிஷத்துக்களால் அறியத்தக்கவளும் கூடஉன்னை ஸ்தோத்திரம் செய்ய எவர்தான் சக்தியுடையவர்?ஆகவேநான் பேசுவதெல்லாம் உன் ஸ்தோத்ரங்களாகவும்நான் இங்கும் அங்கும் சஞ்சரிப்பதே உன்னை பிரதக்ஷிணம் செய்வதாகவும்நான் படுத்து உறங்குவதே உன்னை நமஸ்கரிப்பதாகவும் பரிணமித்துஉனக்கு மகிழ்ச்சியை தரவல்லதாக அமையட்டும்.
த்ரயீ – மூன்று வேதங்கள், ஸம்வேச – ஓய்வு, நித்திரை

இனி வரும் இரு ஸ்லோகங்களும் பலச்ருதியாக அமைந்தவை. அதாவது இந்த ஸ்லோகத்தை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து தேவியை பூஜிப்பதால் உண்டாகும் பலன்களை குறிப்பிடுகின்றன.
ஸ்ரீமந்த்ராக்ஷர-மாலயா கிரிஸுதாம்
 யபூஜயேத்-சேதஸா
ஸந்த்யாஸு ப்ரதிவாஸரம் ஸுநியதஸ்-
 தஸ்யாமலம் ஸ்யான்மன:
சித்தாம்போருஹ-மண்டபே கிரிஸுதா
 ந்ருத்தம் விதத்தே ரஸாத்
வாணீ வக்த்ர-ஸரோருஹே ஜலதிஜா
 கேஹே ஜகன்மங்கலா II 
ஸ்ரீமந்த்ராக்ஷர-மாலயா கிரிஸுதாம்
 யபூஜயேத்-சேதஸா
ஸந்த்யாஸு ப்ரதிவாஸரம் ஸுநியத:
 தஸ்ய அமலம் ஸ்யான்-மன:
சித்த அம்போருஹ-மண்டபே கிரிஸுதா
 ந்ருத்தம் விதத்தே ரஸாத்
வாணீ வக்த்ர-ஸரோருஹே ஜலதி-ஜா
 கேஹே ஜகத்-மங்கலா II  16.

எவரொருவர்தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோஅவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றிஅவர் ஹ்ருதயத் தாமரையில் ஸ்ரீதேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள்பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள்வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.

இதிகிரிவர புத்ரீ பாத ராஜீவ பூஷா
புவன-மமலயந்தீ ஸூக்தி ஸெளரப்ய-ஸாரை: I
சிவபத மகரந்த ஸ்யந்தினீயம் நிபத்தா
மதயது கவிப்ருங்கான் மாத்ருகா-புஷ்பமாலா ||
இதிகிரிவரபுத்ரீ- பாத- ராஜீவ பூஷா
புவனம்- அமலயந்தீ ஸூக்தி- ஸெளரப்ய-ஸாரை: I
சிவபத- மகரந்த ஸ்யந்தினீ- இயம் நிபத்தாமதயது
கவிப்ருங்கான் மாத்ருகா-புஷ்பமாலா || 17
 கிரி ராஜா தனயை என்றறிந்த அன்னையின் மந்த்ராக்ஷரம் பொதிந்த புஷ்பமாலைநறுமணத்தால் உலகை தூய்மை பெறச் செய்துஅன்னையின் திருவடிகளுக்கு அணிகலனாக அமைந்துள்ளதுசிவனின் திருப்பாதங்களின் மகரந்தத்தையும் பெருக்குவதாக அமைக்கப்பட்டுள்ளதுஆகவே கவிகளாகிய தேன் வண்டுகளையும் எக்களிப்படையச் செய்யட்டும்.
 ஸ்ரீ மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று .

Labels: , , ,

ஆனந்த நவராத்திரி -4

திருமயிலை வெள்ளீஸ்வரம்  
காமாக்ஷி அம்பாள் கொலு தர்பார் காட்சி

 வெள்ளீஸ்வரம் ஐதீகம்
(பின் புறத்தில் அம்மனுடன் கொலுவிருக்கும் அலை மகள்)

( மாபலி  சக்ரவர்த்தி,  வாமனருக்கு மூன்றடி மண் தானம் செய்த போது அதை தடுக்க முயன்று  கண் இழந்த சுக்கிரன்(வெள்ளி) பின்னர் குருந்த வனத்தில் சிவபெருமானை நோக்கி தவம் செய்து ,  இழந்த கண்ணை பெற்றார். எனவே வெள்ளிக்கு அருளிய  இறைவன் வெள்ளீஸ்வரர் என்னும் திருநாமம் பெற்றார்.)


அன்ன வாகனத்தில் அன்னை காமாக்ஷி

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது பாடகத்தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் மிச்சையா யிழைத்திட்ட பாத சிலம்பினொலியும்

முத்து மூக்குத்தியும் ரத்தினப்பதக்கமும் மோகன மாலையழகும்
முழுதும் வைடூரியமும் புஷ்பராகத்தினால்முடிந்திட்ட தாலியழகும்

சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ் செங்கையிற் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலா மொலிவுற்ற சிறு காது கொப்பினழகும்

அத்திவரதன் தங்கை  சக்திசிவ ரூபத்தை யடியனாற் சொல்லத் திறமோ
அழகான மயிலையில் புகழாக வாழ்ந்திடு மம்மை காமாட்சி யுமையே 




 எழிலான அன்ன வாகனத்தில் அன்னை  காமாக்ஷி



 அம்மனுடன் கொலுவிருக்கும்  கலைமகள்


சென்னை மகாலிங்கபுரம் 
பெரிய குன்று முலையம்மை 
இராஜராஜேஸ்வரி அலங்காரம்


௮ம்பா சாம்பவி சந்த்ரமௌளிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளி ஹைமவதி சிவா-த்ரிநயனீ காத்யாயனி பைரவீ  |
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபீ பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ   ||



ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம்  செய்வது அம்பாளுக்கு நாம்  புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும்.  இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி  மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது  சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த  ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப்  அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.

இப்பதிவில் பதினொன்றாவது ஸ்லோகம் முதல் பதிமூன்றாவது ஸ்லோகம் வரை காணலாம் அன்பர்களே.

இந்த பத்தாவது ஸ்லோகம்  தீபம்  ஏற்றி அன்னையின் ஸந்நிதானத்தை  கண்டு வணங்குவதற்கு ஏதுவாக  பிரகாசமாக்குவதை விளக்குகின்றது.
க்ஷ்மீ- முஜ்ஜ்வலயாமி ரத்ன-நி்வஹோத்-
 பாஸ்வத்தரே மந்திரே
மாலாரூப- விலம்பிதைர்-மணிமய-
 ஸ்தம்பேஷு ஸம்பாவிதை:  I
சித்ரைர்- ஹாடக-புத்ரிகாகரத்ருதைர்
 கவ்யைர் க்ருதைர் வர்த்திதை:
திவ்யைர் தீபகணைர்- தியா கிரிஸுதே
 ஸந்துஷ்டயே கல்பதாம் II
க்ஷ்மீம்- உஜ்வலயாமி ரத்ன-நிவஹ- உத்
பாஸ்வத்தரே மந்திரே
மாலா-ரூப விலம்பிதை:மணிமய
ஸ்தம்பேஷு ஸம்பாவிதை:  I
சித்ரை: ஹாடக-புத்ரிகா-கர-த்ருதை:
 கவ்யை: க்ருதைவர்த்திதை:
திவ்யை: தீபகணை: தியா கிரிஸுதே!
ஸந்துஷ்டயே கல்பதாம் II   10.

இரத்தின கற்கள் இழைத்த உனது திருக்கோவிலில் மாலை போல் தொங்குகின்றவையும்இரத்தினமயத் தூண்களில் நிழலாகத் தெரிகின்றனவையும்பலவித தங்கப் பெண் பதுமைகளால் கையில் ஏந்திய வண்ணம் என்னும் பலவித   பசுநெய் விளக்குகளால் மனதளவில் அழகை கூட்டுவிக்கிறேன்.  மலை மகளே அது உன்னை மகிழ்விக்கட்டும்.
லக்ஷ்மீம்- பிரகாசத்தை, ஹாடக புத்ரிகா_ தங்கப் பதுமை

.ஆதி பராசக்திக்கு பலவித  சித்ரான்னங்கள் நைவேத்யம் செய்வதை ஆச்சார்யர்  இந்த பதினொன்றாவது   ஸ்லோகத்தில் அருளுகின்றார்.

ஹ்ரீங்காரேச்வரி தப்த-ஹாடக-க்ருதை:
ஸ்தாலீ- ஸஹஸ்ரைர் ப்ருதம்
திவ்யான்னம் க்ருத-ஸூப-சாக-பரிதம்
 சித்ரான்ன-பேதம் ததா I
துக்தான்னம் மதுசர்க்கரா-ததியுதம்
மாணிக்ய-பாத்ரே ஸ்திதம்
மாஷாபூப-ஸஹஸ்ரமம்ப ஸபலம்
நைவேத்ய-மாவேதயே II 
ஹ்ரீம்கார ஈச்வரி! தப்த-ஹாடக-க்ருதை:
ஸ்தாலீ- ஸஹஸ்ரைர் ப்ருதம் திவ்ய அன்னம்
க்ருத-ஸூப-சாக-பரிதம் சித்ரான்னபேதம் ததா I
துக்த அன்னம் மது-சர்கரா-ததி-யுதம் மாணிக்ய-
பாத்ரே ஸ்திதம் மாஷ-ஆபூப-ஸஹஸ்ரம் அம்ப!
ஸபலம் நைவேத்யம் -ஆவேதயே II 11.

ஹே ஹ்ரீங்காரேச்வரித் தாயேஉருக்கிய தங்கத்தால் செய்யப்பட்ட பல கிண்ணங்களில் பரிமாறப்பட்டுள்ள நைவேத்தியம் அனைத்தையும் நிவேதனம் செய்கிறேன்நெய்யும் பருப்பும் கலந்து தயாரித்த கறி வகைகளும்,  சித்ரான்னங்களும்தயிர்தேன்சர்க்கரை சேர்த்து மாணிக்கம் பதித்த பாத்திரத்தில் இருக்கும் பாலன்னம்ஆயிரம் வடைகள் இப்படி நைவேத்தியம் இங்கு பாவிக்கப்படுகிறது.
ஸூப-சாக – பருப்பும் காய்கறியும்
அம்மனுக்கு தாம்பூலம் அளித்து மரியாதை செய்வதை  ஜகத் குரு ஆதி சங்கரர் இந்த பன்னிரண்டாவது ஸ்லோகத்தில் அருளுகின்றார்.

ஸச்சாயைர்-வரகேதகீதல-ருசா
 தாம்பூலவல்லீதலை:
பூகைர்பூரிகுணைஸுகந்தி மதுரை:
 கர்ப்பூர கண்டோஜ்வலை:  I
முக்தாசூர்ண விராஜிதைர் பஹுவிதைர்-
 வக்த்ராம் புஜா மோததிதை:
பூர்ணா ரத்ன-கலாசிகா தவமுதே
 ந்யஸ்தா புரஸ்தா-துமே II

ஸச்சாயை: வர-கேதகீ-தல-ருசா
 தாம்பூல-வல்லீ-தலை:
பூகை: பூரி-குணைஸுகந்தி-மதுரை:
 கர்ப்பூர- கண்ட -உஜ்ஜ்வலை:  I
முக்தா-சூர்ண-விராஜிதை: பஹுவிதை:
 வக்த்ர அம்புஜ ஆமோதிதை:
பூர்ணா ரத்ன-கலாசிகா தவ
 முதேந்யஸ்தா புரஸ்தாத்-உமே II  12

ஹே உமை அன்னையே! உனது எதிரில் இதோ முழுவதும்  ரத்ன கற்கள் பதிந்த வெற்றிலை பெட்டி வைத்துள்ளேன்அது உன் மகிழ்ச்சிக்காகவே வைக்கப்பட்டுள்ளதுஅந்த பெட்டியில் நல்ல தாழை மடல்கள் போன்ற (நிறமானவெற்றிலைகளும்இனிய மனம் கொண்ட பாக்குத் துகள்களும்பச்சை கற்பூரம்சுண்ணாம்பு கலந்து திருவாய்க்கு மணம் உண்டாக்கும் விதத்தில் அனைத்து பொருட்களும் நிரம்பியுள்ளன.
வரகேதகீதலருசா- தாழை மடல்கள் போன்ற, பூக- பாக்கு, கலாசிகா- தாம்பூலத் தட்டு.

மலையரையன் பொற்பாவைக்கு கற்பூர ஆரத்தி (தீபாரதனைசெய்வதை இந்த பதிமூன்றாவது ஸ்லோகத்தில் ஆச்சார்யர் அருளுகின்றார்.
கன்யாபிகமனீய-காந்திபி-
ரலங்காராமலாரார்திகா-
பாத்ரே மௌக்திக சித்ர-
பங்க்தி-விலஸத்கற்ப்பூர தீபாலிபி:  I
தத்தத்-தால-ம்ருதங்க கீத-ஸஹிதம்
ந்ருத்யத் பதாம்-போருஹம்
மந்த்ராராதன-பூர்வகம் ஸுநிஹிதம்
நீராஜனம் க்ருஹ்யதாம்  ||
கன்யாபிகமனீய-காந்திபி:
அலங்கார- அமல ஆராத்ரிகா-
பாத்ரே மௌக்திக சித்ர-
பங்க்தி-விலஸத் கற்பூர தீபாலிபி:  I
தத்தத்-தால-ம்ருதங்க கீத-ஸஹிதம்
ந்ருத்யத் பதாம்-போருஹம்
மந்த்ராராதன-பூர்வகம் ஸுநிஹிதம்
நீராஜனம் க்ருஹ்யதாம்  ||  13

அழகிய பெண்கள்அலங்கார ஆரத்தி பாத்திரத்தில் வரிசையாக முத்துக் கோர்த்தாற் போல கற்பூர தீபங்களை ஏந்தியவர்களாய்மிருதங்கத்தின்  தாள ஒலிக்கு ஏற்றார் போல் ஸங்கீதமும்நாட்டியமும் சேர்ந்து செய்பவர்களாய்மந்திரங்களுடன் காட்டும் கற்பூர நீராஜனத்தை ஏற்றுக் கொள்ளலாமே

                                                                                          அம்மன் அலங்காரங்களும், ஸ்தோத்திரமும் தொடரும்...........

Labels: , ,

  • Other Articles
  • Unicode enable