Monday, August 18, 2008

தாயே கருமாரி! எங்கள் தாயே கருமாரி! - 2

மண்ணளக்கும் மகமாயி ஆதி சக்தி கருமாரி


அன்பர் kaNNapiran Ravisankar(KRS) அவர்கள் பொய்கை திருச்சாம்பர் பொய்கை என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தையும், திருஞான சம்பந்தரின் பதிகத்தையும் வேண்டினார் எனவே முதல் பதிவுக்கு இணைப்பதிவாக இப்பதிவு, பின்னூட்டத்தில் இவ்வளவும் எழுதுவது சிரமம் என்பதால்.

அசுரர்களை அழிக்க சிவபெருமான் திருக்கயிலாயத்திலிருந்து புறப்பட்ட போது ஐந்தொழில் புரியும் பொறுப்பை ஆதி பராசக்தி அன்னை ஏற்றாள். ஐயன் தனது யக்கையிலிருந்து சாம்பல் பெற்றாள். ஏழு சக்தியாக உருவெடுத்து அச்சாம்பலால் உலக மக்கள் துயர் தீர்த்தாள் அன்னை.

இவ்வாறு திருவேற்காட்டில் அன்னை அருள் புரிந்து கொண்டிருக்கும் போது முருகபபெருமான் அன்னையைக் காண வந்தார் உடன் தேவர்களும், முனிவர்களூம் வந்தனர். தன் அருமை மைந்தனை மகிழ்விக்க அன்னை இங்கே பொம்மையானாள் ஆமாம் நாகமாக உருவெடுத்தாள் . கருநாகமாக குண்டலினி சக்தியாக நின்று ஆடினாள். காண்பரிய காட்சி கண்து முருகனும் தேவாதி தேவர்களும், முனிவர்களும் மகிழ்ந்தனர்.

மகனை மகிழ்வித்த அன்னை சுய ரூபம் பெற்று அனைவருக்கும் திருச்சாம்பல் வழங்கினார். மகிழ்ச்சியாக அந்த திருநீற்றை பெற்றுக் கொண்ட அழகன் முருகன். அன்னையே முன்பு சூரனை அழிக்க சக்தி வேல் வழங்கினீர் அவ்வேலால் வேலாயுத தீர்த்தம் அமைத்தேன். தற்போது திரிநீறு வழங்கி உள்ளீர்கள். இந்த திருநீற்றின் பெயரால் ஒரு பொய்கை அமைக்கின்றேன் என்று திருச்சாம்பர் பொய்கை உண்டாக்கினார் குமரக்கடவுள்.

முருகா! திருநீறு பெற்று திருநீற்றுப் பொய்கை அமைக்கிறாய் அதில் நீராடுபவர்களுக்கு இவ்வாறு வரம் அளிக்கிறேன் என்று வரம் தந்தால் கருணை மாரி கருமாரி.

திருவேற்காட்டுப்பதிகம்

முதலாம் திருமுறை

திருஞான சம்பந்தத் அருளியது
ஒள்ளியது உள்ளக் கதிக்காம் இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தோர் இவ்வுலகில்
தெள்ளியார் அவர் தேவரே!
ஆடல் நாகம் அசைத்து அளவில்லதோர்
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இவ்வுலகில்
சேடராகிய செல்வரே!
பூதம்பாட புறங்காட் டிடைஆடி
வேத வித்தகன் வேற்காடு
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்(கு)
ஏதம் எய்துதல் இல்லையே
அழ்கடல் என கங்கை கரந்தவன்
வீழ்சடையினன் வேற்காடு
தாழ்வுடை மனத்தால் பணிந்து ஏத்திடப்
பாழ்படும் அவ்ர் பாவமே
காட்டினால் அயர்த்திருக் அக்காலனை
வீட்டினால் உறை வேற்காடு
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஒட்டினார் வினை ஒல்லையே!
தொலினால் உடைமேவ வல்லான் சுடர்
வேலினால் உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்
மாலினார் வினை மாயுமே
மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவ்ர் தீர்க்கமே
மூரல் வெண்மதி சூடுமுடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வாரமாய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே.
பரக்கினார் படுவெண் தலையில் பலி
விரக்கினான் உறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருங்கினானை நினைமினே
மாறிலா மலரானோடு மாலவன்
வேறலான் உறை வேற்காடு
ஈறிலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை குற்றமே.
விண்டமா பொழில் திருவேற்காடு
கண்டு நம்பன் கழல் பேணி
சண்பை ஞான சம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட குணமாமே.
KRS ஐயா தாங்கள் கேட்டுக் கொண்டபடி ஆளுடையப்பிள்ளையின் கொஞ்சு தமிழ்ப் பாடலை ( சம்பந்தப்பெருமான் பிள்ளை அல்லவா அதனால், அப்பருடையது கெஞ்சு தமிழ், சுந்தரர் எம்பிரான் தோழர் அல்லவா எனவே அவ்ரது மிஞ்சு தமிழ்) பதிவிட்டுள்லேன், சிவன் பாட்டில் அருமையான கதையுடன் வழங்குங்கள்.

2 Comments:

Blogger கவிநயா said...

திருச்சாம்பர் குளம் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி கைலாஷி.

5:52 PM  
Blogger Kailashi said...

KRS சாருக்கும், அந்த கருமாரிக்கும் நன்றிகள் .

9:28 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal