Tuesday, July 30, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 9

எட்டாவது ஆவரணம் 

இவ்வருடம் புலியூர் பாரத்வஜேஸ்வரத்தில் சொர்ணாம்பாள் பெண்களின் பல் வேறு நிலைகளைக் குறிக்கும் திருக்கோலங்களில் அருள் பாலித்தாள்.


 முதல் நாள் குழந்தை ரூபம்.





புலியூர் சொர்ணாம்பாள் 
சுமங்கலி ரூபிணி அலங்காரம் 



 




சொர்ணாம்பாள்  சுவாசினி ரூபிணி அலங்காரம் 









சொர்ணாம்பிகை வானபிரஸ்த ரூபிணி அலங்காரம் 







சொர்ணாம்பாள் யோக ரூபிணி திருக்கோலம் 






********************

எட்டாவது ஆவரணம்

ராகம்:
 கண்டா                                               தாளம்: ஆதி

பல்லவி

ஸ்ரீ கமலாம்பிகே அவாஅவ சிவே   கரத்ருத ஸுக ஸாரிகே              (ஸ்ரீ கமலாம்பிகே)

அநுபல்லவி

லோக பாலினி கபாலிநி சூலினி லோக ஜனநீ பகமாலிநி ஸக்ருதா

மத்யமம்



லோகமய மாம் ஸர்வஸித்தி
ப்ரதாயிகே த்ரிபுராம்பிகே பாலாம்பிகே     (ஸ்ரீ கமலாம்பிகே)



சரணம்



ஸந்தப்த ஹேம ஸந்நிப தேஹே ஸதாக்கண்டைக ரஸ ப்ரவாஹே

ஸந்தாப- ஹர த்ரிகோண –கேஹே ஸகாமேஸ்வரி ஸக்தி ஸமூஹே

ஸந்ததம் முக்தி கண்டா மணி கோஷாயமான கவாடத்வாரே

அநந்த குருகுஹ விதிதே கராங்குலி நகோதய விஷ்ணு தசாவதாரே



மத்யமம்


அந்த:கரேணக்ஷு கார்முக
சப்தாதி பஞ்ச தந்மாத்ர விஸிகாத்யந்த ராக பாச

 த்வேஷாங்குஸதரகரேதி ரஹஸ்ய யோகிநீ பரே (ஸ்ரீ கமலாம்பிகே)

மங்கள உருவான சிவசக்தியே! எட்டு விதமான சியாமளை ரூபங்களில்  கிளிப்பிள்ளையை திருக்கரங்களில் ஏந்திய சாரிகா ரூபத்தில் இருப்பவளே!, ஸ்ரீகமலாம்பிகையே!  என்னைக் காப்பாற்று! காப்பாற்று!.

உலகங்களை  காத்தருள்பவளே, பிரம்ம கபாலத்தைக் கையினில் தாங்கியவளே, சூலத்தைக் கையினிலேந்தி சூலினி  துர்கையாக காட்சியளிப்பவளே, சகல உலகங்களையும் படைத்து காத்து அருளும் தாயாக தனக்கு ஒரு தாயற்ற உலகம்மையே, சித்திகளை மாலையாக அணிந்திருப்பவளே! ,ஸர்வஸித்திப்ரதாயக சக்ரேஸ்வரியாக உள்ள த்ரிபுராம்பிகையே கமலாம்பிகையே! ஒருமுறையாவது என் மேல் கருணை வைத்து பாரம்மா!. தங்க திருமேனியைக் கொண்ட பங்காரு காமாட்சியாகக் காட்சி தருபவளே, எப்போதும் அகண்ட ரஸ ப்ரவாகமாக பிரும்மானந்தத்தைப் பெருக்குபவளே, தாபத்ரயத்தைப்    (ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதி பௌதீகம்)  போக்கியருளும் மஹாகாமேஸ்வரி, மஹாவஜ்ரேஸ்வரி, மஹாபகமாலினீ, ஆகிய மூன்று ஆவரண தேவதைகளாக  ஸ்ரீசக்ரத்தின் எட்டாவது முக்கோணத்தில் உறைபவளே, காமேஸ்வரி முதலான சக்தி  தேவியர்கள் சூழ விளங்குபவளே!  முக்தி என்னும் கோட்டைக் கதவங்கள் தனது பக்தர்களுக்காக  எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன  என்ற அறிவிப்பை மணியோசையின் மூலம்  ஒலிக்கச் செய்பவளே!, அனந்த  குருகுஹன்  முருகனால்  நன்கு அறியப்பட்டவளே!, கை விரல் நகங்களிலிருந்து விஷ்ணுவின் தசாவதாரங்களைத் தோற்றுவித்தவளே.

அந்தகரணமென்னும் கரும்புவில்லில் சப்தம்,-ரூபம்-ரஸம்-கந்தம்-ஸ்பர்ஸம் எனப்படும் ஐந்து தன்மாத்ரைகளை அம்புகளாக்கி அங்கு ஏற்படும் மிக அதிகமான பற்றையும், பாசத்தையும், க்ரோதத்தையும், நீக்குவதற்காக கையினில் அங்குசம் தரித்திருக்கும் திருக்கரங்கள் உடையவளே, அதிரஹஸ்ய யோகினியாக இருப்பவளே கமலாம்பிகையே என்னை ஒருமுறையாவது கடைக்கண்ணால் பார்த்தருள்வாயாக! 

ந்த எட்டாவது  ஆவரணத்தின் சக்ரம்  சர்வ சித்திப்ரதம் ஆகும். இச்சக்ரம் (மத்ய) த்ரிகோணமாக  விளங்குகின்றதுஇச்சக்கரத்தின் நாயகி திரிபுராம்பா. இதில் அட்டித்து விளங்கும் யோகினி அதிரகசிய யோகினி. அவஸ்தை நித்யாசனம்  ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் பாணிநீ முதலான  எண்மர்  ஆவர். 


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு


                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Labels: , , , ,

Tuesday, July 23, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 3

இரண்டாம்  ஆவரணம்



அசோக் நகர் சொர்ணாம்பாள் கொலு





  தனலக்ஷ்மி அலங்காரம்









மீனாக்ஷி அலங்காரம் 





**********

இரண்டாவது ஆவரண கீர்த்தனம் 

ராகம்கல்யாணீ                                                                                                            தாளம்ஆதி

பல்லவி

கமலாம்பாம் பஜரே ரேமாநஸ கல்பித
மாயா கார்யம் த்யஜரே. (கமலாம்பாம்)

அனுபல்லவி
கமலா வாணீ ஸேவித பார்ஸ்வாம்
கம்பு ஜயக்ரீவாம் நததேவாம்

மத்யமம் 
கமலாபுர ஸதநாம் மிருதுகதநாம்
கமநீய ரதநாம் கமலவதநாம் (கமலாம்பாம்)

சரணம்
ஸர்வாஸாபரிபூரக- சக்ர ஸ்வாமிநீம் பரமசிவகாமிநீம்
தூர்வாஸார்ச்சித குப்த- யோகிநீம் துக்க த்வம்ஸிநீம் ஹம்ஸிநீம்
நிர்வாண நிஜ ஸுக ப்ரதாயிநீம் நித்ய கல்யாணீம் காத்யாயநீம்
ஸர்வாணீம் மதுபவிஜய வேணீம் ஸத்குருகுஹ ஜநனீம் நிரஞ்சநீம்

மத்யமம் 
கர்வித பண்டாஸுர பஞ்ஜநீம் காமா கர்ஷிண்யாதி ரஞ்ஜநீம்
நிர்விசேஷ சைதந்ய ரூபிணீம் உர்வீ  தத்வாதி ஸ்வரூபிணீம் (கமலாம்பாம்)


இப்பாடலின் சிறப்பு என்னவென்றால் கல்யாணீ ராகத்துக்கே உரித்தான ஜீவ ஸ்வரமான நீ என்ற ஸ்வரத்தை கிருதி முழுவதும் பின்னி இழைந்தோடச் செய்துள்ளார் நாதயோகி தீக்ஷிதர் அவர்கள்.

ஓ மனமே!  திருவாரூரில் குடிகொண்டிருக்கும் கமலாம்பிகையை துதி செய்வாயாக. மாயை விளைவிக்கும் ஆசை, பாசம்  ஆகியவற்றை துறப்பாயாக!

அலைமகளும் கலைமகளும் இருமருங்கிலும் நின்று சேவித்த வண்ணம் இருப்பவளும், வெண்சங்கை வெல்லும்  கழுத்தை உடையவளும், தேவர்களால் பூஜிக்கப்படுபவளும், கமலாபுரத்தில் கோயில் கொண்டுள்ளவளும், மிகவும் மெதுவாகவும் இனிமையாகவும் பேசும் தன்மையுடையவளும், மாதுளை முத்துக்கள் போன்ற  அழகிய பற்களை உடையவளும், அன்றலர்ந்த தாமரையின் மலருக்கு நிகரான திருமுகமுடையவளுமான கமலாம்பாளை துதி செய்வாயாக.

ஸ்ரீவித்யா உபசனையின் அங்கமான ஸர்வாசாபரிபூரக சக்கரத்தின் ஈஸ்வரியும், பரமசிவனின் மனதுக்குகந்தவளும், துர்வாச மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட குப்தயோகினியாக இருப்பவளும், துயரங்களை துடைப்பவளும், அஜபா என்ற மந்த்ர ஸ்வரூபியாக இருப்பவளும், கைவல்யம் என்னும் உண்மையானதும் மேலானதுமான முக்தி நிலயை அளிப்பவளும், அழிவற்ற  மங்கல ஸ்வரூபிணி, காத்யாயினியாக அவதாரம் செய்தவளும், சர்வேஸ்வரனின் பட்ட மஹிஷியாக இருப்பவளும், கருவண்டுகளின் கருமையை மிஞ்சும் கருங்கூந்தலை உடையவளும், ஞானபண்டிதனான குருகுஹனை ஈன்றவளும், மாசற்றவளும், கர்வம் பிடித்த பண்டாஸுரனை வதம் செய்தவளும், காமகர்ஷணி போன்ற தேவதைகளுக்கு சந்தோஷம் அளிப்பவளும், விகல்பங்களற்ற சைதன்யாரூபியாக இருப்பவளும், பூ தத்வம் முதலான தத்துவங்களின் இருப்பிடமாக இருப்பவளுமான கமலாம்பிகையை துதி செய் மனமே.

இந்த இரண்டாவது ஆவரணம்  சோடஷ தள கமலம் ஆகும். இச்சக்கரம் சர்வாசாபரிபூரகம்என்பதாம். இதில் அட்டித்து விளங்கும் யோகினி குப்தயோகினி ஆவாள்.  திரிபுரேசி இச்சக்கரத்தின் நாயகி. அவஸ்தை ஸ்வப்னம் ஆகும். இதில் விளங்கும் சக்தி தேவதைகள்  காமாகர்ஷீணீ முதலிய  பதினாறு  ஆகர்ஷண சக்தியர் ஆவர். ஜீவாத்மாவின் கனவு நிலையையும் சூட்சும சரீரத்தையும் அதனால் அடையப்படும் அனுபவத்தையும் குறிக்கின்றது. 

                                      முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

Labels: , ,

ஸ்ரீசக்ர நாயகி - 2

முதல் ஆவரணம்


புலியூர் பாரத்வாஜேஸ்வரர்  ஆலயம் 
சொர்ணாம்பாள் சிசு ரூபிணி திருக்கோலம்


கண்ணாடி பல்லக்கில்  சொர்ணாம்பாள் 


ஸ்ரீசக்ர கோலம் 


சாரதா தேவி ஆலயம் 

கிரிக்கெட் போட்டி 



மகாலிங்கபுரம் பிரஹத் சுந்தர குஜாம்பாள்
புவனேஸ்வரி அலங்காரம் 

* * * * * * * * 
முதலாவது ஆவரண கீர்த்தனம்

ராகம் - ஆனந்தபைரவி                                                                               தாளம்த்ரிபுட

பல்லவி

கமலாம்பா ஸம் ரக்ஷது  மாம்
ஹ்ருத் கமலா நகர நிவாஸிநீ.... (கமலாம்பா)
அநுபல்லவி
ஸுமநஸாராதிதாப்ஜமுகீ ஸுந்தர மந: ப்ரியகர ஸகீ
கமலஜாநந்த போத ஸுகீ காந்தா தார பஞ்ஜார ஸுகீ..... (கமலாம்பா)
சரணம்
த்ரிபுராதி சக்ரேஸ்வரீ  அணிமாதிஸித்தீஸ்வரி
நித்ய காமேஸ்வரி க்ஷிதிபுர த்ரைலோக்ய மோஹநசக்ர வர்த்திநீ
ப்ரகட யோகிநீ  ஸுரரிபு மஹிஷாஸுராதி மர்த்தினீ
நிகம புராணாதி ஸம்வேதினீ

மத்யமம் 

த்ரிபுரேசீ குருகுஹஜனனீ த்ரிபுர பஞ்ஜந ரஞ்ஜனீ
மதுரிபு ஸஹோதரீ தலோதரீ திரிபுர ஸுந்தரீ மஹேஸ்வரீ (கமலாம்பா)

அடியேன் மனத்துள்ளும் கமலாலயம்  என்னும்  திருவாரூரில் கோவில் கொண்டிருப்பவள், தூய உள்ளம் உடைய ஞானியர்களால் ஆராதிக்கப்படுபவள், தாமரை போன்ற திருமுகமுடையவள், சுந்தரேச்வரரின் உள்ளம் கவர்ந்தவள், தாமரைப்பூவினில் அமர்ந்து இருக்கும் லக்ஷ்மி தேவியின் ஆனந்தமான துதிகளினால் ஆனந்திப்பபவள், தரகம் எனப்படும் பிரணவாகாரத்தின் மண்டபத்தில் இருக்கும் கிளி போன்றவள் அந்த மஹிமை பொருந்திய கமலாம்பிகை என்னைக் காத்தருளட்டும்.

மனித உடம்பில் இருக்கும் ஒன்பது சக்ர நிலைகளான திரிபுரா சக்கரம் முதல் ஸர்வாநந்தமய சக்ரம் வரை ஈச்வரியாக இருப்பவள், அணிமாதி போன்ற அஷ்டமாசித்திகளை அருளுபவள், பதினைந்து நித்யா சக்திகளான காமேஸ்வரி நித்யா சக்தி தொடங்கி சித்ரா நித்யா சக்தி வரையுள்ள அனைவருக்கும் ஈஸ்வரியாக விளங்குபவள், த்ரைலோக்ய மோஹன சக்ரத்தில் உள்ள பூபுரம் என்ற சக்ரமாக நிற்பவள். யோகினிகளில் பிரகட யோகினியாக இருப்பவள், தேவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் தீய சக்திகளான மகிஷாசுரன் முதலான அசுரர்களை வதம் செய்தவள், வேதங்களாலும் புராணங்களால் மட்டும் அறியப்படுபவள், மனம் – புத்தி - ஸித்தி போன்ற மூன்று வகை சக்திகளுக்கு தலைவியாக உள்ளவள், குருகுஹனான கார்த்திகேயனின் தாய், திரிபுர சம்ஹாரத்தால் மனம் மகிழ்ந்தவள், மது என்ற அரக்கனை அழித்த விஷ்ணுவின் சகோதரி, உள்ளங்கை அன்ன வயிற்றினைக் கொண்டவள், திரிபுரமெரித்த விரிந்த சடையுடைய சசிசேகரனின் மனமகிழ் சுந்தரி, மஹேச்வரி இத்தகைய பெருமைகளையுடைய கமலாம்பிகை என்னைக் காத்தருளட்டும்
.


ஸ்ரீ சக்ரத்தின் முதலாவது ஆவரணம் பூபுரம் ஆகும். மூன்று சதுரங்கள் கொண்டது. மூன்று சதுரங்களைக் கொண்டுள்ளதால் த்ரைலோக்யமோகன சக்கரம் ஆகும். இச்சக்கரத்தின் நாயகி திரிபுரா. இதில் அட்டித்து விளங்கும் யோகினி பிரகட யோகினி. அவஸ்தை ஜாக்ரம் ஆகும்.இச்சக்கரத்தின் முதல் ரேகையில் அணிமா முதல்  பத்து சித்தி தேவதைகளும், இரண்டாவது ரேகையில் ப்ராஹ்மி முதல் எட்டு  மாத்ரு சக்திகளும், மூன்றாவது ரேகையில் சர்வசம்க்ஷோபனமாய்  திகழும் பத்து முத்ரா தேவதைகளும்  ஆக இருபத்தெட்டு தேவதைகள் மிளிர்கின்றனர். தேகம் ஸ்ரீசக்ரமாக பாவிக்கப்படும் போது முதல் ஆவரணம் ஸ்தூல சரீரத்தையும், இந்திரியங்கள் மனம் முதலியவற்றால் உணரப்படும் விஷயங்களையும் குறிக்கும்.  


                                         முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

Labels: , ,

Friday, October 14, 2016

நவராத்திரி நாயகி - 6

பல்வேறு ஆலயங்களின் அம்மன் அலங்காரங்கள்


 பிரஹத் சுந்தர குஜாம்பாள் 

மீனாக்ஷி அலங்காரம்




ஆலயம்: மகாலிங்கேஸ்வரர் ஆலயம், மஹாலிங்கபுரம் , சென்னை. 

******************



விசாலாக்ஷி ஊஞ்சல் 




பழனி மலைக் கொலு 

ஆலயம் : காசி விஸ்வநாதர் ஆலயம், மேற்கு மாம்பலம்,     சென்னை
********************



சொர்ணாம்பாள் அன்னபூரணி அலங்காரம் 




சொர்ணாம்பாள்  மீனாக்ஷி அலங்காரம் 

ஆலயம்: சொர்ணபுரீஸ்வரர் ஆலயம், அசோக்நகர் , சென்னை 

******************


சலதி உலகத்திற் சராசரங்களை ஈன்ற
தாயாகினால் எனக்குத்

தாயல்லாவோ? யான் உந்தன் மைந்தன் அன்றோ? எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன்

முலை சுரந்து ஒழுகு பால் ஊட்டி என் முகத்தினை உன் 
முந்தாணையால் துடைத்து

மொழிகின்ற மழலைக்கு உகந்து கொண்டு இள நிலா
முறுவலும் பூத்து அருகில் யான்

குலவி விளையாடல் கண்டு அருள் மழை பொழிந்து அங்கை
கொட்டி வா என்று அழைத்துக்

குஞ்சரமுகன் குமரனுக்கு இளையன் என்று எனைக்
கூறினால் ஈனம் உண்டோ?

அலைகடலிலே தோன்றும் ஆராத அமுதமே!
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (9) 

பொருள்: அபிராமி அன்னையே! இந்த கடல் சூழ்ந்த உலகத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ஈன்றெடுத்த அன்னை நீ அல்லவா? அப்படியென்றால் நீ எனக்கும் அன்னைதானே, எனது கவலைகளைப் போக்கி, உன்னுடைய முலைப்பாலை ஊட்டி, என் முகத்தை உன் முந்தானையால் துடைத்து, என் மழலைச் சொல் கேட்டு மகிழ்ந்து , மகிழ்ச்சியுடன் விளையாடுவது கண்டு மகிழ்ந்து, அருள் மழை பொழிந்து அன்பு திருக்கரங்களால் வா என்று அழைத்து , விநாயகனுக்கும், முருகனுக்கும் இளையவன் என்று கூறினால் அதனால் தங்களுக்கு ஒரு தாழ்வு ஏற்படுமோ? . அலைகள் நிறைந்த   கடலில் தோன்றிய தெவிட்டாத அமுதமே! ஆதி கடவூரில் உறைபவளே ! அமுதீசர் இடப்பாகம் அகலாத அனையே! கிளியைத் திருக்கரத்தில் ஏந்தியவளே!  அருள் புரியும் அபிராமியே! என்று உரிமையுடன் வேண்டுகின்றார் அபிராமிபட்டர்.   




                                                                                                                                                                         அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

Labels: , , ,

Thursday, September 29, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் (2011) -1

நவராத்திரி ஒன்பது நாட்களுக்கும் அன்னைக்கு பலவிதமான அலங்காரங்கள் பல் வேறு ஆலயங்களில் நடைபெறுகின்றது இந்த வருடம் தாய் மனமுவந்து தந்த அருட்காட்சிகளை, அற்புத தரிசனத்தை, ஆனந்த தரிசனத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் கண்டு களியுங்கள்.







சென்னை அசோக்நகர் சொர்ணாம்பாள்



கொலு தர்பார் காட்சி















ஆறதனில் மணல் குவித்து அரிய பூஜை செய்த என் அன்னை ஏகம்பரியும் நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழும் அம்மை காமாட்சியுமையே





சொர்ணாம்பாள் சொர்ணபுரீஸ்வரருக்கு



பாலாபிஷேகம் செய்யும் திருக்கோலம்

மேற்கு மாம்பலம் சத்யநாராயணர் கொலு தர்பார் வராக அவதாரம்
பூமி தேவியுடன் பெருமாள் கொலு





காசி விசாலாட்சி அம்பாள் ஊஞ்சல் சேவை












உண்ணாமுலையாளுடன் அருள்புரியும்



அண்ணாமலையார் கொலு


காமாட்சி அலங்காரம்




வடபழனி சாந்தநாயகி அம்பாள்
காசி விசாலாட்சி அம்பாள் அலங்காரம்




பசுபதி




ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய


துக்க நிவாரணி அஷ்டகம்
மங்கள ரூபிணி மதியணி சூலினி
மன்மத பாணியளே
சங்கடம் தீர்த்திட சடுதியில் வந்திடும்
சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் கனிமுகங்கண்டநல்
கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (1)

Labels: , , ,

Tuesday, October 12, 2010

நவராத்திரி அலங்காரங்கள் - 9

நவராத்திரி ஒன்பதாம் நாள்

அன்னைக்கு மிகவும் உகந்த மஹா நவமி நாளும் நாம் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை கொண்டாடும் நாளும் நவராத்திரியின் நிறை நாளும் ஆன இந்த ஒன்பதாம் நாள் அன்னையை பத்து வயது குழந்தையாக பாவித்து சுபத்ரா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் சர்வ மங்களம் உண்டாகும் . இன்றைய ஸ்லோகம்


ஸுபத்ரபணிச பக்தானாம் குருதே பூஜிதா ஸதா அபத்ர

நாசினீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம் ||

(தன்னை பூஜை செய்பவர்களுக்கு மங்களைச் செய்து அமங்கலங்களை எந்த சக்தி நீக்குகிறதோ அந்த சுபத்திரையை வணங்குகிறேன்.)


ஸித்திதாத்ரி துர்க்கா

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று நவதுர்க்கைகளில் சித்திதார்த்தியாக வழிபடுகின்றோம். தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள். சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்.

கைலாயத்தில் சிவபெருமான் மஹா சக்தியை வழிபட்டு எல்ல ஸித்திகளையும் பெற்றார். அதற்கு நன்றிக் கடனாகத் தன்னுடய உடலில் பாதி பாகத்தை தேவிக்குக் கொடுத்தார். இதனால் சிவ பெருமனும், "அர்த்த நாரீஸ்வரர்" என்று புகழைடைந்தார். இந்த அவதார ரூபத்தை எல்லாக் கடவுளரும், ரிக்ஷிமுனிகளும், சித்தர்களும், யோகிகளும், பக்தர்களும் வழிபடுகிறார்கள்.

சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம்.

ஸித்த கந்தர்வ யக்ஷாத்யை: அஸிரைரபி |

ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||

(சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், தேவர் கூட்டங்கள் எப்போதும் வழிபடும் சித்திதாயினி துர்க்கா அடியேனது எல்லா செயல்களிலும் வெற்றியை வழங்கட்டும்.)

நிர்குணா யா ஸதா நித்யா வ்யாபிகா அவிக்ருதா சிவா |

யோக கம்யா அகிலாதாரா துரீயா யா ச ஸம்ஸ்த்துதா ||


தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |

மஹாலக்ஷ்மி: ஸரஸ்வதீ மஹாகாளீதி ச ஸ்திரிய: ||

தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் ||

படைக்கும் பிரம்மா, காக்கும் மஹா விஷ்ணு, சம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி, மஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர்.

சொர்ணாம்பாள்
இராஜராஜேஸ்வரி அலங்காரம்


திருமயிலை காமாக்ஷி அம்பாள்

நாகவாகனத்தில் பத்மாசனியாக தரிசனம்


காமாக்ஷி அம்பாளுடன் கொலுவிருக்கும்

மஹா சரஸ்வதி


குகையில் சிவலிங்கங்கள்



ரோக நிவாரணி அஷ்டகம்

ஜெயஜெய சைலா புத்திரி பிரஹ்ம

சாரிணி சந்தர கண்டினியே

ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த

மாதினி காத்யா யன்ய யளே

ஜெயஜெய கால ராத்ரி கௌரி

ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே || (8)

( நவ துர்க்கைகளின் நாமம் அவர்களது வர்ணத்தினாலேயே கூறப்பட்டுள்ளது )


அம்மன் அருள் வளரும்

Labels: , , ,

  • Other Articles
  • Unicode enable