Wednesday, July 24, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 6

ஐந்தாம்  ஆவரணம்


திருமயிலை வெள்ளீச்சுரம் காமாக்ஷியம்மன்
காமதேனு வாகனத்தில் 
மஹா கௌரி அலங்காரம்







வெள்ளீச்சுரம் ஐதீகம்= சுக்கிரன்(வெள்ளி)
 ஈசனை வழிபட்டு  இழந்த கண்ணை பெற்ற தலம் 




காமாக்ஷியம்மன் சரஸ்வதி அலங்காரம் 



மீனாக்ஷி திருக்கல்யாணம்  கொலு


***************


ந்தாவது ஆவரணம்

ராகம்பைரவி                                                                                             தாளம்ஜம்ப

பல்லவி

ஸ்ரீ கமலாம்பாயாபரம் நஹி ரே ரே சித்த
க்ஷித்யாதி ஸிவாந்த தத்வ ஸ்வரூபிண்யா (ஸ்ரீ கமலாம்பயா)

அனுபல்லவி

ஸ்ரீ கண்ட விஷ்ணு விரிஞ்சாதி ஜநயித்ரியா:
ஸிவாத்மக விஸ்வ கர்த்ரியாகாரயித்ரியா: 

மத்யமம்
ஸ்ரீகர பஹிர்தஸார சக்ர ஸ்தித்யா ஸேவித
பைரவீ  பார்கவீ பாரத்யா  (ஸ்ரீ கமலாம்பயா)

சரணம்
நாதமய ஸூஷ்மரூப ஸர்வ ஸித்தி ப்ரதாதி 
தச ஸக்த்யாராதித மூர்த்தேஸ்ரோத்ராதி தஸ-கரணா
த்மக குல கௌலிகாதி பஹுவிதோ பாஸித கீர்தே:
அபேத நித்ய ஸுத்த புத்த முக்த ஸச்சிதாநந்த மய
பரமாத் வைதஸ்பூர்தே:
ஆதி மத்யாந்த ரஹித அப்ரமேய குருகுஹமோதித
ஸர்வார்த்த ஸாதக பூர்த்தே:

மத்யமம்
மூலாதி நவாதார வ்யாவ்ருத்த தஸத்வநி
பேதஜ்ஞ யோகி ப்ருந்த ஸம்ரக்ஷண்யா: 
அநாதி மாயா-வித்யா கார்ய காரண விநோத
கரண படுதர கட‌க்ஷ வீ‌க்ஷண்யா (ஸ்ரீ கமலாம்பாயா) 
ஓ மனமே!  பூமிதத்வம் முதல் சிவதத்வம் வரையான தத்வங்களின் ஸ்வரூபமாக விளங்குபவளானஸ்ரீ கமலாம்பிகைக் காட்டிலும் வேறு மேலான தெய்வம் இல்லைஅவள்தான்  நீலகண்டன்விஷ்ணு,பிரம்மாமுதலியவர்களை படைத்தவள்அவள்தான் சிவமயமான இப்புவனங்கள் அனைத்தையும்  படைத்துஇயங்கச்செய்பவள்.   பத்து இதழ்கள் உள்ள பஹிர்தசார சக்ரத்தில்உறைபவள்இச்சக்ரம் அனைத்து ஐஸ்வர்யங்களையும் அருள வல்லது. அவளை  லக்ஷ்மி,சரஸ்வதிபைரவி ஆகியோர் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பேற்பட்டவளான ஸ்ரீகமலாம்பிகையை விட மேலான தெய்வம் வேறு கிடையாது.

அணிமா மற்றும் அஷ்டமாசித்திகளை அருளுபவள்,  அவளை நாதமய சூக்க்ஷரூபமாகசர்வசித்திப்ரதா முதலான பத்து சக்தி தேவியர்கள் ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள், அத்தகைய   மூர்த்தியாகயுள்ள அவளைக் காட்டிலும் வேறு மேலான தெய்வம் கிடையாது.

 கண் காது முதலாம் ஐந்து  ஞனேந்திரியங்கள்வாக்கு முதலான ஐந்து கர்மேந்திரியங்கள் ஆக பத்துஇந்திரியங்கள் சொரூபமானவள்குலகௌலீனி சக்தி தேவியரால் பல்வகையான உபாசனைசெய்யப் பெற்ற புகழை உடையவள்பேதங்களற்றஅழிவற்றமாசுகளற்றஞானஸ்வரூபமான, மாயையிலிருந்து விடுபட்டசச்சிதானந்தமானமேலான அத்வைதத்தின் எழுச்சியாக இருக்கும்அவளைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறொன்றும் இல்லைஅவள் தோற்றம் முடிவு முதலான அளவுகளுக்கு அப்பால் இருப்பவள்,  குருகுஹனை ஈன்று மகிழ்ச்சியடைந்தவள்,அனைத்து புருஷார்த்தங்களையும் நிறைவேற்றுபவள்.

 மூலாதாரம் முதல் தொடங்கி ஒன்பது ஆதாரங்களால் சுற்றப்பட்டவள்பத்து விதமானநாதங்களையும் அவற்றிற்குண்டான வேறுபாடுகளையும் அறிந்த யோகியர் கூட்டத்தைகாத்தருள்பவள்என்று தோன்றியது என்றே சொல்ல முடியாத மாயையின் வடிவானஅஞ்ஞானத்தின் காரிய காரணங்களை விலக்குவதற்கு மிகவும் திறமை வாய்ந்த கடைக்கண் பார்வைஉள்ளவளான அந்த ஸ்ரீ கமலாம்பிகையைவிட மேலான வேறு தெய்வம் இல்லை இல்லை இல்லவேஇல்லை என மனமே! புரிந்து கொள்.


இவ்வைந்தாம் ஆவரணத்தின் சக்ரம் ஸர்வார்த்த சாதகம் ஆகும். இச்சக்ரம்  வெளி பத்து முக்கோணங்களாக  விளங்குகின்றதுஇச்சக்கரத்தின் நாயகி திரிபுராஸ்ரீ. இதில் அட்டித்து விளங்கும் யோகினி குலோத்தீர்ண  யோகினி. அவஸ்தை குருபஸ்தனம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் சர்வகாமப்ரதா  முதலான பதின்மர் ஆவர். சர்வார்த்த சாதக சக்ரம் என்பதால் எல்லா புருஷார்த்தங்களும்  நிறைவேறும்.


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal