Tuesday, October 29, 2013

ஆனந்த நவராத்திரி -1

அம்மன் அலங்காரங்கள் 

முதற்கண் அன்பர்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி  நல் வணக்கங்கள்.

வழக்கம் போல் இந்த வருடமும்

பத்து நாட்கள் பத்து வித அலங்காரம் 
அன்னை முத்துமணி மண்டபத்தில் அமர்ந்திருந்தாள்  -

 என்றபடி அன்னை இந்த நவராத்திரி  இரவில்  அளிக்கும் கொலுக் காட்சிகளை கண்டு அவள் அருள் பெறுங்கள்.

 அத்துடன் ஆதி சங்கர பகவத் பாதாள் இயற்றிய  "ஸ்ரீ மந்தர-மாத்ருகா- புஷ்பமாலா-ஸ்தவம்"  என்னும் ஸ்தோத்திரத்தை படித்து மானசீகமாக அன்னைக்கு பூஜை செய்யுங்கள்.

 (அடியேன் முறையாக சமஸ்கிருதம் பயின்றவன் அல்ல, ஆச்சாரியரின் அற்புத ஸ்தோத்திரத்தால் ஈர்க்கப்பட்டு, பல இடங்களில் படித்த அதன் விளக்கத்தை தமிழில் அடியேனின் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் கொடுக்க முயற்சி செய்துள்ளேன், குற்றம் ஏதுமிருந்தால், அன்புடன்  சுட்டிக் காட்டுங்கள் பிழையை சரி செய்ய ஏதுவாக இருக்கும் .)   


சென்னை அசோக் நகர் கருமாரி த்ரிபுரசுந்தரி ஆலயத்தில் நடைபெற்ற ஒரு கோடி லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை வைபவத்தின் போது நடைபெற்ற சண்டி ஹோமத்தின் போது அமைக்கப் பெற்ற சண்டி தேவி. 


எந்தக்கோவில்? எந்த அம்பாள்? எடுத்தவர் யார்? என்றெல்லாம் தெரியவில்லை. ஒரு புகைப்பட நிலையத்தில் பார்த்தவை.  அம்மனின் படங்களைப் பார்த்த போது நவராத்திரி அலங்காரப்படங்களாக உள்ளனவே என்று அவர்களிடம் கேட்டு வாங்கின படங்கள் இவை. 

எடுத்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனந்த கோடி நன்றிகள் உங்கள் மூலமாக அன்னையின் இந்த அற்புத தரிசனத்தை இந்த நவராத்திரி சமயத்தில்  அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள  ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.


 சரஸ்வதி அலங்காரம்

 சாரதாம்பாள் அலங்காரம்

உற்சவர் சரஸ்வதி அலங்காரம்


ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம்  செய்வது அம்பாளுக்கு நாம்  புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும்.  இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி  மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது  சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த  ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப்  அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.

இந்த ஸ்தோத்திரத்தின் முதல் ஸ்லோகத்தினால் அன்னை  ஆவாஹனம் செய்யப்பட்டு (வரவேற்கப்பட்டு) மானசீக தியானத்தின் மூலம் ஆசனம் அளிக்கப்படுகின்றாள்.

கல்லோலோல்லஸிதாம்ருதாப்தி லஹரீ-
 மத்யே விராஜன்-மணி
த்வீபே கல்பக-வாடிகா-பரிவ்ருதே
 காதம்பவாட்யுஜ்ஜ்வலே |
ரத்னஸ்தம்ப-ஸஹஸ்ர-நிர்மித-ஸபா-
 மத்யே விமானோத்தமே
சிந்தாரத்ன-விநிர்மிதம் ஜனனி தே
 ஸிம்ஹாஸனம் பாவயே ||

ல்லோலஉல்லஸித அம்ருத- அப்தி  லஹரீ-
 மத்யே விராஜன்-மணி-
த்வீபே கல்பக வாடிகா பரிவ்ருதே
 காதம்ப-வாட்-உஜ்ஜ்வலே  |
ரத்ன-ஸ்தம்ப-ஸஹஸ்ர-நிர்மித-ஸபா-மத்யே விமான
 உத்தமே சிந்தா-ரத்ன விநிர்மிதம் ஜனனி தே
ஸிம்ஹாஸனம் பாவயே   ||   1.
அலை பொங்கும் அமிர்தக்கடலின் அலைகளின் நடுவே விளங்கும் மணித்வீபத்தில்கற்பகச்சோலை சூழ்ந்த கதம்ப வனம் விளங்குகிறதுஅவ்வனத்தில் ஆயிரக்கணக்கில் இரத்தினத் தூண்கள் அமைந்த சபையின் நடுவில் சீரிய விமானத்தின் கீழே சிந்தாமணியால் வடித்த சிம்மாசனத்தை ஹே தாயேமனதிற் பாவிக்கிறேன். ( அன்னையே வந்து அமர்ந்து எங்களின் மானசீக பூஜை ஏற்று அருள் புரிவாயாக)

 பொருள்: காதம்பவாடீ- கதம்பமரச் சோலை

அன்னை வந்து அமர்ந்தவுடன்  அவளது திருக்கோலத்தை வர்ணித்து நம் மனத்தில் இருத்தும்  தியானமே இந்த இரண்டாவது ஸ்லோகம்.
ஏணாங்கானல-பானுமண்டல-லஸச்
 ச்ரீசக்ர-மத்யே ஸ்திதாம்
காலார்க்க-த்யுதி-பாஸுராம் கரதலை: 
 பாசாங்குசௌ பிப்ரதீம் |
சாபம்பாணமபி ப்ரஸன்னவதனாம்
 கௌஸும்ப-வஸ்த்ரான்விதாம்
தாம் த்வாம் சந்த்ர கலாவதம்ஸ-மகுடாம்
சாருஸ்மிதாம் பாவயே ||  
ணாங்க-அநலபானு-மண்டல-லஸத்-
 ஸ்ரீசக்ர-மத்யே ஸ்திதாம்
பால-அர்க-த்யுதி-பாஸுராம் கர-தலை:
 பாச அங்குசௌ  பிப்ரதீம் |
சாபம் பாணம்-அபி ப்ரஸன்ன-வதனாம்
கௌஸும்ப-வஸ்த்ர-அந்விதாம்
 தாம் த்வாம் சந்த்ரகலா-வதம்ஸ மகுடாம்
 சாரு-ஸ்மிதாம் பாவயே II         2.
சந்திரன், அக்னிசூர்ய மண்டலங்கள் விளங்கும் ஸ்ரீசக்ரத்தின் நடுவில் வீற்றிருப்பவளும்இளம் சூரியன் போன்று ஒளிர்பவளும்திருக்கரங்களில் பாசம்அங்குசம்வில்அம்புஇவற்றை தரித்தரிப்பவளும்மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன்காவிவஸ்திரம் அணிந்தவளும்சந்திரபிறை அலங்கரிக்கும் கிரீடம் அணிந்தவளும்அழகிய புன்னகை தவழும்  முக மண்டலத்துடன் கூடிய  உன்னை மனதில் காண்கிறேன்.
ஏணாங்க: - சந்திரன்

நாம் பூஜையின் போது செய்யும் மற்ற உபசாரங்களை மானசீகமாக செய்வது போல  மற்ற ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.
இந்த மூன்றாவது ஸ்லோகம்  ஆசமநம் அளிப்பதை விளக்குகின்றது.
ஈசானாதிபதம் சிவைகபலகம்
ரத்னாஸனம் தே சுபம்
பாத்யம் குங்கும-சந்தனாதி-பரிதை-
ரர்க்யம் ஸரத்னாக்ஷதை |
சுத்தை-ராசமனீயகம் தவ ஜலைர்-
பக்த்யா மயா கல்பிதம்
காருண்யாம்ருத-வாரிதே ததகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம்  ||
சாந-ஆதிபதம் சிவ-ஏக-பலகம்
  ரத்ன ssசனம் தே சுபம்
பாத்யம் குங்கும சந்தனாதி-பரிதை:
 அர்க்யம் -ரத்ன-அக்ஷதை: I
சுத்தைஆசமநீயகம் தவஜலை:
 பக்த்யா மயா கல்பிதம்
காருண்ய அம்ருத வாரிதே தத் அகிலம்
 ஸந்துஷ்டயே கல்பதாம் II        3.
ஈசானன்பிரம்மாவிஷ்ணுருத்ரன் முதலியவர்களை கால்களாகவும்சதாசிவன் ஒருவனையே பலகையாகவும் கொண்ட  நல்ல இரத்தினமய சிம்மாசனம்ஹே அன்னையேஉனது மகிழ்ச்சிக்காக அமையட்டும்குங்குமம்சந்தனம் இவை கலந்த பாத்தியமும்,( திருப்பாதத்தில்) ரத்தினமாகிய அக்ஷதையுடன் அர்க்யமும் (திருக்கரங்களில்)சுத்த ஜலத்தால் ஆசமநீயகமும் (திருமுடியில்) நான் பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன்ஹே கருணைக் கடலே!  இவையெல்லாம் உனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கட்டும்.
ஈசானாதிபதம்-  ஈசானன் முதலியவர்களை கால்களாகவும், 
சிவைக பலகம்- சதாசிவன் ஒருவனையே பலகையாகவும் கொண்ட (இரத்தின சிம்மாசனத்தில்)

அம்மன் அலங்காரங்களும், ஸ்தோத்திரமும் தொடரும்...........

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal