Tuesday, October 29, 2013

ஆனந்த நவராத்திரி -4

திருமயிலை வெள்ளீஸ்வரம்  
காமாக்ஷி அம்பாள் கொலு தர்பார் காட்சி

 வெள்ளீஸ்வரம் ஐதீகம்
(பின் புறத்தில் அம்மனுடன் கொலுவிருக்கும் அலை மகள்)

( மாபலி  சக்ரவர்த்தி,  வாமனருக்கு மூன்றடி மண் தானம் செய்த போது அதை தடுக்க முயன்று  கண் இழந்த சுக்கிரன்(வெள்ளி) பின்னர் குருந்த வனத்தில் சிவபெருமானை நோக்கி தவம் செய்து ,  இழந்த கண்ணை பெற்றார். எனவே வெள்ளிக்கு அருளிய  இறைவன் வெள்ளீஸ்வரர் என்னும் திருநாமம் பெற்றார்.)


அன்ன வாகனத்தில் அன்னை காமாக்ஷி

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது பாடகத்தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் மிச்சையா யிழைத்திட்ட பாத சிலம்பினொலியும்

முத்து மூக்குத்தியும் ரத்தினப்பதக்கமும் மோகன மாலையழகும்
முழுதும் வைடூரியமும் புஷ்பராகத்தினால்முடிந்திட்ட தாலியழகும்

சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ் செங்கையிற் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலா மொலிவுற்ற சிறு காது கொப்பினழகும்

அத்திவரதன் தங்கை  சக்திசிவ ரூபத்தை யடியனாற் சொல்லத் திறமோ
அழகான மயிலையில் புகழாக வாழ்ந்திடு மம்மை காமாட்சி யுமையே 
 எழிலான அன்ன வாகனத்தில் அன்னை  காமாக்ஷி அம்மனுடன் கொலுவிருக்கும்  கலைமகள்


சென்னை மகாலிங்கபுரம் 
பெரிய குன்று முலையம்மை 
இராஜராஜேஸ்வரி அலங்காரம்


௮ம்பா சாம்பவி சந்த்ரமௌளிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளி ஹைமவதி சிவா-த்ரிநயனீ காத்யாயனி பைரவீ  |
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபீ பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ   ||ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம்  செய்வது அம்பாளுக்கு நாம்  புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும்.  இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி  மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது  சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த  ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப்  அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.

இப்பதிவில் பதினொன்றாவது ஸ்லோகம் முதல் பதிமூன்றாவது ஸ்லோகம் வரை காணலாம் அன்பர்களே.

இந்த பத்தாவது ஸ்லோகம்  தீபம்  ஏற்றி அன்னையின் ஸந்நிதானத்தை  கண்டு வணங்குவதற்கு ஏதுவாக  பிரகாசமாக்குவதை விளக்குகின்றது.
க்ஷ்மீ- முஜ்ஜ்வலயாமி ரத்ன-நி்வஹோத்-
 பாஸ்வத்தரே மந்திரே
மாலாரூப- விலம்பிதைர்-மணிமய-
 ஸ்தம்பேஷு ஸம்பாவிதை:  I
சித்ரைர்- ஹாடக-புத்ரிகாகரத்ருதைர்
 கவ்யைர் க்ருதைர் வர்த்திதை:
திவ்யைர் தீபகணைர்- தியா கிரிஸுதே
 ஸந்துஷ்டயே கல்பதாம் II
க்ஷ்மீம்- உஜ்வலயாமி ரத்ன-நிவஹ- உத்
பாஸ்வத்தரே மந்திரே
மாலா-ரூப விலம்பிதை:மணிமய
ஸ்தம்பேஷு ஸம்பாவிதை:  I
சித்ரை: ஹாடக-புத்ரிகா-கர-த்ருதை:
 கவ்யை: க்ருதைவர்த்திதை:
திவ்யை: தீபகணை: தியா கிரிஸுதே!
ஸந்துஷ்டயே கல்பதாம் II   10.

இரத்தின கற்கள் இழைத்த உனது திருக்கோவிலில் மாலை போல் தொங்குகின்றவையும்இரத்தினமயத் தூண்களில் நிழலாகத் தெரிகின்றனவையும்பலவித தங்கப் பெண் பதுமைகளால் கையில் ஏந்திய வண்ணம் என்னும் பலவித   பசுநெய் விளக்குகளால் மனதளவில் அழகை கூட்டுவிக்கிறேன்.  மலை மகளே அது உன்னை மகிழ்விக்கட்டும்.
லக்ஷ்மீம்- பிரகாசத்தை, ஹாடக புத்ரிகா_ தங்கப் பதுமை

.ஆதி பராசக்திக்கு பலவித  சித்ரான்னங்கள் நைவேத்யம் செய்வதை ஆச்சார்யர்  இந்த பதினொன்றாவது   ஸ்லோகத்தில் அருளுகின்றார்.

ஹ்ரீங்காரேச்வரி தப்த-ஹாடக-க்ருதை:
ஸ்தாலீ- ஸஹஸ்ரைர் ப்ருதம்
திவ்யான்னம் க்ருத-ஸூப-சாக-பரிதம்
 சித்ரான்ன-பேதம் ததா I
துக்தான்னம் மதுசர்க்கரா-ததியுதம்
மாணிக்ய-பாத்ரே ஸ்திதம்
மாஷாபூப-ஸஹஸ்ரமம்ப ஸபலம்
நைவேத்ய-மாவேதயே II 
ஹ்ரீம்கார ஈச்வரி! தப்த-ஹாடக-க்ருதை:
ஸ்தாலீ- ஸஹஸ்ரைர் ப்ருதம் திவ்ய அன்னம்
க்ருத-ஸூப-சாக-பரிதம் சித்ரான்னபேதம் ததா I
துக்த அன்னம் மது-சர்கரா-ததி-யுதம் மாணிக்ய-
பாத்ரே ஸ்திதம் மாஷ-ஆபூப-ஸஹஸ்ரம் அம்ப!
ஸபலம் நைவேத்யம் -ஆவேதயே II 11.

ஹே ஹ்ரீங்காரேச்வரித் தாயேஉருக்கிய தங்கத்தால் செய்யப்பட்ட பல கிண்ணங்களில் பரிமாறப்பட்டுள்ள நைவேத்தியம் அனைத்தையும் நிவேதனம் செய்கிறேன்நெய்யும் பருப்பும் கலந்து தயாரித்த கறி வகைகளும்,  சித்ரான்னங்களும்தயிர்தேன்சர்க்கரை சேர்த்து மாணிக்கம் பதித்த பாத்திரத்தில் இருக்கும் பாலன்னம்ஆயிரம் வடைகள் இப்படி நைவேத்தியம் இங்கு பாவிக்கப்படுகிறது.
ஸூப-சாக – பருப்பும் காய்கறியும்
அம்மனுக்கு தாம்பூலம் அளித்து மரியாதை செய்வதை  ஜகத் குரு ஆதி சங்கரர் இந்த பன்னிரண்டாவது ஸ்லோகத்தில் அருளுகின்றார்.

ஸச்சாயைர்-வரகேதகீதல-ருசா
 தாம்பூலவல்லீதலை:
பூகைர்பூரிகுணைஸுகந்தி மதுரை:
 கர்ப்பூர கண்டோஜ்வலை:  I
முக்தாசூர்ண விராஜிதைர் பஹுவிதைர்-
 வக்த்ராம் புஜா மோததிதை:
பூர்ணா ரத்ன-கலாசிகா தவமுதே
 ந்யஸ்தா புரஸ்தா-துமே II

ஸச்சாயை: வர-கேதகீ-தல-ருசா
 தாம்பூல-வல்லீ-தலை:
பூகை: பூரி-குணைஸுகந்தி-மதுரை:
 கர்ப்பூர- கண்ட -உஜ்ஜ்வலை:  I
முக்தா-சூர்ண-விராஜிதை: பஹுவிதை:
 வக்த்ர அம்புஜ ஆமோதிதை:
பூர்ணா ரத்ன-கலாசிகா தவ
 முதேந்யஸ்தா புரஸ்தாத்-உமே II  12

ஹே உமை அன்னையே! உனது எதிரில் இதோ முழுவதும்  ரத்ன கற்கள் பதிந்த வெற்றிலை பெட்டி வைத்துள்ளேன்அது உன் மகிழ்ச்சிக்காகவே வைக்கப்பட்டுள்ளதுஅந்த பெட்டியில் நல்ல தாழை மடல்கள் போன்ற (நிறமானவெற்றிலைகளும்இனிய மனம் கொண்ட பாக்குத் துகள்களும்பச்சை கற்பூரம்சுண்ணாம்பு கலந்து திருவாய்க்கு மணம் உண்டாக்கும் விதத்தில் அனைத்து பொருட்களும் நிரம்பியுள்ளன.
வரகேதகீதலருசா- தாழை மடல்கள் போன்ற, பூக- பாக்கு, கலாசிகா- தாம்பூலத் தட்டு.

மலையரையன் பொற்பாவைக்கு கற்பூர ஆரத்தி (தீபாரதனைசெய்வதை இந்த பதிமூன்றாவது ஸ்லோகத்தில் ஆச்சார்யர் அருளுகின்றார்.
கன்யாபிகமனீய-காந்திபி-
ரலங்காராமலாரார்திகா-
பாத்ரே மௌக்திக சித்ர-
பங்க்தி-விலஸத்கற்ப்பூர தீபாலிபி:  I
தத்தத்-தால-ம்ருதங்க கீத-ஸஹிதம்
ந்ருத்யத் பதாம்-போருஹம்
மந்த்ராராதன-பூர்வகம் ஸுநிஹிதம்
நீராஜனம் க்ருஹ்யதாம்  ||
கன்யாபிகமனீய-காந்திபி:
அலங்கார- அமல ஆராத்ரிகா-
பாத்ரே மௌக்திக சித்ர-
பங்க்தி-விலஸத் கற்பூர தீபாலிபி:  I
தத்தத்-தால-ம்ருதங்க கீத-ஸஹிதம்
ந்ருத்யத் பதாம்-போருஹம்
மந்த்ராராதன-பூர்வகம் ஸுநிஹிதம்
நீராஜனம் க்ருஹ்யதாம்  ||  13

அழகிய பெண்கள்அலங்கார ஆரத்தி பாத்திரத்தில் வரிசையாக முத்துக் கோர்த்தாற் போல கற்பூர தீபங்களை ஏந்தியவர்களாய்மிருதங்கத்தின்  தாள ஒலிக்கு ஏற்றார் போல் ஸங்கீதமும்நாட்டியமும் சேர்ந்து செய்பவர்களாய்மந்திரங்களுடன் காட்டும் கற்பூர நீராஜனத்தை ஏற்றுக் கொள்ளலாமே

                                                                                          அம்மன் அலங்காரங்களும், ஸ்தோத்திரமும் தொடரும்...........

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal