Saturday, October 15, 2016

அன்னையின் நவராத்திரி - 8

 எட்டாம்   நாள்  கொலு


முந்தைய பதிவுகள் :    முதல் நாள்,      இரண்டாம் நாள்,    மூன்றாம்நாள் ,   நான்காம்நாள்,      ஐந்தாம்நாள்,     ஆறாம் நாள்,  ஏழாம் நாள்

சிவதுர்க்கா


மஹா அஷ்டமி என்றும் துர்க்காஷ்டமி என்றும் அழைக்கப்படும் எட்டாவது நாளான இன்று அம்மையை நாம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றோம். இன்று வீட்டில் அன்னையை மகிஷாசுரமர்த்தினியாக அலங்கரித்து வழிபட காரிய வெற்றியும், சகல வியாபார அனுகூலங்களும் உண்டாகும். இன்று விரதம் இருப்பது மிகவும் உத்தமமானது.





ஸர்வ ஸ்வரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே!
பயேப்யஸ் -த்ராஹி-நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!

சமஸ்த சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும், எல்லாவற்றிக்கும் ஈஸ்வரியும், ஸமஸ்த சக்திகளும் கூடியவளுமான ஏ தேவி! துர்கே! எங்களை பலவித பயங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ! துர்க்கா தேவி உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்

                                                                *****************



அன்னைக்கு மிகவும் உகந்த மஹா அஷ்டமிநாளான நவராத்திரியின் எட்டாம் நாள் அன்னையை ஒன்பது வயது குழந்தையாக பாவித்து துர்க்கா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் பயம் நீங்கும் . இன்றைய ஸ்லோகம்

துர்க்காத்ராபதி பக்தம்யாஸ தா துர்க்கார்த்த நாயினீ துர்ஜுஷ்யாஸர்வதேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம் || 
(துர்க்கதியைப் போக்குபவளாய்தேவர்களாலும் அறிய முடியாதவளாய் பக்தர்களைக் காப்பவளாய் எந்த சக்தி விளங்குகிறதோ அந்த துர்கா தேவியாகிய சக்தியை வணங்குகிறேன்.) 

**********************


மஹா கௌரி துர்க்கா

(எல்லோருக்கும் அருளும் வண்ணம் தலையை சாய்த்து அன்னை ஒயிலாக தரிசனம் தரும் அழகை என்னவென்று சொல்ல)
நவராத்திரியின் எட்டாம் நாள் நவதுர்கைகளில் அன்னையை வெள்ளை ரிஷபத்தில் மேலேறி பவனி வரும் மஹா கௌரியாக வழிபடுகின்றோம்.

தூய உள்ளம், பொன்னிற மேனி , வெண்பட்டு ஆடை, ஜொலி ஜொலிக்கும் தங்க நகைகளோடு காட்சி தருபவள் மகா கௌரி. காளையை வாகனமாகக் கொண்டு உடுக்கை சூலத்தோடு காட்சி கொடுக்கும் மகாகௌரியின் மேனி காட்டில் சிவபெருமானை மணக்க தவமிருந்த போது கருத்தது. சிவபெருமான் கௌரியின் மேனியை கங்கையால் சுத்தம் செய்ததாகவும், மீண்டும் மகாகௌரி பொன்னிற மேனியைப் பெற்றதாகவும் கதைகள் சொல்லுகின்றன.

பக்தர்களின் குறைகள் தீர்த்து வைக்கும் மகாகௌரி என்றென்றும் சந்தோசத்தை அள்ளித் தருகிறாள். மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். சந்திரனைப் போன்ற வெண்மை நிறத்தவளாக வணங்கப்படுகின்றாள் மஹா கௌரி. 16 வயது கன்னிகையாக சிவபெருமானை மணப்பதற்கு முன்பான பருவம் இது. மஹா கௌரியை தூயவளாக சிவந்த வர்ணத்தவளாக வழிபடுகின்றோம்.



ஸ்வேத வ்ரூக்ஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதராஸுசி |
மஹாகௌரி சுபம் த்த்யாத் மஹாதேவ ப்ரமோத்தா ||

(வெள்ளை ரிஷபத்தில் ஏறி தூய வெள்ளை பட்டாடை உடுத்தி தூயவளாகவும், சிவபெருமானுக்கு எப்போதும் ஆனந்தம் அளிப்பவளுமான மஹா கௌரி துர்க்கா அடியேனுக்கு எல்லா மங்களங்களையும் அருளட்டும்.)

****************

முத்து மாரியம்மன் நாராயணி அலங்காரம்



ரோக நிவாரணி அஷ்டகம்
ஜெயஜெய சைலா புத்திரி பிரஹ்ம
சாரிணி சந்தர கண்டினியே
ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யா யன்ய யளே
ஜெயஜெய கால ராத்ரி கௌரி
ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே || (8)


ரோக நிவாரணி அஷ்டகம் நிறைவுற்றது

*********************


துக்க நிவாரணி அஷ்டகம்

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெயஜெய ஸ்ரீதேவி

ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
ஜெயஜெய ஸ்ரீதேவி

ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெயஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (8)

துக்க  நிவாரணி அஷ்டகம் நிறைவுற்றது

************

முத்து மாரியம்மன் 
பிரத்யங்கிரா தேவி அலங்காரம் 

அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி|

மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா சிவ பக்தாச்சா ஸ்வதேசோ புவனத்ரயம்||


அன்னம் நிறைந்தவளே, முழுமையானவளே, சங்கரன் மங்கலமே, அன்னை பார்வதியே, ஞானம் வைராக்யம் உண்டாக பிக்ஷையைக் கொடு அம்மா.

என் தாய் பார்வதி தேவி, தந்தையோ மஹேஸ்வரன், உறவினர்களோ சிவ பக்தர்கள், எனது தேசம் மூவுலகம்.

விஷ்ணு யோக மாயா அலங்காரம் 
 *********************

ற்பகாம்பாள் ம்கிஷாசுரமர்த்தினி அலங்காரம் 


நவராத்திரியின் எட்டாம் இரவு  அன்னை கற்பகவல்லிி சிம்ம வாகனத்தில் மஹிஷாசுர மர்த்தினியாக கொலு தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றாள் ஐம்புலன்கள் ஆற்றும் பஞ்சமாபாதகங்கள் மனிதனுக்கு உடன்பிறப்புகள். அவற்றை வென்று மெய்ஞ்ஞானம் பெறும் திறனின்றி நிற்கும் மாந்தர்களுக்கு காவல் அன்னை மகிஷாசுரமர்த்தினி.. என்னைத்தொழுவாரை சூழும் துன்பங்களை எல்லாம் திரிசூலம் ஏந்தி அழிப்பேன் அவர்கள் உள்ளத்தில் தெய்வீக ஒளி வீசச்செய்வேன் என்று உறுதியளிப்பது போல அஷ்ட புஜங்களுடன் அருட்காட்சி அருள்கின்றாள் கற்பகவல்லி. 

*******************************




கற்பகவல்லி பாயும் வெள்ளைக்குதிரையில் 
மீனாக்ஷியாக கொலு தர்பார்



கற்பகவல்லி பாயும் வெள்ளைக்குதிரையில் 
மீனாக்ஷியாக கொலு தர்பார்

வாசமலர் மருவுஅளக பாரமும் தண்கிரண
மதிமுகமும் அயில் விழிகளும்
வள்ளம் நிகர் முலையும் அனநடையும் நகை மொழிகளும்
வளமுடன் கண்டு மின்னார்
பாசபந்த்த்திடை மனம் கலங்கித் தினம்
பல வழியும் எண்ணி எண்ணீப்
பழி பாவம் இன்னதென்று  அறியாமல் மாயப்ர
பஞ்ச வாழ்வு உண்மையென்றே
 ஆசை மேலிட்டு வீணாக நாய்போல் திரிந்து
அலைவது அல்லாமல் உன்றன்
அம்புயப்போதென்னும் செம்பதம் துதியாத
அசடன் மேல் கருணை வருமோ?
மாசிலாது ஓங்கிய குணாகரிபவானிசீர்
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமிசுபநேமிபுகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமிஅபிராமிஉமையே! (3)

பொருள்: மணம் மிக்க மலர்கள் சூடிய கூந்தலும்குளிர்ந்த நிலவைப் போன்ற முகமும்கூர்மையான விழிகளும்கிண்ணத்திற்கு ஒப்பான மார்பகங்களும்அன்ன நடையும்சிரித்துப் பேசும் மொழிகளும்கண்டு மாதரின் மயக்கத்தில் மனம் கலங்கி நாள் தோறும் பழி பாவங்களை அறியாமல் பொய்யான இந்த உலக வாழவு உண்மை என்று ஆசை மிகுந்து நாய் போல் திரிந்து அலைந்து அலைவதல்லாமல்தாமரை போன்ற உனது  சிவந்த திருவடிகளை துதிக்காத இந்த அசடன் மேல் கருணை ஏற்படுமோ?\

குற்றமற்ற சிறந்த குணங்களின் இருப்பிடமாய் திகழும் தேவியேபவனின் (சிவன்பத்தினியான பவானியேதிருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியேநலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளேபல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையேசிவபெருமான் மகிழும் தேவியேஅபரிமிதமான அழகுடைய அபிராமியேமலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

இப்பாடலில் இந்த சம்சார சாகரத்தில் இருந்து தன்னை கரையேற்ற அன்னை கருணை காட்டவேண்டுமென்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்.


நன்றென்று தீதென்று நவிலும் இவ்விரண்டினில் முன்
நவின்றதே உலகில் உள்ளோர்
நாடுவார் ஆதலால் அடியேனும் அவ்விதம்
நாடினேன் நாடினாலும்
இன்று என்று சொல்லாமல் நினது திருஉள்ளமது
இரங்கி அருள் செய்குவாயேல்
ஏழையேன் உய்குவேன்மெய்யான மொழி இஃது உன்
இதயம் அறியாதது உண்டோ?
குன்றம் எல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள்
குமார தேவனை அளித்த
குமரிமரகத வருணிவிமலிபைரவிகருணை
குலவு கிரி ராஜ புத்ரீ!
மன்றல் மிகு நந்தவனங்கள் சிறை அளி முரல
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமிசுபநேமிபுகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமிஅபிராமிஉமையே! (4)

குன்றுகள் தோரும் எழுந்தருளி அடியார்க்கு அருள்புரியும் குமரக்கடவுளை அருளிய குமரியேமரகத நிறத்தவளேதூய்மையானவளேபயிரவியேகருணையுடன் விளங்கும் மலையரசன் மகளே!

மணம் கமழும் சோலைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்யும் திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியேநலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளேபல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையேசிவபெருமான் மகிழும் தேவியேஅபரிமிதமான அழகுடைய அபிராமியேமலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

நல்லது கெட்டது என்ற இரண்டில் அனைவரும் நாடுவது நல்லதையேஅது போலவே அடியேனும் நல்லதையே நாடினேன்,. அடியேன் அவ்வாறு செய்தது சரியாதவறா என்று  யான் அறியேன்எனவே இல்லை என்று சொல்லாமல் உன் திருவுளம் இரங்கி அருள் செய்தால் அடியேன் பிழைப்பேன்அது சத்தியமான வார்த்தைஉன் உள்ளம் அறியாதது உண்டோ?

அனைத்தையும் அறிபவள் அன்னை அவளன்றி ஒரு அணுவும் அசையாது என்று இப்பாடலில் பாடுகின்றார் அபிராமி பட்டர்.

கற்பகவல்லி பின்னழகு 


                                                                                                                                                    அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal