தாயே கருமாரி! எங்கள் தாயே கருமாரி!
மாரியம்மன் வழிபாடு தமிழகம் எங்கும் பரவியுள்ளது . மண்ணளக்கும் மகமாயின் ஆலய்ம் இல்லாத கிராமமே தமிழ் நாட்டில் இல்லை என்று கூறிவிடலாம். மாரி என்றால் மழை. தன்து அருள் மழையைப் பெய்யும் அம்மனுக்கு அதுவே திருநாமமாக அமைந்தது. குறிப்பாக வெயில் காலங்களில் தோன்றும் அம்மை போன்ற கொள்ளை நோய்களை தீர்த்து காப்பவள் மாரியம்மன் என்பது ஐதீகம். அந்த மாரித்தாய் சென்னையில் திருவேற்காட்டில் கருமாரியாக எழுந்தருளி மஞ்சளால் மகிமை புரிந்து, எலுமிச்சம் பழத்திலே அதிசயம் காட்டி , வேப்பிலையால் வெப்பு நோய் தீர்த்து, சாம்பலினால் உயிர் காப்பவளாய் அருள் பாலிக்கின்றாள்.
தமிழக்த்தின் தொண்டை மண்டலத்தின் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 32. அவ்ற்றுள் ஒன்று இந்த திருவேற்காடு. திருஞான சமப்ந்தர் இத்தலத்தைப்பற்றி பதிகம் பாடியுள்ளார். இத்தலத்தில் பிரளய காலத்திற்க்குப் பின் வேதங்களே வேல் மரங்களாகி இறைவனை வழிபட்டன. வேலங்காடே வேற்காடு ஆகியது. உலகத்தை சமன் செய்ய தென்னாடு வந்த கும்பமுனி அகத்தியருக்கு சிவபெருமான் திருக்கயிலாய மலையில் தனக்கும் மலையரசன் பொற்பாவை உமையம்மைக்கும் நடந்த திருமண கோலத்தைக் காட்டியருளிய தலம். திருவேற்காட்டில் பாலாம்பிகை என்னும் வேற்கண்ணி அம்மையுடன் வேதபுரீஸ்வரர் திருமணக் கோலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார். எனவே இத்தலம் "வட வேதாரண்யம்" என்றும் அழைக்கப்படுகின்றது.
பூத வாகனத்தில் கருமாரி
விநாயகர், முருகன், திருமால் , பிரம்மன் பூஜித்த தலம் அஷ்ட திக் பாலகர்கள் வேத நாயகனை பூஜித்த தலம், சூரியன் தன்க்குரிய ஞாயிறன்று அன்னையின் திருநாளாகக் கொண்டு அடியவர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் அன்னையை வேண்டிக் கொண்டதன் பேரில் அதனை ஏற்று ஞாயிறன்று சிற்ப்பு ஆறு கால பூஜை நடைபெறும் தலம்.
திருவேற்காடு பாலாம்பிகையும், திருவலிதாயம் ஜெகதாம்பிகையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையும் ஒரே நாளில் வழிபட இம்மை, மறுமை எல்லா நன்மைகளையும் அடைவர். ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆடி மாதத்திலும் தனனை நாடி வரும் பகத்ர்களின் துயர் தீர்க்கும் அன்னையின் வரலாற்றை காண்போம்.
மஞ்சளாள் மங்களம் வழங்கும் கருமாரி அன்னை
மஞ்சள் பட்டில் மின்னும் அருட்கோலம்
ஒரு சமயம் அரக்கர்களின் அட்டூழியம் அதிகமாகியது தேவர்கள் அவர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். முக்கண் முதல்வனிடம் சரணடைந்தனர். தன் குழந்தைகளைக் காக்க மாயா அசுரர்களிடம் போரிட முடிவெடுத்த எம்பெருமான் அப்போது தான் செய்யும் ஐந்தொழிலை செய்யும் பொறுப்பை அன்னையிடம் கொடுத்தார். அன்னைக்கு தன் உடம்பில் இருந்து எடுத்த சாம்பலைக் கொடுத்தார் ச்ர்வேஸ்வரன். சாம்பலைப் பெற்ற தாய் தானே சிவமுமாகி, தானே சக்தியாகி திருநீறு கொண்டு புறப்பட்டாள், அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி திருவேற்காடு வந்து ஈருருவாய் கோயில் கொண்டாள். ஒன்று கருணையே வடிவான அமர்ந்த நிலைக் கோலம். ஐம்பூதங்களே அம்மனுக்கு ஐந்தலை நாகமாக குடை பிடிக்க ஞான ஒளி வடிவாக விளங்கும் கோலம் ஒன்று. மற்றொன்று வானளாவிய விசுபரூப கோலம், அகிலம் நடுங்கும் என்று திருமால் வேண்ட கடைக்கண் மட்டுமே காட்டும் கோலம் கொண்டாள், தலை ம்ட்டும் வெளியே தெரிய கரு உருவில் மண்மாதவுடன் ஐக்கியமானாள் அன்னை. பின் கருநாக உருவில் அங்கே அமர்ந்தாள் அன்னை. சிவபெருமானிடம் பெற்ற திருநீறு கொண்டு தேவியவள் தன் இச்சா மந்திர சக்தியால் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அந்தரி, வானத்தி, பார்ப்பனி என்று உருவெடுத்து காக்கின்றாள். தமக்கையர் அறுவரும் அருகிலிருந்து திரிசூலம் தனை நாட்டி வாழ்வளித்த இறைவி கருமாரி திருவேற்காட்டில் இன்னருள் புரிய குடிகொண்டாள். பின் இந்த கலி காலத்தில் புற்றிலிருந்து தன்க்கொரு கோயில் எழச்செய்து அருள் பாலிக்கின்றாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் அன்னை கருமாரி.
கருமாரி என்பதில்
க - கலை மகள்
ரு - ருத்ரி (மலை மகள்)
மா - திருமகள்
ரி - ரீங்காரி
அதாவது கலைமகளும். மலைமகளும், திருமகளும் ஒரு சக்தியாய் உள்வயப்பட்டு ரீங்காரமாகிய ஓங்காரத்திலே உறையும் ஆதிபராசக்தி. மேலும் க - கஞ்சன் ( பிரம்ம தேவன்), ரு- ருத்ரன், மா - திருமால் ரீ- ரீங்கார பீடம். அதாவது ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்தொழில் புரியும் அன்னை கருமாரி.
ஒரு தைப்பூச நன்னாள் அன்று பொதிய முனி அகத்தியர்
ஐந்துதலை நாகமணி அம்பிகையே அருளரசி
அனாதியுருக் கொண்டே மாரி
ஐந்தெழுத்தி ஐம்பொறிச்சி ஐம்பூதம் அறியாத
ஐம்புலனை நெறி செலுத்தும் அன்பருக்கு துணைபுரியும்
மக்மாயி அனிமா சக்தி
ஐஞ்சக்தி ஐஞ்சிவனை ஆள்கின்ற ஆதி சக்தி
ஐந்தொழில் செய் கரிய மாரி
இனி அம்ம்னின் கோவிலை வலம் வருவோம் ஐந்து நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. அதனுள் நுழைந்தவுட்ன் எதிரே அம்மனின் வேப்பமரம். அரசு வேம்பு மரத்தடியில் வேழமுகத்தோன். அன்னைக்கு வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்த வலம்புரி விநாயகர் அதற்கு பின்புறம் யாக சாலை, உள் பிரகாரத்தை சுற்றி வரும் போது உற்சவர் அம்மனை தரிசிக்கலாம், அம்மையின் சன்னதியின் பின்புறத்திலிருந்து தங்க கவசம் பூண்டுள்ள அன்னையின் விமானத்தை அழகு கண்டு களிக்கலாம். வடக்குப் பிரகாரத்தில் வேற்கண்ணி அம்மையையும், பெரிய கருமாரியம்மனையும், வள்ளி தெய்வாணை சமேத ஆறுமுகனையும் தரிசனம் செய்யலாம். இராஜ் கோபுரத்தின் நுழைவு வாயிலின் ஒரு பக்கம் `நவகிரகங்கள் மறு பக்கம் கருமாரியின் அண்ணன் திருமால் ஏழுமலையானாக கோவில் கொண்டுள்ள சனன்திகள் உள்ளன..வெளிப்பிரகாரம் இப்போது விரிவு செய்யப்பெற்று துர்க்கை, பிரத்தியங்கிரா சனன்தியுடன் விளங்குகின்றது.
திருக்கோவிலுக்கு எதிரே திருச்சாம்பர் திருக்குளம். வேலவன் உருவாக்கியது என்பது ஐதீகம், இக்குளத்தில் ஞாயிரன்று விடியற்காலையில் நீராடி திருநீறு அனீபவர் சகல் செல்வங்களும், கல்வி அறிவும் பெறுவர். ஆடி மாதத்தில் ஆதி வாரம் நீராடுவோர் நீண்ட ஆயுள் பெறுவர். மாசி பௌர்ணமியில் நீராடுவோர் மக்கட்பேறு பெறுவர். மாசி அமாவாசையில் நீராடி நீறு பூசுவோர் பகைவர்களை வெல்வர். தைமாதம் ஆதி வாரம் பூச நட்சத்திரத்தில் நீராடினால் பெறற்கரிய பேறு பெறலாம். தையில் ஞாயிரன்று நீராடுவோர் வல்வினைகள் நீங்கும். அமாவசையில் நீராடினால் பிணி, பில்லி, சூனியம் விலகும். ஆடிப்பூரத்தன்று நீராட நாவன்மை சிரக்கும், கலைகள் விலங்கும். சித்ரா பௌர்ணமியில் நீராட பூரண ஞானம் கிட்டும். புரட்டாசி ஐப்பசி முழுமதி நாட்களில் நீராட ஞானிகளாவர். நவராத்திரியில் நீராட ஆதிசேஷனைப் போல கலைத்திறன் கூடும். பாவம் தொலையும்.
இத்தலத்தின் பெருமை தலபுராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கண்டாலும் பிணிநீங்கும் நிதிபெருகும் கலைஒங்கும்
ஞானமுறும், கருத்துணர்ந்து
விண்டாலும் வாணாட்கள் மிக பெருகும்; செவியுற்றால்
வீரமுறும், வேதை தீரும்
பண்டாலின் கீழமரும் பரமனருள் சிறப்புற்றுப்
பரஞானப் பதமளிக்கும்
மண்டலத்தில் தேவி கருமாரியாளின் புராணச்சீர்
எவராலும் மொழியொணாதே
கருமாரி அம்மன் திருக்கோவில் இராஜகோபுரம்
ஐந்தொழில் புரியும் ஆதி சக்திக்கு வருடம் முழுவதும் திருநாளே. தமிழ் புத்தாண்டன்று தங்க கவசத்தில் சிறப்பு மலர் மாலை அலங்காரத்தில் அருட்கோலம் காட்டுகின்றாள் அன்னை. சித்ரா பௌர்ணமியை ஒட்டி மூன்று தின லட்சார்ச்சணையும், தைப்பூசத்தன்று ஒரு நாள் லட்சார்ச்சனையும் நடைபெற்கின்றது. வைகாசி விசாகத்தன்று சீனிவாசப்பெருமாள் கருட சேவை. ஆனி கடை ஞாயிறு தொடங்கி அன்னை கருமாரிக்கு ஆடிப்பெருவிழா சீருடனும் சிறப்புடனும் நடைபெறுகின்றது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் 1008 பால் குட அபிஷேகம், நவ கலசம், சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, புற்றலங்காரப் 108 பால்குட அபிஷேகம், படையல் போன்றவையும், வாகன சேவையும், ஒன்பதாம் ஞாயிற்றுக்கிழமையன்று காலை தேர் உலாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. மாதம் தோறும் பௌர்ணமியன்றும், புரட்டாசி நவராத்திரி ஒன்பது தினங்களும் மாலை 108 சுமங்கலிகளை கொண்டு குத்து விளக்கு பூஜை நடத்தப்பெறுகின்றது. நவராத்திரி ஒன்பது தினங்களும் உற்சவர் அம்மன் புறப்பாடு வெவ்வேறு விதமான அலங்காரத்தில் நடைபெறுகின்றது.ஐப்பசியில் கந்தர் சஷ்டி திருவிழா சூர சம்ஹாரத்துடனும், திருக்கல்யாணத்துடனும் சிறப்பாக நடைபெறுகின்றது. தனுர் மாதத்தில் காலை சிறப்பு பூஜை. தை மாதத்தில் தைப்பூசத்தை தீர்த்த நாளாக கொண்டு 19 நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பெறுகின்றது. காலை மாலை இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் அன்னை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா. பல்லக்கு தீர்த்த வாரியும் இறுதி மூன்று நாட்கள் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றது. அம்மனுக்கு தங்கத்தேரும் உள்ளது, ஆங்கிலப்புத்தாண்டன்றும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் அம்மனுக்கு. சுதந்திர தின நாள் ஆகஸ்ட் 15ம் நாள் அன்றும், அண்ணா நினைவு நாள் அன்றும் பொது விருந்து நடைபெறுகின்றது. இத்திருக்கோவிலின் சார்பாக பல சமுதாயப்பணிகள் நடைபெறுகின்றன. சமயம் கிடைக்கின்ற போது அன்னையின் தலம் சென்று தரிசித்து அவள் அருள் பெறுங்கள்.
Labels: ஆடி வெள்ளி, கருமாரி, திருவேற்காடு
17 Comments:
ஆஹா, திருவேற்காட்டு அரசியைப் பற்றி அரிய செய்திகளை அறிந்து கொண்டேன். திருச்சாம்பர் குளத்தின் மகிமைகளையும் நாள் வாரியாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்க அன்னை அருளட்டும்.
அருமையான தகவல்களுக்கு நன்றி
மிகவும் நன்றி கவிநயா.
வாருங்கள் இனியவள் புனிதா அவர்களே. கவிதைகள் எழுதி கல்க்குபவரே. வரும் காலங்களிலும் வந்து தரிசனம் பெர்றுங்கள்.
வாருங்கள் இனியவள் புனிதா அவர்களே. கவிதைகள் எழுதி கல்க்குபவரே. வரும் காலங்களிலும் வந்து தரிசனம் பெர்றுங்கள்.
தாயே கருமாரி பாடல்கள் ஆடியோவாக இணையத்டில் கிடைக்குமா?
சாமி கும்பிடலைனாலும் மாரியம்மன் பாடல்கள் என்றால் பயங்கற இஷ்டம். ஒரு கலத்தில் வரிகள் எல்லம் மனதில் இருந்தது. ஹம் பன்றதே அந்த வகை பாடல்கள் தான். மார்கழி மாதங்களில் எங்க ஊர் கோவிலில் தினமும் போடுவார்கள். :)
போன மாதம் கோவில் திருவிழாவின் போது எவ்வளவு தேடியும் அந்த பாடல்கள் கிடைகவில்லை. :(.. என் ஆர்வத்தை பார்த்து போலி நாத்திகன் என்று கிண்டல் பண்ணாங்க. ஹ்ம்ம்.. அந்த மெட்டுக்களின் அருமை அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது.. :)
வாருங்கள் சஞ்சய் அவர்களே,
அதிகமாக ஆடியோ பாடல்களின் தளங்களைப் பற்றி தெரியாது உங்களுகாக கூக்ளில் தேடிய போது கிடைத்த சில தளங்கள் இவை இவற்றில் பார்க்கவும்.
http://www.tamilbeat.com/
http://www.tamilbeat.com/
http://www.tamilentertainments.com/
நன்றி
சஞ்சய், www.raaga.com -ல நல்ல தொகுப்புகள் இருக்கு.
தக்க சமயத்தில் வந்து உதவியதற்கு நன்றி கவிநயா.
//:(.. என் ஆர்வத்தை பார்த்து போலி நாத்திகன் என்று கிண்டல் பண்ணாங்க. ஹ்ம்ம்.. //
நாத்திகமே போலிதான் அதில என்ன போலி நாத்திகம்! :)
அரிதான அருமையான புகைப்படங்களுடன் கூடிய பதிவு கைலாஷி ஐயா!
//தமிழக்த்தின் தொண்டை மண்டலத்தின் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 32. அவ்ற்றுள் ஒன்று இந்த திருவேற்காடு. திருஞான சமப்ந்தர் இத்தலத்தைப்பற்றி பதிகம் பாடியுள்ளார்//
சிவன் பாட்டில் சொல்லுங்க! போட்டுரலாம்! :)
//நான் கருமாறி வந்தவ்ளடா! ஊர் மாறி, பேர் மாறி, உருமாறி, கருமாறி வந்த என்னையா நீ கொல்லப்போகிறாய்!//
அருமை! அருமை!
//திருக்கோவிலுக்கு எதிரே திருச்சாம்பர் திருக்குளம். வேலவன் உருவாக்கியது என்பது ஐதீகம்//
முருகப்பெருமான் உருவாக்கிய திருக்குளத்தில் சாம்பல் ஏன் என்று அறியத் தாருங்களேன் ஐயா!
சுட்டிகளுக்கு நன்றி கைலாஷி மற்றும் கவி அக்கா.. அந்த தளங்கள் எலலாமே நான் அவ்வப்போது பார்ப்பவை தான். ஆனால் அதில் இந்த பாடல்கள் இருப்பது தெரியாது. நிச்சயம் பார்க்கிறேன்.
நல்லதந்தி அவர்களுக்கு,
சும்மா போகிற போக்கில் எதுவும் சொல்லி வைக்க வேண்டாம். வேண்டுமானால் போலி நாத்திகம் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள். உங்கள் வார்த்தைகள் தவறு என் நீங்களே ஒத்துக் கொள்ளும் அளவிற்கு விவாதிப்போம்... அதை விடுத்து கைலாஷி அவர்கள் தன் மனதிற்கு திருப்தியாய் நிறைவாய் ஒரு வலைப்பூ வச்சிருக்காங்க. இங்கு இது போன்ற காயபடுத்தும் கருத்துக்கள் வேண்டாமே... விருப்பம் எனில் சொல்லுங்க. உங்கள் வலைப்பூவில் விவாதிக்கலாம். :)
சஞ்சய் அவ்ர்களே கோபப்பட வேண்டாம் அது அவர் கருத்து. தாங்கள் தன் பாதையில் சுதந்திரமாக நடை போடுங்கள். பாடல்கள் கிடைத்தால் சொல்லுங்கள்.
சஞ்சய் அவ்ர்களே கோபப்பட வேண்டாம் அது அவர் கருத்து.
தாங்கள் தன் பாதையில் சுதந்திரமாக நடை போடுங்கள்.
பாடல்கள் கிடைத்தால் சொல்லுங்கள்.
//சிவன் பாட்டில் சொல்லுங்க! போட்டுரலாம்! :)//
//முருகப்பெருமான் உருவாக்கிய திருக்குளத்தில் சாம்பல் ஏன் என்று அறியத் தாருங்களேன் ஐயா!//
மிகவும் நன்றி KRS அவர்களே.
திருஞான சம்பந்தர் பதிகத்தையும், முருகப்பெருமான் உருவாக்கிய குளத்தில் சாம்பர் வந்ததற்க்குமான காரணத்தையும்,
"தாயே கருமாரி! எங்கள் தாயே கருமாரி! - 2 "
என்று புதிப்பதிவாக இட்டுள்ளேன் ஐயா.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home