அன்னையின் நவராத்திரி அலங்காரம் 6
நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னையை, அங்காள ஈஸ்வரியை, ஸ்ரீ வித்யா பீஜாக்ஷர ரூபிணியாக சாம்பரி என்ற பெயரில் வழிபடுகின்றோம்.
இன்று சஷ்டியன்று தான் வங்காளத்திலே மஹா கைலாசத்திலிருந்து, பூலோகத்திற்கு துர்க்கா தேவி இறங்கி வந்து அருள் பாலிக்கும் துர்க்கா பூஜை தொடங்குகின்றது.
Mother in Yoga nidra
அன்னை பள்ளி கொண்ட கோலம்
மதுரை மீனாக்ஷி அலங்காரம்
மஹா லக்ஷ்மி அலங்காரம்
Mahalakshmi kolu
மஹா லக்ஷ்மித் தாயார் கொலு
Mahisasuramardini alangaram
மஹா துர்க்கா அலங்காரம
ஜபோ ஜல்பஷ் ஷில்பம் ஸ்கலமபி முத்ராவிரசனா
கதி: ப்ரதாக்ஷிண்ய க்ரமண மஷநாத்யாஹுதிவிதி:
பரணாம: ஸம்வேஷ: ஸுகமகில மாத்மார் பணத்ருஷா
ஸபர்யா பர்யாயஸ்தவ பவது யன்மே விலஸிதம்.
பகவதி! எனது பேச்செல்லாம் உனது ஜபமாகவும், எல்லா செயல்களும் முத்திரைகளாகவும், எனது நடை பிரதக்ஷிணமாகவும், எனது உணவு உனக்கு செய்யும் ஆஹுதியாகவும், நான் படுத்துக் கொள்வது மற்றும் எனக்கு சுகத்தை கொடுக்கக் கூடியவை எல்லாம் உனக்கு செய்யும் பூஜைகளாகவும் ஆகட்டும்.
4 Comments:
அன்னை பள்ளி கொண்ட கோலம் புதியதாய் இருந்தது. நன்றி.
சென்னை மகாலிங்கபுரம் பிரஹத் சுந்தர குஜாம்பாள் சமேத மஹாலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் அம்மனுக்கு செய்த அலங்காரம்.
தினமும் காலையும் மாலையும் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, மாலையில் மூலவர் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம். துர்க்கையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் என்று மிகவும் விசேஷமாக இக்கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடபப்டுகின்றது.
சென்னையில் உள்ளவர்கள் ஒரு தடவையாவது நிச்சயம் இக்கோவிலுக்கு சென்று அன்னையை வழிபட அனைத்து நலங்களும் கிட்டூம் என்பது கண்கூடான உண்மை.
படங்கள் அருமை கைலாஷி ஐயா..
வந்து தரிசித்தத்ற்கு நன்றி மதுரையம்பதி ஐயா.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home