Monday, July 29, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 8

ஏழாவது ஆவரணம் 



கற்பகாம்பாள் சரஸ்வதி அலங்காரம் 










தாமரை மலர்ச் சடை 




சென்ற வருட அலங்காரம் 





ஊஞ்சல் மண்டபத்தில் நவதானியக் கோலம் 







மஹா மண்டபத்தில் திருவிளையாடற் புராண வரலாறு  



***************

ஏழாவது  ஆவரணம்

ராகம்: சஹானா                                                               தாளம்:திரிபுட

பல்லவி

ஸ்ரீ கமலாம்பிகாயாம் பக்திம் கரோமி
சிரித கல்ப வாடி காயாம் சண்டிகாயாம்  ஜகதாம்பிகாயாம்            (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)

அனுபல்லவி

ராகா சந்த்ர வதநாயாம் ராஜீவ நயனாயாம்
பாகாரிநுத சரணாயாம் ஆகாசாதி கிரணாயாம்

மத்யமம்
ஹ்ரீம்கார விபிந ஹரிண்யாம் ஹ்ரீம்கார சுஸுசரீரிண்யாம்
ஹ்ரீம்கார தருமஞ்ஜர்யாம் ஹ்ரீம் காரேஸ்வர்யாம்  கௌர்யாம்     (ஸ்ரீ 
 கமலாம்பிகாயாம்)

சரணம்
ஸரீர த்ரய விலக்ஷண ஸுகதர ஸ்வாத்மாநு போகின்யாம்
விரிஞ்சீ ஹரீசான ஹரிஹய வேதித ரஹஸ்ய யோகின்யாம்
பராதி வாக்தேவதா ரூபவசின்யாதி விபாகின்யாம்
சராத்மக ஸர்வரோகஹர நிராமய ராஜயோகின்யாம்

மத்யமம்
கரத்ருத வீணா வாதிந்யாம் கமலா நகர  விநோதின்யாம்
ஸுர நர முநி ஜன மோதின்யாம் குருகுஹ வர ப்ராசாதிந்யாம்.    
     (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)

உலகத்திற்கே தாயாகவும், கோபத்தினால் சிவந்து உக்ரமுடைய சண்டிகை எனப்பெயர் உடையவளும், அடியவர்களுக்கு கற்பகச்சோலை போன்று கேட்ட வரங்களை கொடுப்பவளுமாகிய  கமலாம்பிகையை நான் பக்தி செய்து வணங்குகிறேன்.

முழுமதியை நிகர்த்த திருமுகத்தினள், கமல மலர் விழியாள், பாகன் என்ற அசுரனின் எதிரியான இந்திரன் வந்து வணங்கும் சரணங்களை உடையவள், ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களை தன்னுடைய பிரகாசத்தால் ஒளிர வைப்பவள், ஹ்ரீம் காரம் என்னும் நந்தவனத்தில்   திரியும் பெண் மான், ஹ்ரீம் என்கிற பீஜாக்ஷரத்தை தன்னுடைய மங்களகரமான சரீரமாக கொண்டவள், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரமாகிய மரத்தில் பூத்த மலர்போல் விளங்குபவள், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்திற்கே ஈஸ்வரியானவள். பொன் நிறமான வடிவுடன் கௌரி என்று அழைக்கப்படுபவள், இத்துணை பெருமை மிக்க  ஸ்ரீகமலாம்பிகையின் மீது நான் பக்தி செய்து வணங்குகிறேன்.

ஸ்தூலம்-ஸூஷ்மம்-காரணம் எனப்படும் மூன்று வகையான மேனிகளுக்கப்பால்  ஆத்ம சரீரம்  ஆனந்தமயமான உள்ளது. அப்படிப்பட்ட ஸ்வாத்மனுபவ போகமே அன்னை. சாதகனின் சிரசிற்கு மேலனுபவத்தில் சூக்கு பரையாக விளங்குபவள்.

பிரம்மா ,விஷ்ணு, மஹேஸ்வரன், ஹயக்ரீவர்   முதலானோர் அறிந்துகொண்ட  ரஹஸ்ய யோகினி அவள், பரா-பஸ்யந்தி-மத்யமா-வைகரீ ஆகிய நிலைகளின் வாக்தேவியரின் ஸ்வரூபமான வசிநீ முதலான வாக் தேவியர்களாகவும்,  சக்தி தேவியர்களாகவும் பல வகையாகப் பிரிந்து இருப்பவளும் அவளே. சராத்மக பிரபஞ்  ரோகத்தை அழிக்கும்சர்வரோகஹர சக்கரத்தில் ஆரோக்கிய ராஜயோகினியாக விளங்குபவள்,

திருக்கரங்களில் வீணையை ஏந்தி இசைப்பவளும், கமலாநகரம் என்ற திருவாரூரில் பேரானந்தத்தில் திகழ்பவளும், தேவர், மனிதர், முனிவர்களை மகிழ்ச்செய்பவளும், குருகுஹனுக்கு வரங்கள் வழங்குபளான ஸ்ரீ கமலாம்பிகையை நான் எப்போதும் பக்தி செய்து வணங்குகிறேன்.


ந்த ஏழாம் ஆவரணத்தின் சக்ரம்  சர்வ ரோகஹர சக்ரம் ஆகும். இச்சக்ரம் எட்டு முக்கோணங்களாக (அஷ்ட கோணம்)  விளங்குகின்றதுஇச்சக்கரத்தின் நாயகி திரிபுராசித்தா. இதில் அட்டித்து விளங்கும் யோகினி ரகசிய யோகினி. அவஸ்தை மனனம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் வாக் தேவியர்கள் எண்மர்  ஆவர். இக்கீர்த்தனத்தின் சிறப்புப் பலன்கள், விருப்பங்கள் ஈடேறும், ஹ்ரீம் பீஜத்தின் சக்திகள் கிடைக்கப்பெறும், ஆத்ம போதம் தெற்றென விளங்கும், வாக் தேவியர்களின்  அருளால் அறிவு நலம் மேலோங்கும்  நோய்கள் நீங்கும்,


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு



                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Labels: , , ,

Tuesday, July 23, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 4

மூன்றாம்  ஆவரணம்

திருமயிலை  கற்பகாம்பாள்   காமதேனு வாகனத்தில் 
மஹாகௌரி கொலு 


அன்னையின் பின்னழகு
( முத்து சடைகள், மலர் சடைகள்)

மஹிஷாசுர மர்த்தினி ரம்ய கபர்த்தினி ஷைலசுதே!


இவ்வருடம் புதிதாக அம்மையப்பரின் அருட்காட்சிகளை 
ஊஞ்சல் மண்டபத்தில் அமைத்துள்ளனர் 




உஞ்சல் மண்டபத்தில் திருக்கயிலை நாதர்
ருத்ராட்சத்தால் கோலம் 



**************

3வது ஆவரண கீர்த்தனை

ராகம் -  சங்கராபரணம்                                                                     தாளம் ரூபகம்
பல்லவி

ஸ்ரீகமலாம்பிகயா கடாக்ஷிதோஹம் அம்ப
ஸச்சிதாநந்த பரிபூர்ண ப்ரஹமாஸ்மி          ( ஸ்ரீ கமலாம்பிகயா)

அனுபல்லவி

பாகசாஸநாதி ஸகல தேவதா ஸேவிதயா
பங்கஜாஸநாதி பஞ்ச க்ருத்யாக்ருத்-பாவிதயா

மத்யமம் 
ஸோகஹர சதுரபதயா மூகமுக்ய வாக்ப்ரதயா
கோகநத விஜயபதயா குருகுஹ தத்த்ரைபதயா  (ஸ்ரீ கமலாம்பிகயா)
சரணம்
அநங்க குஸுமாத்யஷ்ட சக்த்யாகாரயா
அருணவர்ண ஸம்சோக்ஷாபன சக்ராகாரயா
அநந்த கோட்யண்டநாயக  ஸங்கரநாயிகயா
அஷ்டவர்காத்மக குப்ததரயா வரயா

மத்யமம்
அநங்காத் யுபாஸிதயா அஷ்டதளாப்ஜஸ்திதயா
தநுர் பாணதர கரயா தயாஸுதா-ஸாகரயா   (ஸ்ரீ கமலம்பிகயா)


ஸ்ரீ கமலாம்பிகையின் கடைக் கண் பார்வையால் ஆளானேன். அதனால் நான் பரிபூரணபிரும்மாக ஆகிட்டேன்.  எனது ஸ்வரூபம் சத்+சித்+ஆனந்தமாகும்.  அதாவது நான் என்றென்றும் அழிவின்றி நிலையாக இருப்பேன். ஞானமாக விளங்குவேன். ஆனந்தமாகவும் விளங்குவேன்.

 இந்திரன் முதலான  சகல  தேவர்களாலும் வணங்கப்பட்டவள். ஸ்ருஷ்டிஸ்திதிஸம்ஹாரம்,திரோதானம்அநுக்ரஹம் ஆகிய ஐந்து வகை தொழில்களை செய்பவள்பிரும்மாவிஷணு,ருத்ரன்மஹேஸ்வரன்சதாசிவன் ஆகிய பஞ்ச ப்ரும்மாக்களால் கௌரவிக்கப்பட்டவள்.

துன்பங்களை அறவே நீக்கும் சக்தியுள்ள திருவடிகளை உடையவள்மூககவி போன்றவர்களுக்குதன் மேல்  கவி மழைபாடும் பேச்சுத்திறன் அளித்தவள்செந்தாமரையை வெல்லும் செம்மாந்த திருவடிகளை உடையவள்தந்தையின் தோள் மீதமர்ந்து தகப்பனான சிவனனுக்கே “அஹம்ப்ரஹ்ம் அஸ்மி” என்ற பதங்களின் சொரூபீயாக இருப்பவள். அப்படிப்பட்ட கமலாம்பிகையின்கருணைக்கு ஆட்கொள்ளப்பட்டேன்.

அநங்ககுசுமா முதல் அநங்கமாலினி வரையான எட்டு சக்திகளாக விளங்குபவள். சிந்தூரவர்ணமான இளம் சிகப்பு நிற சம்ஷோபண மூன்றாவது ஆவரண சக்ரத்தில் உறைபவள், (இதுவான வெளியில் கிழக்கு முகமாகச் செல்லும்), கோடானு கோடி  அண்டங்களின் தலைவனாகவிளங்கும் சங்கரனின் நாயகியாக விளங்குபவள், க        ஆகிய எட்டு வர்கம்எனப்படும் எண்வகை வாக்குகளில் மறைவாக பொதிந்து வரங்களை அருளுபவள்மன்மதாதியர்என அழைக்கபடும் மனுசந்திரன்குபேரன்லோபாமுத்ராமன்மதன்அகத்தியர்அக்னிசூர்யன்,இந்திரன்சுப்ரஹ்மண்யன்பரமசிவன்தூர்வாஸர் ஆகிய பன்னிருவரால் உபாசிக்கபபட்டவள்,எட்டு தளமுடைய ஸம்ஷோபன சக்ரத்தில் வசிப்பவள்வில்அம்பு போன்ற ஆயுதங்களைதிருக்கரங்களில்  தரித்திருக்கும் சத்திரிய தேவதைகருணை என்ற அமுத ப்ரவாகமாக இருப்பவள். அக்கமலாம்பிகையால் நான் கடாக்ஷிக்கப்பட்டேன்.

இம்மூன்றாம் ஆவரணத்தின் சக்ரம் ஸர்வஸம்க்ஷோபன சக்ரம் ஆகும். இச்சக்ரம் அஷ்டதள பத்மமாக (எட்டிதழ் தாமரை) விளங்குகின்றதுஇச்சக்கரத்தின் நாயகி திரிபுரசுந்தரி. இதில் அட்டித்து விளங்கும் யோகினி குப்ததர யோகினி. அவஸ்தை சுஷுப்தி ஆகும். இதில் விளங்கும் தேவதைகள்  அனங்க குஸுமா முதல் அனங்க மாலினி ஈறான எண்மர் ஆவர். இக்கீர்த்தனை மூன்றாவது வேற்றுமையில் அமைந்துள்ளது.  
                                
        முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Labels: , , ,

Monday, July 22, 2019

ஸ்ரீசக்ர நாயகி-1

நவராத்திரி 

நவராத்திரி நாளை துவங்குகின்றது. வழக்கம் போல் அம்பாளின் பல்வேறு கொலு கோலங்கள் தினமும் பதிவிட உள்ளேன். இவ்வருடம் முத்துசாமி தீக்ஷிதரின் கமலாம்பாள் நவாவர்ண கீர்த்தனைகளை உடன் பதிவிட அம்பாள் உத்தரவு.  இக்கீர்த்தனைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன, அடியேன் அறியாத மொழி எனவே திரு, குமரன் அவர்கள் பதிவிட்டதை ஒட்டி எழுதியுள்ளேன். அவர்களுக்கு நன்றி.          இன்றைய தினம்             மஹாளய அமாவாசையன்று, நவாவர்ண கீர்த்தனையின் கணபதி தியானம் மற்றும் அம்பாளின் தியான கீர்த்தனைகள் இடம் பெறுகின்றன. சென்ற வருடம் திருமயிலை கற்பகாம்பாளின் கொலு தரிசனத்தையும் கண்டு அருள் பெறுங்கள். 

அன்னை ஸ்ரீசக்ர நாயகி , அச்சக்கரத்தில் ஒன்பது ஆவரணங்கள் எனப்படும்  சுற்றுக்கள் உள்ளன. எனவேதான் அபிராமி பட்டரும் அன்னையை "ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே"என்று போற்றினார்.  


சென்னை போக் சாலை 
முத்துமாரியம்மன் நவராத்திரி அலங்காரங்கள்

நவாவர்ண கிருதிகளை வரிசையாக இசைக்கும்போது ஆரம்பத்தில் இரண்டு  த்யான கிருதிகளைஇசைப்பது ஒரு மரபு.

 முதலாவது கணபதி தியானம்
..
ராகம்-கௌளை                     தாளம்திரிபுட

பல்லவி

ஸ்ரீமஹா கணபதிரவதுமாம்  ஸித்தி விநாயகோ மாதங்க முக (ஸ்ரீ)

அனுபல்லவி

காமஜனக விதிந்த்ர ஸந்நுத கமலாலய தட- நிவாஸோ
கோமளதர பல்லவபதகர குருகுஹாக்ரஜ சிவாத்மஜ: (ஸ்ரீ)

சரணம்

சுவர்ணாகர்ஷண விக்னராஜோ பாதாம்புஜோ கௌர வர்ண வஸநாதரோ பாலசந்த்ரோ நராதிவிநுத லம்போதரோ
குவலயஸ்வவிஷாண -  பாசாங்குச மோதக ப்ரகாசகரோ
பவஜலதிநாவோ மூலப்ரக்ருதி ஸ்வபாவ சுகதரோ
ரவிஸஹஸ்ர ஸந்நிப தேஹோ கவிஜநனுத மூஷிகவாஹோ
அவநத தேவதா ஸமூஹோ அவிநாஸ கைவல்ய  தேஹ:  (ஸ்ரீ)

சகல சித்திகளையும் அருளச்செய்யும் யானைத் திருமுகம் கொண்ட ஸ்ரீ மஹாகணபதி என்னைகாத்தருள வேண்டும்மன்மதனின் தந்தையாகிய விஷ்ணு மற்றும் பிரம்மாஇந்திரன் போன்றதேவர்களால் வணங்கப்படுபவர்திருவாரூர் திருத்தலத்தின்  கமலாலயக் குளக்கரையில்அமர்ந்திருப்பவர்அழகுமிக்க தாமரை இதழ் போன்ற மென்மையான பாதங்களையுடையவர்.குருகுஹனான அழகு முருகனின்  மூத்தவன், பரமசிவனாரின் அன்பு மகன்.

சுந்தரருக்காக தங்கத்தை மாற்றுரைத்தவர். தாமரை பூக்களின்மீது நடனமாடுபவர்,வெண்பட்டாடை அணிந்தவர்சிரசில் பிறைச்சந்திரனை தரித்து பாலசந்த்ரன் எனப் பெயர் பெற்றவர்மனிதர்களால் பெரிதும் பிரியத்துடன் வணங்கப்படுபவர்தன் வயிற்றினில்உலகனைத்தையும் அடக்கி அதனால் பெருவயிறு படைத்தவர்கைகளில் குவளை மலர்,  ஒடிந்த தந்தம்பாசக்கயிறுஅங்குசம், மோதகம்ஆகியவற்றை ஏந்தியிருப்பவர்எப்போதும்ஒளிப்பிழம்பாக பிரகாசிப்பவர்பிறவிப் பெரும் கடலை கடக்க மனிதர்களுக்கு தோணியாகி கரை சேர்ப்பவர்ஆதி முதற்காரணப் பொருளாக விளங்குபவர்வணங்கியவர்களுக்கு மங்களத்தைஅளிப்பவர்,  கோடி சூர்யப் பிரகாசம் போன்று ஒளிமயமாகத் திகழ்பவர்மூஞ்சூறு வாகனர்தேவர் குழாங்களால் துதிக்கப்படுபவர்ஜீவாத்மாபரமாத்மா உறவின் கடைசி நிலையான ஐக்கியத்தை அருள்பவர்இப்படியெல்லாம்புகழ் பெற்ற கணபதி என்னை காப்பாற்றட்டடும்.

பலஸ்ருதி: வினாயகப்பெருமானின் அருள் கிட்டும். தடைகள் தகர்ந்து நலம் பெருகும்.


கற்பகாம்பாள் அன்ன வாகன சேவை 

கற்பகாம்பாள் காமதேனு வாகனத்தில் 
மஹாகௌரி கொலு 

கற்பகாம்பாள் கம்பாநதி காட்சி 


இரண்டாவது  பாடல் அம்பிகை தியானப் பாடல்.  வழி வழியாக முதலில் பாடப்படும் பாடல்.

ராகம் -  தோடி                                                               தாளம் -  ரூபகம்

பல்லவி

கமலாம்பிகே அம்ப  ஆஸ்ரித  கல்ப லதிகே சண்டிகே
ஜகதம்பிகே கம நீயா ருணாம் ஸுகே
கர வித்ருத ஸுகே  மாமவ  ......கமலாம்பிகே

அனுபல்லவி

கமலாஸநாதி பூஜித கமலபதே பஹு வரதே
கமலாலய தீர்த்த வைபவே ஸிவே கருணார்ணவே  (கமலாம்பிகே)

சரணம்

ஸகல லோக நாயிகே சங்கீத ரசிகே
ஸுக வித்வ ப்ரதாயிகே ஸுந்தரி கதமாயிகே
விகளேபர முக்திதாந நிபுணே அகஹரணே
வியதாதி பூத கிரணே விநோத சரணே அருணே

மத்யமம்

ஸகளே குருகுஹ சரணே ஸதாஸிவாந்த:  கரணே
      பாதி வர்ணே அகண்டைகரசபூர்ணே (கமலாம்பிகே)

திருவாரூரில் புகழுடன் விளங்கும் கமலாம்பிகையே உன்னை அநந்யமாய் சரணடைந்தவர்களுக்கு கற்பகக் கொடியே!,            சண்டிகாதேவியே! திருக்கரத்தில்   கிளியைஏந்தி  எழில் மிளிரும் சிகப்பு பட்டுச்சேலை உடுத்தி அழகாக விளங்குபவளேஅகிலஉலகத்திற்கும் அன்னையே!  என்னை காத்தருள்வாயாக.

தாமரையில் தோன்றிய பிரம்மா முதலியவர்களால் பூஜிக்கும் தாமரைத் திருவடிகளைஉடையவளேபக்தர்களுக்கு விரும்பிய வரங்களை அருள்பவளேகமலாலயம் என்ற குளத்துக்குசிறப்புச் சேர்ப்பவளேசிவமாகும் மங்கல வடிவினளேகருணைக் கடலே!  கமலாம்பிகையேஎன்னை காத்தருள்வாயாக.

சகல உலகங்களுக்கு நாயகியேஇசையை விரும்பி ரசிப்பவளேகவித்துவ ஞானத்தை நல்குபவளே,   அழகியவளேமாயையிலிருந்து விடுபட்டு இருப்பவளே, விதேக முக்தி அருளும் வல்லபம் உள்ளவளே! முப்பிறப்பிலும் செய்த பாவங்களை போக்குபவளே,பஞ்சபூதங்களுக்கும் சக்தியை அளிப்பவளேஒளி பொருந்தியவளேவிதவிதமாக ஆசனங்களைபோட்டு கொலு வீற்றிருக்கும் போது விநோதமான திருவடிகளின் நிலைகளினால் அழகியதோற்றம் தரும் பாதார விந்தங்களை  உடையவளே,  இளம் சிவப்பு வர்ணமுடையவளே

அனைத்துக் கலைகளுக்கும் உறைவிடமானவளேகுருவாய் வந்த முருகனின்  அன்னையே,என்றும் சதாசிவனின் உள்ளத்துள் உறைபவளேஅகார க்ஷகார முதலிய மாத்ருகா வர்ண சொரூபிணியே! ஒப்பற்ற ஆனந்தத்தின் பூரண வடிவாய் விளங்குபவளேதிருவாருரில்ஒளிர்பவளான கமலாம்பிகையே என்னைக் காத்தருள்வாய்.

காமகலா வடிவமாக விளங்கும் கமலாம்பிகையின் நிர்குண ஸ்வரூபம், சகுண நிராகாரம் முதலிய வடிவங்கள் இக்கீர்த்தனையில் விமர்சிக்கப்பட்டுள்ளன. 


அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Labels: , , ,

  • Other Articles
  • Unicode enable