Saturday, October 15, 2016

அன்னையின் நவராத்திரி - 2

இரண்டாம் நாள் கொலு

முந்தைய பதிவுகள் : முதல் நாள்

முத்து மாரியம்மன்  புவனேஸ்வரி அலங்காரம் 


நவராத்திரியின் இரண்டாம் நாள் நாம் அம்பிகையை, அகிலாண்ட வல்லியை, நவாக்ஷரி என்னும் ஒன்பது வயது பெண்ணாக வழிபடுகின்றோம். வீட்டிலே அம்பிகையை இவ்வாறு வழிபட தானியம் பெருகும்.

*****************


கன்னியாக வழிபடும் போது நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்னையை மூன்று வயது குழந்தையாக பாவித்து த்ரிமூர்த்தியாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் தனதான்ய வளம் கிட்டும். இன்றைய ஸ்லோகம்

சத்வாதிபிஸ் திரிமூர்த்தியர்த்திர்யா தெளர்ஹி நாதா ஸ்வரூபிணி த்ரிகால வாபினிசக்திஸ் திரிமூர்த்திம் பூஜயாம்யஹம் ||

(சத்துவம் போன்ற குணங்களால், அனைத்து ரூபமாக, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் முக்காலங்களிலும் எந்த சக்தி வியாபித்திருக்கிறதோ அந்த த்ரிமூர்த்த்தியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

**********************ப்ரம்ஹசாரிணி துர்கா

நவதுர்க்கையாக வழிபடும் போது நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்னையை, இமவான் மகளாக பிறந்து சிவபெருமானை மணம் செய்து கொள்வதற்காக தவம் செய்யும் பருவத்தில் கன்னியாக, யோகினியாக, தபஸ்வினியாக ப்ரும்மசாரிணியாகவும் வழிபடலாம். சாட்சாத் பிரம்மம் ஆன அவளே தவ வடிவாக விளங்கி தவம் இருந்ததால் ப்ரம்ஹசாரிணி எனப் போற்றப் பட்டாள். நீல வடிவினாளாக அதாவது பக்தி வசமானவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

ததாநாகர பத்மாப்யாம் அக்ஷ மாலா கமண்டலூ |
தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அநுத்தமா ||
என்பது ப்ரம்ஹசாரிணி துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

(தனது தாமரைக் கரங்களில் அக்ஷமாலை, கமண்டலம் தாங்கி சச்சிதானந்த நிலையை அருளும் அன்னை ப்ரஹமசாரிணி அடியேனை காக்கட்டும். )

******************
திருமயிலை வெள்ளீச்சுரம் காமாக்ஷியம்மன்
அன்னவாகன கொலு  

சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ர்யம்பிகே கௌரி (தேவி) நாராயணி நமோஸ்துதே!

ஸ்வயம் மங்கள வடிவானவளும், சிவ ரூபிணியும், ஸகல காரியங்களையும் சாதிக்கக் கூடியவளும், சரணமடைந்தவர்களை காப்பாற்றுபவளும், முக்கண்ணியுமான கௌரி (தேவி)! நாராயணி! உன்னை அடி பணிந்து வணங்குகின்றோம்


முத்து மாரியம்மன் புவனேஸ்வரி அலங்காரம்

ரோக நிவாரண அஷ்டகம்

தண்டினி தேவி தக்ஷிணி தேவி
கட்கினி தேவி துர்க் கையளே |

தந்தனதான தனதன தான
தாண்டவ நடன ஈஸ் வரியே ||முண்டினி தேவி முணையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித்தீவி |

ரோக நிவாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா || (2)

திருமயிலையில் கலைமகள் கொலு 


துக்க நிவாரணி அஷ்டகம்

கானுறு மலரென கதிர் ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்
தானுறு தவஒளி தாரொளி மதியொளி
தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள் 

ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (2)


***********************


கற்பகவல்லி காமதேனு வாகன கொலு 

திருமயிலையில்  கேட்டதையெல்லாம்  அளிக்கும் கற்பகவல்லி தன் பெய்ருக்கேற்ப காமதேனு வாகனத்தில் கொலு மண்டபத்தில்  கொலு வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள்.  அன்னையின் அருட்பார்வை  இம்மையில் நோய் நொடியை தீர்க்கும்,  சகல செல்வத்தை வழங்கும் மறுமையில் முக்தியையும் அளிக்கும். அன்னயின் அருள் காமதேனுவாகவும் விளங்குகின்றது என்பதை விளக்கும் வகையில் காமதேனு வாகனத்தில் கௌரியாக அன்னை எழுந்தருளுகின்றாள்.

******************

நாக தாரிணி அலங்காரம் 

ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம்  செய்வது அம்பாளுக்கு நாம்  புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும்.  இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி  மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது  சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த  ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப்  அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.
இப்பதிவில் நான்காவது ஸ்லோகம் முதல் ஆறாவது ஸ்லோகம் வரை காணலாம் அன்பர்களே.

இந்த நான்காவது ஸ்லோகம் அன்னைக்கு அபிஷேகம் செய்வதை விளக்குகின்றது.

க்ஷ்யே ! யோகி-ஜநஸ்ய ரக்ஷித-ஜகத்-
 ஜாலேவிசால ஈக்ஷணே!
ப்ராலேய-அம்பு-படீர-குங்கும-லஸத்-
 கற்பூர மிச்ர-உதகை:  |
கோக்ஷீரைஅபி நாலிகேர-ஸலிலை:
 சுத்த-உதகைமந்த்ரிதை:
ஸ்நாநம் தேவி!   தியா மயா-ஏதத்
 அகிலம் ஸந்துஷ்டயே கல்பதாம் II       4.
ஹே தேவியோகிகளின்   இலக்கானவளேஉலகத்தைக் காப்பவளேவிரிந்து பரந்த திருவிழியுடையவளே!  பன்னீரும்சந்தனமும்குங்குமப்பூவும் பச்சைக்கற்பூரமும் கலந்த நீராலும்பசும்பால்இளநீர்மந்திரித்த சுத்த ஜலம் இவற்றாலும் மனதளவில் அபிஷேகம் செய்கிறேன்இவையெல்லாம் உன் மகிழ்ச்சி உண்டாக்கட்டும்.
ப்ரேலாயாம்பு: - பன்னீர், படீர - சந்தனம்
இந்த ஐந்தாவது ஸ்லோகம் அம்பிகைக்கு வஸ்திரம் சார்த்துவதை விளக்குகின்றது.


திருமயிலையில் சங்குகளால் ஒரு  கோலம் 


மலர்களால்  இன்னொரு கோலம் 

ஹ்ரீம்கார-அங்கித-மந்த்ர-லக்ஷித-தநோ!
 ஹேம-அசலாத் ஸஞ்சிதை:
ரத்நை உஜ்ஜ்வலம் -உத்தரீய-ஸஹிதம்
 கௌஸும்ப வர்ண அம்சுகம் I
முக்தா-ஸந்ததி-யஜ்ஞஸூத்ரம்-அமலம்
 ஸெளவர்ண தந்து-உத்பவம்
தத்தம் தேவி தியா மயா-ஏதத்அகிலம்
 ஸந்துஷ்டயே கல்பதாம் II       5.
ஹ்ரீங்காரத்தை உள்ளடக்கிய மந்திரத்தின் பொருளானவளேபொன் மலையிலிருந்து சேகரித்த ரத்தினங்கள் இழைத்ததும்உத்தரீயத்துடன் கூடியதுமான இளஞ்சிவப்பு நிற துகிலையும்,  பொன் சரடுடன் கூடிய முத்துமணி கோவையான தூய யஞ்ஞோப வீதத்தையும் அன்னையே தங்களுக்கு ஸமர்ப்பிக்கிறேன்இவை உமக்கு சந்தோஷத்தை உண்டு பண்ணட்டும்.
இந்த ஆறாவது ஸ்லோகம் அம்பாளுக்கு பலவித ஆபரணங்கள்   அணிவிப்பதை விளக்குகின்றது

ம்ஸைஅபி-அதி-லோபநீய-கமனே
 ஹாராவலீம்உஜ்ஜ்வலாம்
ஹிந்தோல த்யுதி-ஹீர-பூரித-தரே
 ஹேம-அங்கதே கங்கணே |
மஞ்ஜீரௌ மணி-குண்டலே மகுடம்-
 அபி-அர்த இந்துசூடாமணிம்
நாஸா-மௌக்திகம் அங்குலீய
 கடகௌ காஞ்சீம்-அபி  ஸ்வீகுரு   II  6.
ஹே தேவி!ராஜ அன்னங்களே உன் நடைப்பழக ஏங்கி விரும்புகின்றனவே   ஒளிரும் ஹாரத்தையும்அசைந்தாடும் பிரகாசமுள்ள வைரங்கள் பதித்த   தங்க தோள்வளைகளையும்கை வளையல்களையும்  சதங்கைகளையும்  குண்டலங்களையும் கிரீடம்,  அரைவட்டப் பிறைச் சந்திர   சிகை   ஆபரணம்,        முத்து   மூக்குத்தி,  மோதிரம்கடகம்ஒட்டியாணம் ஆகிய ஆபரணங்களால் உன்னை அலங்கரிக்கின்றோம்   இவற்றையெல்லாம் ஸ்வீகரித்துக்கொள்.   

திருமயிலை வெள்ளீச்சுரம்
காமாட்சியம்மன் அன்ன வாகன கொலு
அபிராமி அம்மை பதிகம்

மகரவார் குழைமேல் அடர்ந்து குமிழ் மிதினில்
மறைந்து வாளைத் துரத்தி

மைக்கயலை வென்றநின் செங்கமல விழியருள்
வரம் பெற்ற பேர்கள் அன்றோ?

செகமுழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்து மேல்
சிங்காதனத்தில் உற்றுச்

செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்று  மிகு
திகிரி உலகு ஆண்டு பின்பு 

புகர்முகத்து ஐராவதப்பாகர் ஆகி நிறை
புத்தேளிர் வந்து போற்றிப்

போக தேவேந்திரன்  எனப்புகழ விண்ணில்
புலோமசையோடும் சுகிப்பர்

அகர முதல் ஆகிவளர் ஆனந்த ரூபியே! 
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (3)

பொருள்:  அன்னையின் நீண்ட கரிய விழியருள் பெற்ற அன்பர்கள்  ஒப்பற்ற வெண் கொற்றக் குடையின் கீழ்  உயரிய சிம்மாசனத்தில் அமர்ந்து, ஐராவதத்தின் மேல் அமர்ந்து   தேவலோகத்தையும் ஆளும் தேவேந்திரப்பதவியை பெறுவர்.  அமரர்கலும் வந்து போற்ற இந்திராணியுடன் சுகித்திருப்பர்.  இந்த அரியப்பேற்றை அளிப்பவள் ஆனந்தமே வடிவாய்க்கொண்டு, புராதன திருக்கடவூரின் உயிராய் விளங்கும், அமுதீசரின் வாம பாகம் அகலாத , கிளியை தன் திருக்கரத்தில் தாங்கியிருக்கும், அருளைப்பொழியும் அபிராமி அன்னை என்று பாடுகின்றார் அபிராமி பட்டர்.  


மறிகடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும்
மாதிரக்கரி எட்டையும்

மாநாகம் ஆனதையும் மாமேரு ஆனதையும்
மாகூர்மம் ஆனதையும் ஓர்

பொறிஅரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும்
புத்தேளிர் கூட்டத்தையும்

பூமகனையும் திகிரி மாயனையும் அரையினிற்
புலியாடை உடையானையும்

முறைமுறைகளாய் ஈன்ற முதியளாய்ப் பழைமை தலை
முறைகள் தெரியாத நின்னை

மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
மொழிகின்றது ஏது சொல்லாய்?

அறிவுடைய பேர் மனத்து ஆனந்த வாரியே
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (4) 

பொருள்: ஏழு கடல்களையும், எட்டு மலைகளையும்,  அஷ்ட திக் கஜங்களையும்,  பெரிய நாகத்தையும், மகா மேருவையும், பெரிய கூர்மத்தையும்,  ஆதி சேடன் தாங்கும்  பதினான்கு புவனங்களையும், தேவர் குழாத்தையும்,   தாமரையில் உறையும்  பிரம்மனையும்,  சக்கரத்தை ஏந்திய திருமாலையும், புலித்தோலை அணிந்த ஈசனையும் படைத்த முதியவள் நீ!  இப்படிப்பட்ட உன்னை மூவுலகில் உள்ளவர்கள் வாலைச்சிறுமி என்று அழைப்பது என்ன மடமை. ஞானமுடையோர் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆனந்தக் கடலே! திருக்கடவூரின் உயிரே! அமுதீசரின் இடப்பாகம் அகலாதவளே! கிளியை திருக்கரத்தில் தாங்கியவளே! அருள் புரிபவளே! அபிராமியே!. அம்மா அன்னை நீயே அனைத்திற்கும் ஆதி மூலம் என்று பாடுகின்றார் அபிராமிபட்டர்.       

(அபிராமி அம்மன் பதிகப் பாடல்களுக்கு இன்னும் விரிவான  உரையை காண  அபிராமிதாசன் மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் "அபிராமி அம்மனின் பதிகங்கள்"   புத்தகத்தைக் காணலாம்)
*************************

                                                                                                                                             அம்மன் அருள் வளரும் ......

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal