Wednesday, October 21, 2020

கோலாகல நவராத்திரி - 6

 


நவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னையை ஆறு வயது குழந்தையாக பாவித்து காளிகா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம்அன்னையை இவ்வாறு வழிபடுவதால் துன்பம் நீங்கும்இன்றைய ஸ்லோகம்


காளீகா லயதே ஸர்வம் ப்ரஹ்மாண்டம்  சராசரம் 

கல்பார்ந்தே ஸமயே யாதாம் காளீகாம்யஹம் || 

(அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றையும் பிரளய காலத்தில் எந்த சக்தி சம்ஹாரம் செய்கிறதோ அந்தக் காளியாகிய சக்தியை வணங்குகிறேன்.) 










ஸ்கந்தமாதா துர்க்கா


நவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னை நவதுர்கைகளில்அழகன் முருகனின் அன்னையாக ஸ்கந்தமாதாவாக வணங்கப்படுகிறாள்முறையற்ற தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துன்புற்றனர்அந்த அசுர சக்தியை அழிக்க ஒரு தலைமகன் தோன்ற வேண்டியதால் சிவ பார்வதி திருமணம் நடந்ததுமுருகனும் தோன்றினான்

ஸ்கந்தமாதா அக்னி ஸ்வரூபமாக இருந்து உலகை காக்கின்றாள் . சிம்ம வாகனத்தில் தாமரையில் பத்மாசனமீட்டு அமர்ந்து ஒரு கரத்தில் ஸ்கந்தனை ஏந்திய வண்ணம்இருகரங்களில் தாமரையுடன்நான்காவது அருள் பொழியும் கரத்தோடு காட்சி தரும் ஸ்கந்தமாதாதேவி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் நல்குகிறாள் .

 சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட போது தனது தளிரன்ன கரங்களினால் அவரது கண்டத்தை தடவி விடம் அங்கேயே தங்கச் செய்தவள் ஸ்கந்தமாதா துர்காஅன்னை மஞ்சள் வர்ணத்தவளாக வணங்கப்படுகின்றாள்

அம்பாளின் ஸ்லோகம்

ஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஞ்சிதகரவயா |

சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ || 

சிம்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில் தாமரை மலரை ஏந்தியுள்ள ஸ்கந்தனின் அன்னையான ஸ்கந்தமாதா துர்கா அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும். 

 



ஐந்தாம் நாள்

பஞ்சமியன்று  -  வைஷ்ணவி

மலர்: பாரிஜாதம்

நைவேத்தியம் : தயிர்சாதம்

நிறம்: வெள்ளை

கோலம் : கடலை மாவினால் பறவைக் கோலம்.

ராகம் : பஞ்சமாவர்ண கீர்த்தனைகள்/ பந்துவராளி

 

ஸ்லோகம் :

ஓம்  ச்யாம வர்ணாயை வித்மஹே  சக்ர ஹஸ்தாய தீமஹி |

தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத் ||

 



  

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal