ஸ்ரீசக்ர நாயகி - 9
எட்டாவது ஆவரணம்
இவ்வருடம் புலியூர் பாரத்வஜேஸ்வரத்தில் சொர்ணாம்பாள் பெண்களின் பல் வேறு நிலைகளைக் குறிக்கும் திருக்கோலங்களில் அருள் பாலித்தாள்.
முதல் நாள் குழந்தை ரூபம்.
புலியூர் சொர்ணாம்பாள்
சுமங்கலி ரூபிணி அலங்காரம்
சொர்ணாம்பாள் சுவாசினி ரூபிணி அலங்காரம்
சொர்ணாம்பிகை வானபிரஸ்த ரூபிணி அலங்காரம்
சொர்ணாம்பாள் யோக ரூபிணி திருக்கோலம்
********************
எட்டாவது ஆவரணம்
ராகம்: கண்டா தாளம்: ஆதி
பல்லவி
ஸ்ரீ கமலாம்பிகே அவாஅவ சிவே கரத்ருத ஸுக ஸாரிகே (ஸ்ரீ கமலாம்பிகே)
அநுபல்லவி
லோக பாலினி கபாலிநி சூலினி லோக ஜனநீ பகமாலிநி ஸக்ருதா
மத்யமம்
லோகமய மாம் ஸர்வஸித்தி
ப்ரதாயிகே த்ரிபுராம்பிகே பாலாம்பிகே (ஸ்ரீ கமலாம்பிகே)
சரணம்
ஸந்தப்த ஹேம ஸந்நிப தேஹே ஸதாக்கண்டைக ரஸ ப்ரவாஹே
ஸந்தாப- ஹர த்ரிகோண –கேஹே ஸகாமேஸ்வரி ஸக்தி ஸமூஹே
ஸந்ததம் முக்தி கண்டா மணி கோஷாயமான கவாடத்வாரே
அநந்த குருகுஹ விதிதே கராங்குலி நகோதய விஷ்ணு தசாவதாரே
மத்யமம்
அந்த:கரேணக்ஷு கார்முக
சப்தாதி பஞ்ச தந்மாத்ர விஸிகாத்யந்த ராக பாச
த்வேஷாங்குஸதரகரேதி ரஹஸ்ய யோகிநீ பரே (ஸ்ரீ கமலாம்பிகே)
மங்கள உருவான சிவசக்தியே! எட்டு விதமான சியாமளை ரூபங்களில் கிளிப்பிள்ளையை திருக்கரங்களில் ஏந்திய சாரிகா ரூபத்தில் இருப்பவளே!, ஸ்ரீகமலாம்பிகையே! என்னைக் காப்பாற்று! காப்பாற்று!.
உலகங்களை காத்தருள்பவளே, பிரம்ம கபாலத்தைக் கையினில் தாங்கியவளே, சூலத்தைக் கையினிலேந்தி சூலினி துர்கையாக காட்சியளிப்பவளே, சகல உலகங்களையும் படைத்து காத்து அருளும் தாயாக தனக்கு ஒரு தாயற்ற உலகம்மையே, சித்திகளை மாலையாக அணிந்திருப்பவளே! ,ஸர்வஸித்திப்ரதாயக சக்ரேஸ்வரியாக உள்ள த்ரிபுராம்பிகையே கமலாம்பிகையே! ஒருமுறையாவது என் மேல் கருணை வைத்து பாரம்மா!. தங்க திருமேனியைக் கொண்ட பங்காரு காமாட்சியாகக் காட்சி தருபவளே, எப்போதும் அகண்ட ரஸ ப்ரவாகமாக பிரும்மானந்தத்தைப் பெருக்குபவளே, தாபத்ரயத்தைப் (ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதி பௌதீகம்) போக்கியருளும் மஹாகாமேஸ்வரி, மஹாவஜ்ரேஸ்வரி, மஹாபகமாலினீ, ஆகிய மூன்று ஆவரண தேவதைகளாக ஸ்ரீசக்ரத்தின் எட்டாவது முக்கோணத்தில் உறைபவளே, காமேஸ்வரி முதலான சக்தி தேவியர்கள் சூழ விளங்குபவளே! முக்தி என்னும் கோட்டைக் கதவங்கள் தனது பக்தர்களுக்காக எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்ற அறிவிப்பை மணியோசையின் மூலம் ஒலிக்கச் செய்பவளே!, அனந்த குருகுஹன் முருகனால் நன்கு அறியப்பட்டவளே!, கை விரல் நகங்களிலிருந்து விஷ்ணுவின் தசாவதாரங்களைத் தோற்றுவித்தவளே.
அந்தகரணமென்னும் கரும்புவில்லில் சப்தம்,-ரூபம்-ரஸம்-கந்தம்-ஸ்பர்ஸம் எனப்படும் ஐந்து தன்மாத்ரைகளை அம்புகளாக்கி அங்கு ஏற்படும் மிக அதிகமான பற்றையும், பாசத்தையும், க்ரோதத்தையும், நீக்குவதற்காக கையினில் அங்குசம் தரித்திருக்கும் திருக்கரங்கள் உடையவளே, அதிரஹஸ்ய யோகினியாக இருப்பவளே கமலாம்பிகையே என்னை ஒருமுறையாவது கடைக்கண்ணால் பார்த்தருள்வாயாக!
இந்த எட்டாவது ஆவரணத்தின் சக்ரம் சர்வ சித்திப்ரதம் ஆகும். இச்சக்ரம் (மத்ய) த்ரிகோணமாக விளங்குகின்றது. இச்சக்கரத்தின் நாயகி திரிபுராம்பா. இதில் அட்டித்து விளங்கும் யோகினி அதிரகசிய யோகினி. அவஸ்தை நித்யாசனம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் பாணிநீ முதலான எண்மர் ஆவர்.
அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . .
Labels: சுமங்கலி, சுவாசினி, சொர்ணாம்பாள், நவாவரண கீர்த்தனை, புலியூர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home