Wednesday, October 14, 2020

நவராத்திரி அம்மன் தரிசனம் - 2

 காரைக்கால் சௌந்தராம்பிகை சமேத கைலாசநாதர் ஆலய கொலுவை அன்பர் மனோகரன் அனுப்பியிருந்தார் அதில் சில காட்சிகள்.




செங்கோல் சிறப்பு
  






துர்காம்பிகை 


காஞ்சிபுரம் அத்திவரதர் 



ஞானசம்பந்தருக்கு பால் கொடுத்த திருநிலை நாயகி



சீர்காழி பிரம்மபுரீஸ்வரர்

Labels: ,

Wednesday, July 24, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 5

நான்காவது  ஆவரணம்


கற்காம்பாள் மஹா கௌரி அலங்காரம்


வடிவுடை அம்மன் வள்ளலாருக்கு உணவிட்ட லீலை







திருமயிலை ஐதீகம் 

ஆடும் மயிலாய் உருவெடுத்து அர்சித்த நாயகி




********



வது ஆவரணம்
ராகம்:      காம்போதி                                                                            தாளம்அட

பல்லவி

கமலாம்பிகாயை  கனகாம் ஸுகாயை

கர்பூர வீடிகாயை நமஸ்தே நமஸ்தே     (கமலாம்பிகாயை)



அனுபல்லவி



கமலா காந்தாநுஜாயை காமேஸ்வர்யை அஜாயை
ஹிமகிரி தநுஜாயை ஹ்ரீம்கார பூஜ்யாயை


மத்யமம்
கமலாநகர விஹாரிண்யை கலஸமுஹ சம்ஹாரிண்யா
கமநீய ரத்ன ஹாரிண்யை  கலி கல்மஷ பரிஹாரிண்யை (கமலாம்பிகாயை)

சரணம்
ஸகல ஸௌபாக்யதாயகாம்போஜ சரணாயை
சம்ஷோபிண்யாதி ஸக்தி யுத சதுர் தாவரணாயை
ப்ரகட சதுர்தஸ புவந பரணாயை
ப்ரபல குருகுஹ ஸம்ப்ரதாயாந்தகரணாயை
அகளங்க ரூப வர்ணாயை அபர்ணாயை ஸுபர்ணாயை
ஸூக ரத்ருத  சாப பாணாயை  ஸோப நகர மநு கோணாயை
மத்யம்
ஸகுங்குமாதி லேப நாயை சரா சராதி கல்ப நாயை
சிகுர விஜித நீல கநாயை  சிதா நந்த பூர்ண கநாயை (கமலாம்பிகாயை)

பொன் போல் மிளிரும் மேலாடையை அணிந்தவளும்  பச்சை கர்ப்பூர   மணம் கமழும் தாம்பூலமணிந்து சிவந்த அதரங்களையுடைவளுமான கமாலாம்பிகைக்கு மீண்டும் மீண்டும்எனது  நமஸ்காரம்.

திருமாலின் சோதரியும்காமேஸ்வரரின் பட்ட மகிஷியும், பிறப்பற்றவளும்மலையரசன் இமவானின் பொற் பாவையும், ஹ்ரீம் என்ற மஹா மந்திரத்தால்  உபாசிக்கப்படுபவளும், கமலாநகரம் எனப்படும் திருவாரூரில் திகழ்பவளும்கொடியவர்களான அசுரர்களை வென்றொழித்தவளும்எழிலான் கான ரத்னமாலைகளை அணிந்து ஒளிவீசுபவளும்கலி காலத்தில் உண்டாகும் தோஷங்களுக்கு பரிஹாரமாக விளங்குபவளுமான கமலாம்பிகையைநமஸ்கரிக்கிறேன்.

சகல சௌபாக்கியங்களை தரவல்ல திருவடிகளை உடையவளும்சம்ஷோபிணீ, சர்வ வித்ராவிணி  முதலிய  பதினான்கு சக்திகளோடு  கூடிய நாலாவது ஆவரணம் உடையவளும்,பதிநான்கு லோகங்களையும் தன்னுளடக்கியவளும்புகழ் மிக்க குருகுஹனின்ஸம்பிரதாயங்களுக்கு ஆதாரமாக உள்ளவளும்மாசற்ற நிர்மல  மேனியழகையுடையவளும்,சிவனை குறித்து தவம் செய்யும் போது காய்ந்த இலைகளைக்கூட உண்ணாமல் விரதம் காத்துஅதனால் அபர்ணா என்று பெயர் பெற்றவளும் ஸுபர்ணா என்ற தேவதையாக இருப்பவளும்,அழகிய திருக்கரங்களில் வில்லும் அம்பும் கொண்டவளும்சோபை மேலிடும் வகையாக மனு கோணம் போன்ற பதிநான்கு கோண சக்கரத்திற்கு நாயகியும்  குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி  முதலியவற்றின் மணங்கமழும் குழம்பை திருமேனியில் பூசியுள்ளவளும்,   அசையும் அசையாப் 
 பொருள்களை படைத்தவளும்கருநீல முகிலை பழிக்கும்  கூந்தலைஉடையவளும்சிதாநந்த பரிபூரண வடிவமாக  விளங்குபவளுமான கமலாம்பிகைக்கு வணக்கம்; வந்தனம்.


ந்நான்காம் ஆவரணத்தின் சக்ரம் ஸர்வ சௌபாக்ய தாயக சக்ரம் ஆகும். இச்சக்ரம் பதினான்கு முக்கோணங்களாக  விளங்குகின்றதுஇச்சக்கரத்தின் நாயகி திரிபுரவாசினி.இதில் அட்டித்து விளங்கும் யோகினி சம்பிரதாய யோகினி. அவஸ்தை ஈச்வர விசாரம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் சம்ஷோபிணி, சர்வ வித்ராவிணி  முதலான பதினான்மர் ஆவர். 


 முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

Labels: , ,

Friday, October 14, 2016

நவராத்திரி நாயகி - 3

திருமயிலை வெள்ளீச்சுரம் காமாக்ஷி அம்பாள்
 அன்ன வாகன சேவை



அலை மகள் கலை மகளுடன் மலை மகள் 

காமாக்ஷி அம்பாள் 


அம்மன் அன்ன வாகனத்தில் கொலு




லை மகள் 
மற்றும் வெள்ளீஸ்வர ஐதீகம்
சுக்கிராச்சாரியார் வெள்ளீஸ்வரரை வழி பட்டு  கண் பெறுதல் 

கலைமகள்


அபிராமி அம்மை பதிகம்

வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர 
அருள் மழை பொழிந்தும் இன்ப

வாரிதியிலே நின்ன(து) அன்பெனுஞ் சிறகால்
வருந்தாமலே அணைத்துக்

கோடாமல் வளர்குஞ்சரம்  தொட்டுஎறும்பு கடை
கொண்டகரு ஆன சீவ

கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினைல் 
குறையாமலே கொடுத்து 

நீடாழி உலகங்கள்யாவையும் திருஉந்தி
நெட்டு தனிலே தரிக்கும் 

நின்னை அகிலங்களுக்கு அன்னை என்று ஓதாமல்
நீலி என்று ஒதுவாரோ?

ஆடாய நான் மறையின்  வேள்வியால் ஓங்கு புகழ் 
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!   (5)

பொருள்: சீவராசிகள் என்னும் உயிர்களை படைப்பவள் அன்னை. அந்த்ப்பப்யிர்கள் வாடாமல் என்றும் தழைத்து ஓங்கி உயர்ந்து  வளர, தன்  அருள் மழை பொழிந்து  அப்பயிர்களை இன்பக்கடலிலே ஆழ்த்தி தன் அன்பென்னும் சிறகால் அணைத்துக் கொள்பவளும் அவளே. வேதங்களின் வாக்குப்படி ந்தைபேரும்  யாகங்களால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமான திருக்கடவூரில் உறைபவளே! அமுதீசரின் இட பாகத்தை விட்டு ஒரு போதும் அகலாதவளே! கிளியை தன் திருக்கரத்தில் ஏந்தியவளே!அனைவருக்கும் அருள் புரிபவளே! அபிராமியே என்று அன்னையின் கருணையை வியந்து பாடுகின்றார் அபிராமி பட்டர்.

பல்குஞ்சரம் தொட்டு எறும்புகடை ஆனது ஒரு 
பல் உயிர்க்கும் கல் இடைப்

 பட்ட தேரைக்கும் அன்றுப்பவித்திடு கருப்
பையுறு ஜீவனுக்கும்

மல்கும் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்

மற்றும்  ஓரு மூவருக்கும் யாவர்க்கும் அவரவர்
மனசலிப்பு இல்லாமலே

நல்கும் தொழிற்பெருமை உண்டாய் இருத்தும்மிகு
நவநிதி உனக்கு இருந்தும்

நான் ஒருவன் வறுமைய்யால் சிறியன் ஆனால்அந்
நகைப்பு உனக்கே அல்லவோ?

அல்கலந்து உம்பர்நாடு அளவேதுக்கும் சோலை
                                                    ஆதி கடவூரின் வாழ்வே!
 
                              அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
                                                  அருள்வாமி! அபிராமியே!   (6)

பொருள்: யானை முதல் எறும்பு வரை உள்ள பல்விதமான உயிர்களுக்கும், கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருவில் உள்ள ஜீவனுக்கும் மற்றும் அசையும், அசையா பொருள்களுக்கும், தேவர் கூட்டத்திற்கும், மும்மூர்த்திகளுக்கும், மற்றும் அகிலத்தி; உள்ள அனைவருக்கும் அவரவர் மனம் சோர்வடையாதபடி அவர்கள் செய்ய வேண்டிய தொழில்களை தந்தருளும் பெருமைஉனக்கு உண்டு. அடர்ந்து இருள் செறிந்து வானுலகை அளப்பது போல் வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின் வாழ்வே! அமுதீசர் இடப்பாகம் ஒரு போதும் அகலாத அன்னையே! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளே! அனைவருக்கும் அளவிலாது அருள்புரிபவளே! அபிராமவல்லியே! நவநிதியும் உன்னிடம் இருந்தும் உன் பகதனாகிய நான் வறுமையில் வாடினால் அதனால் உண்டாகும் இகழ்ச்சி உனக்கல்லவோ? என்று அன்னையிடம் வினவுகிறார் அபிராமி பட்டர்.      

                                                                                                                                                                                             அம்மன் அருள் தொடரும். . . . .. ...  

Labels: , , , ,

  • Other Articles
  • Unicode enable