Thursday, October 02, 2008

அன்னையின் நவராத்திரி அலங்காரம் 1



நவராத்திரி என்பது சக்தியாம் அன்னையை மஹா துர்கா, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி என்னும் முப்பெரும் தேவிகளாக வழிபடும் காலம். பத்து நாட்கள் பத்து வித அலங்காரம் அன்னை முத்து மணி மண்டபத்தில் அமர்ந்திருப்பாள் என்றபடி நாம் உய்ய கொலுவிருக்கும் அம்மையின் பல்வேறு அலங்காரங்கள். முந்தைய நவராத்திரிகளில் எடுக்கப்பட்ட படங்கள்.



(இது ஒரு மறு பதிவு சென்ற வருடங்களில் அன்னையின் எழிற்கோலத்தை தரிசிக்காத அன்பர்களுக்காக)









The first day of Navarathri Mother is worshipped as a 3 year old child.







முதல் நாள் நாம் அன்னை ஆதி பராசக்தியை மூன்று வயது பாலையாக பாவித்து வழிபடுகின்றோம்.அன்பர்கள் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியை மூன்று வயதுள்ள குழந்தையாக தங்கள் இல்லங்களில் வழிபடுவதால் சகல மங்களங்களும் பெருகும்.





MAHISASURAMARTHINI ALANGARAM
மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்









MAHA SARASWATHI ALANGARAM
மஹா சரஸ்வதி அலங்காரம்



DURGA POOJA

துர்கா பூஜை



DHANALAKSHMI ALANGARAM
தனலக்ஷ்மி அலங்காரம்






காமாக்ஷி அம்மன் பாலாபிஷேகம் செய்யும் கோலம்


As technology improves so also evrything, last year the traditional Kamakshi worshipping Shiva at Kancheepuram also went hitech with motor et al as

Kamakshi doing milk abishekam to Shiva.





யா தேவி ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


சகல ஜீவ ராசிகளிலும் தாயின் ரூபமாக விளங்கும் அந்த ஜகன் மாதாவை (சந்தான லக்ஷ்மி ) வணங்குகிறோம்.


யாதேவி ஸர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்த தேவியானவள் சகல உயிரினங்களிலும் சக்தி ரூபமாக உள்ளனளோ அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியை வணங்குகிறோம்.


யாதேவி ஸர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்த தேவியானவள் சகல உயிரினங்களிலும் லக்ஷ்மியுருவில் உள்ளனளோ அந்த மஹா லக்ஷ்மியை வணங்குகிறோம்.


யாதேவி ஸர்வ பூதேஷு புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்த தேவியானவள் சகல உயிரினங்களிலும் புத்தி ரூபமாக உள்ளனளோ அந்த மஹா சரஸ்வதியை வணங்குகிறோம். .

3 Comments:

Blogger Kavinaya said...

எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்... இப்பதான் பார்த்தேன், நவராத்திரி பதிவுகளை.

10:49 AM  
Blogger S.Muruganandam said...

அன்னை உங்களை அழைத்து தரிசனம் தந்து விட்டாள். அவள் கருணையே கருணை.

தினமும் தரிசியுங்கள்.

7:07 PM  
Blogger S.Muruganandam said...

படங்களின் மேல் கிளிக்கினால் இன்னும் பெரிய அளவில் அன்னையைக்காணலாம்.

7:14 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal