Tuesday, October 29, 2013

ஆனந்த நவராத்திரி -3

திருமயிலை கற்பகாம்பாள் கொலு தர்பார் காட்சி


ஆடும் மயிலாய் உருவெடுத்து  அன்று  இறைவன் திருத்தாள்
நாடி அர்சித்த  நாயகியாய் நின் நாமங்களை
பாடி உருகி பரவசமாகும் அப்பாங்கு அருள்வாய் 
காடெனவே பொழில் சூழ் மயிலாபுரி கற்பகமே 

உடன் சரஸ்வதி

மாணிக்க வீணா முபலாய யந்தீம்
மதலஸாம் மஞ்சுள வாக்விலாசாம்!
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி

கற்பகாம்பாள் கொலு

அன்ன வாகன்மேறி வந்து அருளும் கற்பகவல்லி

அம்பாள் பின்னழகு

நீலநக்க நாயன்மார் சரிதம்

ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம்  செய்வது அம்பாளுக்கு நாம்  புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும்.  இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி  மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது  சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த  ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப்  அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.

இப்பதிவில் ஏழாவது ஸ்லோகம் முதல் பத்தாவது ஸ்லோகம் வரை காணலாம் அன்பர்களே.

இந்த ஏழாவது ஸ்லோகம் அன்னைக்கு சந்தனம் குங்குமம் - கண்மை முதலியவற்றால் அலங்கரிப்பதை  விளக்குகின்றது
ஸர்வாங்கே கனஸார-குங்கும-கன-
 ஸ்ரீகந்த-பங்காங்கிதம்
கஸ்தூரீ-திலகஞ்ச பாலபலகே
கோரோசனாபத்ரகம்  |
கண்டாதர்சன-மண்டலே நயனயோர்-
 திவ்யாஞ்ஜனம் தேSஞ்சிதம்
கண்டாப்ஜே ம்ருகநாபி-பங்க மமலம்
 த்வத்-ப்ரீதயே கல்பதாம்   ||
ர்வ-அங்கே கனஸார குங்கும-கன
 ஸ்ரீகந்த- பங்க-அங்கதிதம்
கஸ்தூரீ திலகம்  பால-பலகே
 கோரோசநா பத்ரகம்  |
கண்ட ஆதர்சன மண்டலே நயநயோ:
 திவ்ய-அஞ்ஜநம் தேsஞ்சிதம்
கண்ட-அப்ஜே ம்ருகநாபி-பங்கம்- அமலம்
 த்வத்-ப்ரீதயே கல்பதாம் || 7.
ஹேதேவி!உனது  திருமேனி  முழுவதும் பூசுவதற்கு கெட்டியான குங்குமப்பூபச்சை கற்பூரம் கலந்த சந்தனக் கலவையும்பளபளப்பான  பலகை போன்ற நெற்றியில் கஸ்தூரீ திலகமும்கண்ணாடி போன்று வளவளப்பும்பிரகாசமும் கொண்ட கன்னத்தில் கோரோசனைக் கோடும்கண்களில் திவ்யமான மையும்கழுத்து பாகத்தில் கஸ்தூரியுமான தொப்புள் விழுது ஆகியவற்றால் உனக்கு அலங்காரம் செய்கின்றோம்,  அது உனது மகிழ்ச்சியை கூட்டுவிப்பதாக இருக்கட்டும்.
கனஸார – கற்பூரம், குங்குமகன- குங்குமப்பூ, பாலபலகே- பலகை போன்ற நெற்றியில், கண்டாதர்சன மண்டலே- கண்ணாடி போன்ற கன்னப்பிரதேசத்தில், ம்ருகநாபி-பங்க – கஸ்தூரிக் குழம்பு.

இந்த எட்டாவது ஸ்லோகம்  அம்பாளுக்கு மலர் மாலை சார்த்தி அலங்கரிப்பதை விளக்குகின்றது.
கல்ஹாரோத்பல-மல்லிகா-மருவகை:
 ஸௌவர்ண-பங்கேருஹை:
ஜாதீ-சம்பக-மாலதீ-வகுலகைர்-
 மந்தார-குந்தாதிபி:  |
கேதக்யா கரவீரகைர்-பஹுவிதை:
 க்லுப்தா: ஸ்ரஜோ மாலிகா:
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
 ஸந்துஷ்டயே க்ருஹ்யதாம்  ||
ல்ஹார-உத்பல மல்லிகா மருவகை:
 ஸெளவர்ண பங்கேருஹை:
ஜாதீ சம்பக மாலதீ வகுலகை:
 மந்தார  குந்த ஆதிபி:  |
கேதக்யா கரவீரகைபஹுவிதை:
 க்லுப்தாஸ்ரஜோ மாலிகா:
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
 ஸந்துஷ்டயே  க்ருஹ்யதாம்   || 8.
ஹே தேவி! வரங்களை கொடுத்தருள்பவளேசெங்கழுநீர் மலர்,  கருங்குவளைமல்லிகைமருக்கொழுந்து,  மஞ்சள் தாமரைஜாதிப்பூ, சண்பகம்,  மகிழம்பூ,  தும்பைப்பூ, தாழம்பூ,  அலரிப்பூ ஆகிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள்சரங்கள் மனதளவில் ஸமர்பிக்கின்றேன்இவை உனக்கு மகிழ்ச்சியளிக்கட்டும்.
கல்ஹாரம் – செங்கழுநீர் மலர், உத்பலம்- குவளைப்பூ, மகுவக – மருக்கொழுந்து, வகுல- மகிழம்பூ, குந்த-தும்பைப்பூ, கேதகீ- தாழம்பூ, கரவீர- அலரிப்பூ, ஸ்ரஜ - மாலை
இந்த ஒன்பதாவது ஸ்லோகம்  அம்பிகைக்கு  தூபம்  காண்பித்து  வாசனை புகையூட்டி சுற்றுச்சூழலை  நறுமணம் கமழச் செய்வதை விளக்குகின்றது.
ந்தாரம் மதனஸ்ய நந்தயஸி யை-
 ரங்கை: ரனங்கோஜ்வலை:
யைர்- ப்ருங்காவலி - நீல குந்தல-பரைர்-
 பத்னாஸி தஸ்யாசயம் I
தானீமானீ தவாம்ப கோமலதராண்-
 யாமோதய லீலா க்ருஹாண்-
யாமோதாய தசாங்க-குக்குலு-க்ருதைர்-
  தூபை: ரஹம் தூபயே ||
ந்தாரம் மதனஸ்ய நந்தயஸி யை:
 அங்கை: அனங்க- உஜ்ஜ்வலை:
யை: ப்ருங்க- ஆவலி நீல- குந்தல-பரை:
  பத்னாஸி தஸ்ய- ஆசயம் I
தானீ- இமானீ தவ அம்ப! கோமலதராணி-
 ஆமோத-லீலா க்ருஹாணி-
ஆமோதாய தசாங்க குக்குலு-க்ருதை:
 தூபை: அஹம் தூபயே || 9.
ஹே அன்னையேஉனது மிக மிருதுவான வாசனை மிக்க கேலீக்ருஹங்களை தசாங்கம்குங்கிலியம்பசுநெய் முதலியவற்றால் புகைத்து மணம் கமழ வைக்கிறேன்முதலாவதாகமன்மதனையடக்கிய பரமேச்வரனுக்கே காம விகாரத்தையுண்டு பண்ணும் சில உடற்பாகங்கள்இரண்டாவதாக பரமேச்வரனின் புத்தியை ஸ்தம்பிக்கச்செய்யும் நீலமான கேசம் - மொய்க்கும் வண்டுக்கூட்டமென விளங்குமவற்றையும் புகை போட்டு மணக்கவைக்கிறேன்.
ஆயசம் – உள்ளம், குக்குலு – குங்கிலியம்
இந்த பத்தாவது ஸ்லோகம்  தீபம்  ஏற்றி அன்னையின் ஸந்நிதானத்தை  கண்டு வணங்குவதற்கு ஏதுவாக  பிரகாசமாக்குவதை விளக்குகின்றது.
க்ஷ்மீ- முஜ்ஜ்வலயாமி ரத்ன-நி்வஹோத்-
 பாஸ்வத்தரே மந்திரே
மாலாரூப- விலம்பிதைர்-மணிமய-
 ஸ்தம்பேஷு ஸம்பாவிதை:  I
சித்ரைர்- ஹாடக-புத்ரிகாகரத்ருதைர்
 கவ்யைர் க்ருதைர் வர்த்திதை:
திவ்யைர் தீபகணைர்- தியா கிரிஸுதே
 ஸந்துஷ்டயே கல்பதாம் II
க்ஷ்மீம்- உஜ்வலயாமி ரத்ன-நிவஹ- உத்
பாஸ்வத்தரே மந்திரே
மாலா-ரூப விலம்பிதை:மணிமய
ஸ்தம்பேஷு ஸம்பாவிதை:  I
சித்ரை: ஹாடக-புத்ரிகா-கர-த்ருதை:
 கவ்யை: க்ருதைவர்த்திதை:
திவ்யை: தீபகணை: தியா கிரிஸுதே!
ஸந்துஷ்டயே கல்பதாம் II   10.
இரத்தின கற்கள் இழைத்த உனது திருக்கோவிலில் மாலை போல் தொங்குகின்றவையும்இரத்தினமயத் தூண்களில் நிழலாகத் தெரிகின்றனவையும்பலவித தங்கப் பெண் பதுமைகளால் கையில் ஏந்திய வண்ணம் என்னும் பலவித   பசுநெய் விளக்குகளால் மனதளவில் அழகை கூட்டுவிக்கிறேன்.  மலை மகளே அது உன்னை மகிழ்விக்கட்டும்.
லக்ஷ்மீம்- பிரகாசத்தை, ஹாடக புத்ரிகா_ தங்கப் பதுமை
                                                                                         அம்மன் அலங்காரங்களும், ஸ்தோத்திரமும் தொடரும்...........

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal