Friday, October 14, 2016

நவராத்திரி நாயகி - 2

  திருமயிலை கற்பகாம்பாள் அன்ன வாகனம் -2


நவராத்திரி மண்டபம் முழுவதும் 
எழிலாக அலங்கரிக்கப்பட்டுள்ளது


அலைமகள் கலைமகளுடன் 
மலைமகள் கற்பகாம்பாள் கொலு 



அன்ன வாகனத்தில் கற்பகாம்பாள்



 மலையரையன் பொற்பாவை கற்பகவல்லி




அலை மகள்



கலைமகள்




பொம்மைக் கொலு
 
                                                                                 கிராமம்  கொலு


திருவாதவூரரும் வைகையும் 



அபிராமி அம்மை பதிகம்

மகரவார் குழைமேல் அடர்ந்து குமிழ் மிதினில்
மறைந்து வாளைத் துரத்தி

மைக்கயலை வென்றநின் செங்கமல விழியருள்
வரம் பெற்ற பேர்கள் அன்றோ?

செகமுழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்து மேல்
சிங்காதனத்தில் உற்றுச்

செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்று  மிகு
திகிரி உலகு ஆண்டு பின்பு 

புகர்முகத்து ஐராவதப்பாகர் ஆகி நிறை
புத்தேளிர் வந்து போற்றிப்

போக தேவேந்திரன்  எனப்புகழ விண்ணில்
புலோமசையோடும் சுகிப்பர்

அகர முதல் ஆகிவளர் ஆனந்த ரூபியே! 
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (3)

பொருள்:  அன்னையின் நீண்ட கரிய விழியருள் பெற்ற அன்பர்கள்  ஒப்பற்ற வெண் கொற்றக் குடையின் கீழ்  உயரிய சிம்மாசனத்தில் அமர்ந்து, ஐராவதத்தின் மேல் அமர்ந்து   தேவலோகத்தையும் ஆளும் தேவேந்திரப்பதவியை பெறுவர்.  அமரர்கலும் வந்து போற்ற இந்திராணியுடன் சுகித்திருப்பர்.  இந்த அரியப்பேற்றை அளிப்பவள் ஆனந்தமே வடிவாய்க்கொண்டு, புராதன திருக்கடவூரின் உயிராய் விளங்கும், அமுதீசரின் வாம பாகம் அகலாத , கிளியை தன் திருக்கரத்தில் தாங்கியிருக்கும், அருளைப்பொழியும் அபிராமி அன்னை என்று பாடுகின்றார் அபிராமி பட்டர்.  


மறிகடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும்
மாதிரக்கரி எட்டையும்

மாநாகம் ஆனதையும் மாமேரு ஆனதையும்
மாகூர்மம் ஆனதையும் ஓர்

பொறிஅரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும்
புத்தேளிர் கூட்டத்தையும்

பூமகனையும் திகிரி மாயனையும் அரையினிற்
புலியாடை உடையானையும்

முறைமுறைகளாய் ஈன்ற முதியளாய்ப் பழைமை தலை
முறைகள் தெரியாத நின்னை

மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
மொழிகின்றது ஏது சொல்லாய்?

அறிவுடைய பேர் மனத்து ஆனந்த வாரியே
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (4) 

பொருள்: ஏழு கடல்களையும், எட்டு மலைகளையும்,  அஷ்ட திக் கஜங்களையும், பெரிய நாகத்தையும், மகா மேருவையும், பெரிய கூர்மத்தையும், ஆதி சேடன் தாங்கும்  பதினான்கு புவனங்களையும், தேவர் குழாத்தையும்,   தாமரையில் உறையும்  பிரம்மனையும்,  சக்கரத்தை ஏந்திய திருமாலையும், புலித்தோலை அணிந்த ஈசனையும் படைத்த முதியவள் நீ!  இப்படிப்பட்ட உன்னை மூவுலகில் உள்ளவர்கள் வாலைச்சிறுமி என்று அழைப்பது என்ன மடமை. ஞானமுடையோர் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆனந்தக் கடலே! திருக்கடவூரின் உயிரே! அமுதீசரின் இடப்பாகம் அகலாதவளே! கிளியை திருக்கரத்தில் தாங்கியவளே! அருள் புரிபவளே! அபிராமியே!. அம்மா அன்னை நீயே அனைத்திற்கும் ஆதி மூலம் என்று பாடுகின்றார் அபிராமிபட்டர்.   



                                                                                                                                                                அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal