Sunday, October 16, 2016

விஜய தசமி

சொர்ணாம்பாள் இராஜராஜேஸ்வரி 
அலங்காரம்


அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே
பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி
ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே!


இமவான் புத்ரியும், ஜடா முடியுடன் திகழும் சிவ பெருமானின் துணைவியும், மஹிஷாசுரனை சம்ஹரித்தவளுமான அன்னையே!
மகிஷாசுரமர்த்தினியே! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி!
தாயே! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
எங்களை காப்பாற்றுவாயாக.




விஜய தசமியான இன்று ஸ்ரீ துர்க்கையை துதிக்க துர்க்கா சப்த ஸ்லோகி மற்றும் துர்க்கா ஸுக்தம் உரையுடன்.


ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகீ
ஜ்ஞாநிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா

பலா-தாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி (1)

ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜ“வன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹ’க்கும்படி செய்கின்றாள்.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி

தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா

ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா (2)

ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.

சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? ( வேறு ஒருவருமில்லை)

இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.


பிரஹத் சுந்தர குசாம்பாள் 
சிவபூஜை செய்யும் அலங்காரம்

ஸர்வ மங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே

சரண்யே த்ர்யம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்து தே (3)

எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

சரணாகத-தீநார்த்த-பரித்ராண-பராயணே

ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்து தே (4)

தன்னை சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

மேலே கண்ட இரண்டு ஸ்லோகங்களின் பாராயணத்தினால் சகல காரியசித்தியும் பரிபூரணமாக உண்டாகும்.


காமாக்ஷியம்மன் கம்பாநதிக் காட்சி


ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமந்விதே

பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே (5) 

அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும் எல்லாவற்றுக்கும் ஈசுவரியாயும் ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான ஏ தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ தேவி! உனக்கு நமஸ்காரம்.
ரோகாந்-அசேஷாந்-அபஹம்ஹி துஷ்டா

ருஷ்டா து காமாந் ஸகலாந்- அபீஷ்டாந்

த்வாம்-ஆஸ்ரிதாநாம் ந விபந்-நராணாம்

த்வாம்-ஆஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி (6)

உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்து விடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் உண்டாகும்.

ஸர்வா-பாதா-ப்ரஸமநம் த்ரைலோக்யஸ்ய- அகிலேஸ்வரி

ஏவ மேவ த்வயா கார்யம்-அஸ்மத்வைரி-விநாசனம்(7)

எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி இவ்விதமே மூவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.

இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய பயன்கள் எல்லாம் அவசியமானதால் ஸர்வேஸ்வரியின் திருவருளால் அவற்றைப் பெற இந்த "ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகியின்" பாராயணம் அனைவருக்கும் மிக அவசியம்.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

* * * * * *

கற்பகவல்லி சிவபூசை செய்யும் கோலம் 


 துர்கா ஸூக்தம்


ஜாதவேதஸே ஸுநவாம ஸோமமராதீயதோ நிதஹாதி வேத:

ஸ ந: பர்ஷ ததி துர்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்நி
(1)


அக்னி வடிவமாக விளங்கும் சக்திக்கு ஸோம ரசத்தை பிழிந்து தருவோம், அனைத்தையும் அறியும் அந்த சக்தி எனது பகைமைகளை பொசுக்கட்டும். அது எனது எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும், கப்பலால் கடலைக் கடப்பது போல பாவக் கடலில் இருந்து அந்த அக்னி சக்தி நம்மை அக்கரை சேர்க்கட்டும்.

தாமக்நிவர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் வைரோசநிம் கர்மபலேச்ஷு ஜுஷ்டாம்

துர்காம் தேவீகும் சரண-மஹம் ப்ரபத்யே ஸுதரஸி தரஸே நம: (2)

செந்தீ வண்ணத்தினளும், தனது ஒளியால் எரிப்பவளும், ஞானக்கண்ணால் காணப்பட்டவளும், கர்ம பலனை கூட்டி வைப்பவளுமான துர்கா தேவியை நான் சரணமடைகின்றேன். பிறவிக்கடலை எளிதில் கடத்துவிப்பவளே! கடத்துவிக்கும் உனக்கு நமஸ்காரம்.

அக்நே த்வம் பாரயா நவ்யோ அஸ்மாந் ஸ்வஸ்திபிரதி துர்காணி விஸ்வா.

பூஸ்ச ப்ருத்வீ பஹுலா ந உர்வீ பவா தோகாய தநயாய ஸம்யோ: (3)

அக்னி சக்தியே போற்றத்தக்க நீ எங்களை நல்ல உபாயங்களால் எல்லா ஆபத்துகளின்றும் கரையேற்றுவிக்க வேண்டும். எங்களுக்கு வாசஸ்தலமும், விளை பூமியும் நிறைய அருள வேண்டும். புத்திரர்களும், பௌத்திரர்களும் அளிக்க வேண்டும்.


பூக்கோலம்

விஸ்வாநி நோ துர்கஹா ஜாதவேதஸ்-ஸிந்தும் ந நாவா துரிதா-திபர்ஷி

அக்நே அத்ரிவந் மநஸா க்ருணோ ஸ்மாகம் போத்யவிதா தநூநாம் (4)
ஆபத்தை போக்கும் அக்னி சக்தியே கப்பல் கடலைக் கடப்பது போல எங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் எம்மை கடத்துவிப்பாய். அக்னி சக்தியே அத்ரி மஹரிஷ’யைப்போல் அனைவரும் இன்புறுமாறு மனதார அனுகிரகித்துக் கொண்டும் எங்களுடைய உடலை இரக்ஷ’த்துக்கொண்டும் இருக்க வேண்டும்.


ப்ருதநா ஜிதகும் ஸஹமாந-முக்ர-மக்னிகும் ஹுவேம பரமாத்-ஸதஸ்தாத்

ஸ ந: பர்ஷததி துர்காணி விஸ்வா-க்ஷாமத் தேவோ அதி துரிதா-யக்நி: (5)

எதிரிகளின் சேனைகளை வெல்பதும், அடக்குவதும், உக்கிரமானவளுமான அக்னி சக்தியை பரமபதத்திலிருந்து அழைக்கின்றேன். இச்சக்தி எல்லா ஆபத்துக்களையும் போக்குவதாக. அக்னி தேவன் நமது பாவங்களை போக்கி குற்றங்களை மன்னிக்கட்டும்.



ப்ரத்நோஷிக மீட்யோ அத்வரேஷு ஸநாச்ச ஹோதா நவ்யஸ்ச ஸத்ஸி

ஸ்வாஞ்சாக்நே தநுவம் பிப்ரயஸ்மபயம் ச சௌபகமாயஜஸ்வ
(6)



அக்னியே யாகங்களில் போற்றப்பெறும் நீ இன்பத்தை வளர்க்கின்றாய். கர்ம பலனை அளிப்பதும் ஹோமத்தை செய்வதும் ஸ்தோத்திரம் செய்யப்படும் நீயே ஆகின்றாய். அக்னி சக்தியே உனது உடலையும் ஹவிஷ’னால் இன்புற செய்து எங்களுக்கும் எல்லா சௌபாக்கியங்களையும் அருள்வாயாக.



கோபிர்ஜுஷ்ட-மயுஜோ நிஷிக்தம் தவேந்த்ர விஷ்ணோ-ரநுஸஞ்சரேம

நாகஸ்ய ப்ருஷ்ட மபிஸம்வஸாநோ வைஷ்ணவீம் லோக இஹ மாதயந்தாம் (7)



இந்திரனிடம் விளங்கும் சக்தியே! பாவத்தொடர்பின்றி பாவமான பொருட்களைக்கூட அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு எங்கும் பரவி நிற்கும் உன்னை சேவிக்கின்றேன். சுவர்கத்தின் உச்சியில் வசிக்கும் தேவர்கள் விஷ்ணு பக்தனான என்னை இவ்வுலகில் இருக்கும் போது பேரின்பத்திற்குரியவனாக்குதல் வேண்டும்.




ஆளுடையபிள்ளைக்கு முத்துப்பந்தல் அருளிய லீலை 




ஓம் காத்யாயநாய வித்மஹே கந்யகுமாரி தீமஹி

தந்நோ துர்கி: ப்ரசோதயாத் (காயத்ரீ)

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:



கன்னியாகவும், குமரியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றோம். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி பரமேஸ்வரனை மணந்த அவளை வழி படுகின்றோம். அந்த துர்கா தேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டும்.
*************



ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 


திருமயிலை ஐதீகம் கொலு

கோதற்ற மெய்ஞ்ஞானபோத சிவானந்த கோலாகலச்சீலர்பால்கொத்தடிமை செய்தவர்கள் சொற்படி நடந்து பல குற்றங்களுங்களைந்து





சூதற்ற நெஞ்சனாய் ஆசைப்பிசாசைத் துரத்தி ஐம்புல வேடராம்துட்டரை அடக்கியொரு துக்கமில்லா ஞானசுக நிட்டை சேர்வதென்றோ





நாதத்துமைம் பூத பேதத்து எண்பத்துநாலு லட்சத்துமடியார் நல்லிதயத்தும் அறுசமயத்தும்மறுவற்று நானெனும் பேர்படைத்து,




வேதத்துமுறை பவனிடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க் குழல்வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (10)

பொருள்: குற்றமற்ற ஞானம்பெற்ற சிவானந்தர் அடியார்களிடம் சேர்ந்து அவர்களுக்கு சேவைகள் செய்து, அவர்கள்  சொல்லியபடி நடந்து, குற்றங்களையெல்லாம் நீக்கி, கள்ளமில்லாத உள்ளத்தினாய், ஆசைகளை களைந்து, அலைக்கழிக்கின்ற ஐம்புலன்களையும் அடக்கி, துக்கமில்லாத நிஷ்டை கூடுவது என்றோ, அம்மா கற்பகவல்லியே! நாதம், பிந்து கலைகளிலும், ஐம்பூதங்களிலும், எண்பத்துநான்கு லட்சம் ஜீவராசி வர்க்கங்களின்  இதயத்திலும், ஆறு சமயங்களிலும், பரிசுத்தமான வேதங்களில் உட்பொருளான சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட  அமுதானவளேசோலைகள் நிறைந்த திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளேதாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே!   கற்பகவல்லியே!    
********************




9 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தபின் கற்பகவல்லி 
யதாஸ்தானம் திரும்புகின்றாள்

புரட்டாசி திருவோணத்தன்றுதான் (விஜயதசமி) திருமலையப்பன் 9 நாள் பிரம்மோற்சவம் கண்டருளி சக்கரஸ்நானம்( தீர்த்தவாரி) கண்டருளுகின்றார்.

விஜய தசமி என்பது தச ஹரா அதாவது அஹங்காரம், அமானத்வா(கொடுமை), அநியாயம், காம, குரோத, லோப, மத, மாச்சர்யம், மோகம்,  தன்னலம் ஆகிய பத்து துர்க்குணங்களை வென்று நல்ல வழியில் வாழ்வதையும். தீமையை,   நன்மை வெல்வதையும் குறிக்கின்றது. 

இப்பதிவுடன் நவராத்திரி அம்மன் தரிசனம் நிறைவுற்றது. அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும். வந்து தரிசித்த அனைவருக்கும் நன்றி. 


முந்தைய பதிவு



Labels: , , ,

நவராத்திரி அம்மன் தரிசனம் -9

சரஸ்வதி பூஜை 

காளியன்னை

பவதாரிணி காளிதேவி

நவராத்திரியின் நிறை நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைமஹா நவமி நாளான இன்று   கலைகளின் தாயாகிய சரஸ்வதி தேவியாய் அம்பிகை திகழ்கின்றாள். நாத வீணை தாங்கி, வெள்ளை கலை உடுத்து வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சகல கலா வல்லி சொரூபமாக இன்று தேவியை அலங்கரித்து தியானித்து பூஜிக்க கல்வி ஞானம் பெருகும், உத்யோக உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே ஸதா||

ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸுதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் கரை:
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதி தேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி: பாமினீம் பரமேஷ்டின:

சதுர்புஜாம் சந்த்ரவர்ணாம் சதுராரன வல்லபாம்
நமாமி தேவி வாணீத்வாம் ஆச்ரிதார்த்த ப்ரதாயினீம்

பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:


படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ் பூந்தாமரை போல் கையும்- துடி இடையுங்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லும் சொல்லாதோ கவி



************************

சுற்றிச்சுழலை பாதுகாக்க வேண்டும் என்று கூறும்
 மர வேரால் ஆன விநாயகர் 



பள்ளி கொண்ட சிவன் 


மஹா நவமியான இன்று முழு மனத்துடன் ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் அம்பாளை தியானித்து ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை செய்பவர்கள் அந்த அன்னையின் திருவடிகளை அடைவர் என்பது திண்ணம்.

********************

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அன்னையை பத்து வயது குழந்தையாக பாவித்து சுபத்ரா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் சர்வ மங்களம் உண்டாகும் . இன்றைய ஸ்லோகம்


ஸுபத்ரபணிச பக்தானாம் குருதே பூஜிதா ஸதா அபத்ர
நாசினீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம் ||

(தன்னை பூஜை செய்பவர்களுக்கு மங்களைச் செய்து அமங்கலங்களை எந்த    சக்தி நீக்குகிறதோ அந்த சுபத்திரையை வணங்குகிறேன்.)


பல்லக்கில் விநாயகர் 

  




                                                                                     ஸித்திதாத்ரி துர்க்கா                                               


நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று நவதுர்க்கைகளில் சித்திதார்த்தியாக வழிபடுகின்றோம். தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள். சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்.

கைலாயத்தில் சிவபெருமான் மஹா சக்தியை வழிபட்டு எல்ல ஸித்திகளையும் பெற்றார். அதற்கு நன்றிக் கடனாகத் தன்னுடய உடலில்   பாதி பாகத்தை  தேவிக்குக்  கொடுத்தார்.  இதனால்  சிவபெருமனும்,                          அர்த்த நாரீஸ்வரர்" என்று புகழைடைந்தார். இந்த அவதார ரூபத்தை எல்லாக் கடவுளரும், ரிக்ஷிமுனிகளும், சித்தர்களும், யோகிகளும், பக்தர்களும் வழிபடுகிறார்கள்.

சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம்.

ஸித்த கந்தர்வ யக்ஷாத்யை: அஸிரைரபி |
ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||

(சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், தேவர் கூட்டங்கள் எப்போதும் வழிபடும் சித்திதாயினி துர்க்கா அடியேனது எல்லா செயல்களிலும் வெற்றியை வழங்கட்டும்.) 


நிர்குணா யா ஸதா நித்யா வ்யாபிகா அவிக்ருதா சிவா |
யோக கம்யா அகிலாதாரா துரீயா யா ச ஸம்ஸ்த்துதா ||

தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |
மஹாலக்ஷ்மி: ஸரஸ்வதீ மஹாகாளீதி ச ஸ்திரிய: ||

               தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் || 

படைக்கும் பிரம்மா, காக்கும் மஹா விஷ்ணு, சம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி, மஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர். 

**********************

கருமாரி திரிபுரசுந்தரி
அஷ்வாரூடா அலங்காரம்
***********
ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

மாயா ஜனனக்கடற்காவனோ பிணிமலைக்காவனோவருந்தும் வாறனைச் சமுசார வேதனைக்காவனோவறுமைச்சனிக்காவனோ,

ஓயாத கோபக்கனற்காவனோகெட்டவொன்னலர் பகைக்காவனோஒழியாத சஞ்சலப் படுகுழிக்காவனோஊழ்வினை தனக்காவனோ,

நீயா தெரித்தென்னைப் பாதுகாத்தருள் செய்து நெடுநாட்படும் பாடெல்லாம்,
நீக்கியழியாத சுகமெய்தச் செய்தாலன்றி நீச்சுநிலை யில்லையம்மா,

வீயாத முக்கணத்திடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க் குழல்வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (9)

பொருள்: அடியேன் மீண்டும் மீண்டும் பிறந்து உழல்வேனோ, நோய் வந்து வருந்துவேனோ, வருத்துகின்ற இந்த சம்சார வேதனைக்காவனோ, வறுமையில் உழல்வேனோ, கடுங்கோபத்தால்  துன்பமுறுவேனோ, பகைவர்களால் துன்பமுறுவேனோ, சஞ்சல மனத்தால் துன்பமுறுவேனோ, துரத்தும் ஊழ்வினையால் வரும் துன்பங்களினால் உழல்வேனோ  தெரியவில்லை. அம்மா கற்பகவல்லியே! . நீ ஆதரித்து என்னை பாதுகாத்து நாயேன் நெடுநாட்களாக படும் இத்துன்பங்களையெல்லாம் போக்கி சுகம் பெற செய்தாலின்றி வேறு புகலில்லை அம்மா. யாராலும் வெல்ல முடியாத முக்கண்ணை உடைய சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட  அமுதானவளேசோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளேதாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே!  கற்பகவல்லியே!   


முந்தைய பதிவு                                                                                                                                  அடுத்த பதிவு   


                                                                                                                                               அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

Labels: , , , , ,

நவராத்திரி அம்மன் தரிசனம் -8

சொர்ணாம்பாள் மீனாக்ஷி
அலங்காரம் 



மஹா அஷ்டமி என்றும் துர்க்காஷ்டமி என்றும் அழைக்கப்படும் எட்டாவது நாளான இன்று அம்மையை நாம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றோம். இன்று வீட்டில் அன்னையை மகிஷாசுரமர்த்தினியாக அலங்கரித்து வழிபட காரிய வெற்றியும், சகல வியாபார அனுகூலங்களும் உண்டாகும். இன்று விரதம் இருப்பது மிகவும் உத்தமமானது.

ஸர்வ ஸ்வரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே!
பயேப்யஸ் -த்ராஹி-நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!

சமஸ்த சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும், எல்லாவற்றிக்கும் ஈஸ்வரியும், ஸமஸ்த சக்திகளும் கூடியவளுமான ஏ தேவி! துர்கே! எங்களை பலவித பயங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ! துர்க்கா தேவி உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்

                                                                *****************




அன்னைக்கு மிகவும் உகந்த மஹா அஷ்டமிநாளான நவராத்திரியின் எட்டாம் நாள் அன்னையை ஒன்பது வயது குழந்தையாக பாவித்து துர்க்கா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் பயம் நீங்கும் . இன்றைய ஸ்லோகம்

துர்க்காத்ராபதி பக்தம்யாஸ தா துர்க்கார்த்த நாயினீ
 துர்ஜுஷ்யாஸர்வதேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம் || 

(துர்க்கதியைப் போக்குபவளாய்தேவர்களாலும் அறிய முடியாதவளாய் பக்தர்களைக் 
காப்பவளாய் எந்த சக்தி விளங்குகிறதோ அந்த துர்கா தேவியாகிய சக்தியை வணங்குகிறேன்.) 




*************

மஹா கௌரி துர்க்கா

(எல்லோருக்கும் அருளும் வண்ணம் தலையை சாய்த்து அன்னை ஒயிலாக தரிசனம் தரும் அழகை என்னவென்று சொல்ல)


நவராத்திரியின் எட்டாம் நாள் நவதுர்கைகளில் அன்னையை வெள்ளை ரிஷபத்தில் மேலேறி பவனி வரும் மஹா கௌரியாக வழிபடுகின்றோம்.

தூய உள்ளம், பொன்னிற மேனி , வெண்பட்டு ஆடை, ஜொலி ஜொலிக்கும் தங்க நகைகளோடு காட்சி தருபவள் மகா கௌரி. காளையை வாகனமாகக் கொண்டு உடுக்கை சூலத்தோடு காட்சி கொடுக்கும் மகாகௌரியின் மேனி காட்டில் சிவபெருமானை மணக்க தவமிருந்த போது கருத்தது. சிவபெருமான் கௌரியின் மேனியை கங்கையால் சுத்தம் செய்ததாகவும், மீண்டும் மகாகௌரி பொன்னிற மேனியைப் பெற்றதாகவும் கதைகள் சொல்லுகின்றன.

பக்தர்களின் குறைகள் தீர்த்து வைக்கும் மகாகௌரி என்றென்றும் சந்தோசத்தை அள்ளித் தருகிறாள். மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். சந்திரனைப் போன்ற வெண்மை நிறத்தவளாக வணங்கப்படுகின்றாள் மஹா கௌரி. 16 வயது கன்னிகையாக சிவபெருமானை மணப்பதற்கு முன்பான பருவம் இது. மஹா கௌரியை தூயவளாக சிவந்த வர்ணத்தவளாக வழிபடுகின்றோம்.


ஸ்வேத வ்ரூக்ஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதராஸுசி |
மஹாகௌரி சுபம் த்த்யாத் மஹாதேவ ப்ரமோத்தா ||

(வெள்ளை ரிஷபத்தில் ஏறி தூய வெள்ளை பட்டாடை உடுத்தி தூயவளாகவும், சிவபெருமானுக்கு எப்போதும் ஆனந்தம் அளிப்பவளுமான மஹா கௌரி துர்க்கா அடியேனுக்கு எல்லா மங்களங்களையும் அருளட்டும்.)

****************

சென்னை காளி  கோவில்  துர்கா பூஜை 


மலையன்னை பார்வதி நவராத்திரி சமயத்தில்  திருக்கயிலாயத்தில் இருந்து பூலோகத்திற்கு தாய் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். எனவே திருக்கயிலாயக் காட்சி. 


ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு Themeல் கொலு அமைக்கின்ற்னர். இந்த   வருடம்  கொலுவின் நாயகர் விநாயகர். 




பிள்ளையார்க் கோலம்

***************

ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

ஏதென்று சொல்லுவேனானாலுமம்மம்மா என் கொடுமை யெங்கு மில்லைஇல்லறம் துறவறம் இரண்டிற்கும் ஆகாமல் யாதினுங்கடைய னாகித்

தீதென்றேசெய்கைகளனைத்தையும் செய்து வெஞ்சினமழுக் காறவாவாம்சிக்கினுட்சிக்கி வறுமைக் குழியில் வீழ்ந்து நற்செயலுக்கயலுமாகிப்

போதென்று மூன்றிலொரு போதேனு முன்னடியர் பொன்னடிக் காட்செய்திடாப் புன்மையே னொருகாலம் நன்மை செய்துய்வனோ பொன்பூத்த வெள்ளி மலையில்

மீதென்று உரைபவனிடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க் குழல்வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (8)

பொருள்: இல்லறம் துறவறம் இரண்டிலுமே தோற்றுப் போய் திரியும் கொடுமையை என்னவென்று சொல்லுவேன் அம்மா , நற்செயல்களையெல்லாம் விடுத்து , தீச்செயல்களை செய்து கொண்டு, கடுங்கோபம், பொறாமை, ஆசை என்னும் குணங்களால் கட்டுண்டு வறியனாக் உழலும் நாயேன், மூன்று சந்திகளில் ஒரு சந்தியிலாவது உன் அடியார்களின் திருவடிகளை அண்டாத இழியேன் நன்மை  செய்து உய்வேனோ அம்மா கற்பகவல்லியே! வெள்ளிப் பனி மலையாம் திருக்கயிலாயத்தில் உறைகின்ற சிவபெருமானின் இடப்பாகம்  கொண்ட  அமுதானவளேசோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளேதாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   


முந்தைய பதிவு                                                                                                                               அடுத்த பதிவு   


                                                                                                                                               அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

Labels: , , ,

  • Other Articles
  • Unicode enable