நவராத்திரி அம்மன் தரிசனம் -9
சரஸ்வதி பூஜை
காளியன்னை
பவதாரிணி காளிதேவி
நவராத்திரியின் நிறை நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. மஹா நவமி நாளான இன்று கலைகளின் தாயாகிய சரஸ்வதி தேவியாய் அம்பிகை திகழ்கின்றாள். நாத வீணை தாங்கி, வெள்ளை கலை உடுத்து வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சகல கலா வல்லி சொரூபமாக இன்று தேவியை அலங்கரித்து தியானித்து பூஜிக்க கல்வி ஞானம் பெருகும், உத்யோக உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸுதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் கரை:
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதி தேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி: பாமினீம் பரமேஷ்டின:
சதுர்புஜாம் சந்த்ரவர்ணாம் சதுராரன வல்லபாம்
நமாமி தேவி வாணீத்வாம் ஆச்ரிதார்த்த ப்ரதாயினீம்
பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை போல் கையும்- துடி இடையுங்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி
************************
சுற்றிச்சுழலை பாதுகாக்க வேண்டும் என்று கூறும்
மர வேரால் ஆன விநாயகர்
பள்ளி கொண்ட சிவன்
மஹா நவமியான இன்று முழு மனத்துடன் ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் அம்பாளை தியானித்து ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை செய்பவர்கள் அந்த அன்னையின் திருவடிகளை அடைவர் என்பது திண்ணம்.
********************
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அன்னையை பத்து வயது குழந்தையாக பாவித்து சுபத்ரா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் சர்வ மங்களம் உண்டாகும் . இன்றைய ஸ்லோகம்
ஸுபத்ரபணிச பக்தானாம் குருதே பூஜிதா ஸதா அபத்ர
நாசினீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம் ||
(தன்னை பூஜை செய்பவர்களுக்கு மங்களைச் செய்து அமங்கலங்களை எந்த சக்தி நீக்குகிறதோ அந்த சுபத்திரையை வணங்குகிறேன்.)
பல்லக்கில் விநாயகர்
ஸித்திதாத்ரி துர்க்கா
நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று நவதுர்க்கைகளில் சித்திதார்த்தியாக வழிபடுகின்றோம். தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள். சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்.
கைலாயத்தில் சிவபெருமான் மஹா சக்தியை வழிபட்டு எல்ல ஸித்திகளையும் பெற்றார். அதற்கு நன்றிக் கடனாகத் தன்னுடய உடலில் பாதி பாகத்தை தேவிக்குக் கொடுத்தார். இதனால் சிவபெருமனும், அர்த்த நாரீஸ்வரர்" என்று புகழைடைந்தார். இந்த அவதார ரூபத்தை எல்லாக் கடவுளரும், ரிக்ஷிமுனிகளும், சித்தர்களும், யோகிகளும், பக்தர்களும் வழிபடுகிறார்கள்.
கைலாயத்தில் சிவபெருமான் மஹா சக்தியை வழிபட்டு எல்ல ஸித்திகளையும் பெற்றார். அதற்கு நன்றிக் கடனாகத் தன்னுடய உடலில் பாதி பாகத்தை தேவிக்குக் கொடுத்தார். இதனால் சிவபெருமனும், அர்த்த நாரீஸ்வரர்" என்று புகழைடைந்தார். இந்த அவதார ரூபத்தை எல்லாக் கடவுளரும், ரிக்ஷிமுனிகளும், சித்தர்களும், யோகிகளும், பக்தர்களும் வழிபடுகிறார்கள்.
சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம்.
ஸித்த கந்தர்வ யக்ஷாத்யை: அஸிரைரபி |
ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||
(சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், தேவர் கூட்டங்கள் எப்போதும் வழிபடும் சித்திதாயினி துர்க்கா அடியேனது எல்லா செயல்களிலும் வெற்றியை வழங்கட்டும்.)
நிர்குணா யா ஸதா நித்யா வ்யாபிகா அவிக்ருதா சிவா |
யோக கம்யா அகிலாதாரா துரீயா யா ச ஸம்ஸ்த்துதா ||
தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |
மஹாலக்ஷ்மி: ஸரஸ்வதீ மஹாகாளீதி ச ஸ்திரிய: ||
தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் ||
படைக்கும் பிரம்மா, காக்கும் மஹா விஷ்ணு, சம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி, மஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர்.
**********************
கருமாரி திரிபுரசுந்தரி
அஷ்வாரூடா அலங்காரம்
***********
ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம்
மாயா ஜனனக்கடற்காவனோ பிணிமலைக்காவனோ, வருந்தும் வாறனைச் சமுசார வேதனைக்காவனோ, வறுமைச்சனிக்காவனோ,
ஓயாத கோபக்கனற்காவனோ, கெட்டவொன்னலர் பகைக்காவனோ, ஒழியாத சஞ்சலப் படுகுழிக்காவனோ, ஊழ்வினை தனக்காவனோ,
நீயா தெரித்தென்னைப் பாதுகாத்தருள் செய்து நெடுநாட்படும் பாடெல்லாம்,
நீக்கியழியாத சுகமெய்தச் செய்தாலன்றி நீச்சுநிலை யில்லையம்மா,
வீயாத முக்கணத்திடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க் குழல்வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (9)
பொருள்: அடியேன் மீண்டும் மீண்டும் பிறந்து உழல்வேனோ, நோய் வந்து வருந்துவேனோ, வருத்துகின்ற இந்த சம்சார வேதனைக்காவனோ, வறுமையில் உழல்வேனோ, கடுங்கோபத்தால் துன்பமுறுவேனோ, பகைவர்களால் துன்பமுறுவேனோ, சஞ்சல மனத்தால் துன்பமுறுவேனோ, துரத்தும் ஊழ்வினையால் வரும் துன்பங்களினால் உழல்வேனோ தெரியவில்லை. அம்மா கற்பகவல்லியே! . நீ ஆதரித்து என்னை பாதுகாத்து நாயேன் நெடுநாட்களாக படும் இத்துன்பங்களையெல்லாம் போக்கி சுகம் பெற செய்தாலின்றி வேறு புகலில்லை அம்மா. யாராலும் வெல்ல முடியாத முக்கண்ணை உடைய சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட அமுதானவளே! சோலைகள் நிறைந்த திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளே! பரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!
அம்மன் அருள் தொடரும். . . . .. ...
Labels: காளிபாரி, சகலகலாவல்லி, சரஸ்வதி, சித்திதாத்ரி துர்க்கா, சுபத்ரா, விநாயகர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home