Thursday, August 11, 2011

ஆடி வெள்ளி அம்மன் தரிசனம்


ஆடி வெள்ளிக் கிழமையன்று அம்மனுக்கு மஞ்சள் காப்பு
ஆதி கருமாரியம்மனுக்கு அழகிய மஞ்சள் காப்பு அழகிய மஞ்சள் காப்புஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் ஏன், இது அயன மாதம் அதாவது சூரியன் தெற்கு நோக்கிய பயணத்தை துவக்கும் காலம். தேவர்களுக்கு மாலைக் காலம் ஆரம்பம் அவர்கள் தூங்கச் செல்லும் காலம். பித்ருக்கள் பூமிக்கு வரும் காலம் பித்ருக்களுக்கு பூஜை செய்ய உகந்த காலம்.

இந்த ஆடி மாதத்தில் மழை நன்றாகப்பெய்து பூமித்தாய் சூல் கொள்ளும் காலம். நதியிலே புதுப்புனல் நுரையுடன் பொங்கி ஓடும் காலம். ஜகன்மாதா, ஜகத்ஜனனி அம்பிகையே சூல் கொண்டதாக கருதி பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தும் காலம்.

ஆடி வெள்ளியும் செவ்வாயும் அம்மனுக்கு விசேஷமானவை. தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெள்ளி தொடங்கி ஞாயிறுவரை ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் கூழ் வார்க்கும் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

அடியேனின் கோவை மாவட்டத்தில் இந்த கூழ் வார்க்கும் உற்சவம் கிடையாது. ஆனால் வெள்ளி அன்று மாரியம்மன் கோவிலுக்கு சென்று வருவோம். பின்னர் சென்னை வந்த பின் இங்கிருக்கும் கோவில்களில் சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வருவோம்.


இதற்கு முன் உற்சவத்தின் பொது இது போல மின் விளக்குகளால் அமைக்கப்பட்ட தெய்வ உருவங்கள் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். வீதி முழுவது மின் விளக்குகளால் ஒளிர்வதையும் பார்த்திருக்கின்றேன்.

இந்த வருடம் புதிதாக பிரம்மாண்டமான தெய்வ சிலைகளையே வைத்து அலங்காரம் செய்திருப்பதை பார்க்க நேர்ந்தது. அதுவும் ஒரு கோவிலில் அல்ல , மூன்று கோவில்களில் . கையில் கேமரா இருந்ததால் அவற்றை புகைப்படம் பிடித்தேன். இந்த நிறை ஆடி வெள்ளி, வரலக்ஷ்மி விரத நாளில் அந்த அரிய காட்சிகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.


மேற்கு சைதாப்பேட்டையில் கண்ட காட்சி உடன் சூலமேந்திய கருமாரி நின்ற கோலத்தில் மற்றும் திருக்கையிலாய மலையில் சிவபெருமான் , சிவலிங்கம் என்று மிக பிரம்மாண்டமாய் அமைத்திருந்தார்கள்.


அம்மனுக்கு இரு புறமும் தங்க அன்னங்கள்

திரிசூலி கருமாரி நின்ற கோலத்தில்திருக்கயிலைக்காட்சி
இரண்டாவது ஆலயம், வெங்கடநாராயண சாலையில். கருமாரி அம்மன் தர்பார், கணேசன் துவாரபாலகிகள் மற்றும் காவற்காரர்களுடன்.

கருமாரி அம்மன் தர்பார்மூன்றாவது கோயில் மேற்கு மாம்பலம் கார்ப்பரேஷன்காலனி முத்து மாரியம்மன் ஆலயம், கணேசன், முருகன் . விளக்கேந்திய மங்கையர் என்று அம்மன் தர்பார்.முத்து மாரியம்மன் தர்பார்

சினிமாவின் தாக்கமா? அரசியல்வாதிகள் போல் அம்மனுக்கும் கட் அவுட்டா? வங்காளத்தில் துர்கா பூஜையின் போது இது போலத்தான் அம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்வார்கள் அதன் பாதிப்பா? என்ன ஆனாலும் அருமையான காட்சிகள் தாங்களும் கண்டு மகிழுங்கள்.

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி!
Labels: , ,

2 Comments:

Blogger கவிநயா said...

இப்போதான் பார்த்தேன். அம்மாவின் படங்கள் மனசை அள்ளுகின்றன. மிக்க நன்றி.

8:08 PM  
Blogger Kailashi said...

//இப்போதான் பார்த்தேன்.//

ரிப்பீட்டு நானும் தங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் பார்த்தேன்.

மிக்க நன்றி கவிநயா.

2:04 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal