Sunday, October 07, 2007

Navarathri # 1 ( Sakthi peetams)


ஓம் சக்தி
SAKTHI PEETAMS (SEATS OF MOTHER GODDESS)


VAISHNO DEVI MAA 
 வைஷ்ணவோ தேவி


Worship of Mother Goddess was prevalent even during the Indus valley civilization period. There are abundance of temples in the Indian subcontinent which are dedicated to SAKTHI (energy or power) that's how Mother Goddess is called by Her followers. Out of these abodes of Sakthi 51 are the most sacred ones and are revered very much they are called SAKTHI PEETAMS (Seats of Sakthi).


The legend behind this belief is that in the earlier days of Parvathi the consort of Lord Shiva was known as Dakshayani (daughter of Daksha), Sati Devi was Her other name then. She married Lord Shiva against the wishes of Her father. So to humiliate Lord Shiva, Daksha started a yagna for which he invited all the Devas (celestials) and left Shiva and Sati Devi uninvited. He also did not offer the avir pakam ( the sacrificial offering to each God through the yagna) to Shiva. Dakshayani pleaded with Shiva to allow Her to attend the ceremony as She wanted to tell Her father about his wrong and arrogant act. The reluctant Lord allowed Her to attend the ceremony but warned Her that She will be humiliated by Her father.

Sati Devi reached Her house and chided Her father for His arrogant act of not inviting Lord Shiva for the yagna, but the arrogant Daksha did not realise his wrong but humiliated Dakshayani by telling ill about the Lord and also asked her to leave the place. Enraged by Her fathers misdemeanor, She decided to teach him a lesson. So She jumped into the yagna fire to destroy his yagna. Meanwhile Veera Bhadra a fierce form of Lord Shiva reached the yagna site and destroyed everybody, in which Daksha also was killed and his head was replaced with a goat's head. Thus Daksha was taught a lesson for his misdeed. The devas who took part in this wrong yagna were also punished.



KEDARNATH SAKTHI PEETAM 
 திருக்கேதாரம்



The teaching we get from this episode of cutting of the head of Daksha is :
1. Lord Shiva is the Head of all yagnas.
2. Arrogance will lead us only to our downfall.
3. However mighty you (including Devas) may be you will be punished for your misdemeanor of participating in the illegitimate yagna .


Unable to bear the loss of His consort Lord Shiva took Her body in His hand and started the Rudra Thandavam (dance of destruction). The dance of bliss of Lord Shiva is described by the saint poetess Karaikkal Ammaiyar, who willed to be seated at the lotus feet of the Lord always , like this. My Lord when you do your cosmic dance in bliss, just if you lift your lotus feet the peaks of mountain will interchange places, when you gently place your feet the nether land will temble, when you lift your hands the sky will turn topsy- turvy . But you do your dance in the most graceful way so that no harm is brought to anybody in this universe and by your cosmic dance you make the whole universe dance in the most orderly fashion.




Even while dancing gracefully if this can happen think about when he dances fiercely. The whole universe trembled and there was chaos every where. Then Devas pleaded with Lord Maha Vishnu to do something to pacify Lord Shiva. Realising that the only way to pacify the Lord is to remove the body of Sati from the hands of the Lord Maha Vishnu sent His Chakra(The Holy Disc) which cut the body of our Mother into many pieces and Vishnu made the different parts of the body to fall at different palces of the Indian sub-continent. The places where the different parts of our Mother fell were revered as Sakthi Peetams and temples were built in these places and are considered most sacred. When you visit these shrines you can feel the the divine waves you receive. It is believed that hese 51 sakthi peetams are the 51 letters of Devas. To shower Her blessings to all of us our Mother installed Herself in these abodes.




KAMAKYA MAA 
   காமாக்யாஅன்னை



The most sacred 51 abodes of Mother known as Sakthi Peetams are :
1.Kamarup(Assam) here mother is known as Kamakya,
2.Kasi (Varanasi) here mother present Herself as Visalakshi and Anna poorani,
3.Gruheswari (Nepal)
4. Raudra Parvat ,
5.Vaishno Devi (Kashmir) here mother manifests herself in the three forms of Maha Kali, Maha Lakshmi, and Maha Saraswathi.
6.Kaanya kupjam (Uttar Pradesh) ,
7.Poornahiri (The Himalayas),
8.Ambaji (Rajasthan),
9.Aamrathakeshwaram ,
10. Kanchi - Ekambaram,
11. Kanchi- mukkudal,
12. Kanchi -Kama kodi,( There are three peetams in this sacred city).
13.Kailash (Himalayas)
14.Birugu Peetam .
15.Kedarnath(Himalayas).
16.Santharapuram.
17.Shri peetam.
18. OMkaar (Madhya Pradesh).
19.Jullandar(Punjab)
20.Malwa (Saurashtra)
21. Kulandakam
22.kottakam(Deva Kottam)
23.Kokarnam(Karnataka).
24.Marutheshwaram.
25.Attahaasam .
26.Viraja.
27.Rajagruham.
28.Mahapatham
29. Kollapuram (Kollur - Mookambikai)
30.yelapuram.
31.Kaleshwar
32. Jayanthi
33.Ujjain (Madhya Pradesh - Maha Kali )
34.yogini.
35.Ksharika.
36.Hasthinapur.
37.Uttisam.
38.Prayag (Allahabad - Lalitha)
39.Sashtikam
40.Mayapuri (Haridhwar -Manasa Devi)
41. Malayam (Tibet).
42.Shri Sailam (Bramarambal)
43. Meru (Himalayas).
44.Giri peetam (Junagad - Amba)
45.Mahendram.
46. Vaamanam.
47.Hiranyapuram.
48.Maha Lakshmipuram (Kohlapur- Mahalakshmi)
49.Athristhanam.
50. Saaya peetam and
51.Sathradam.


( Note. There is no unanimity about the number of Sakthi Peetams and also about their exact location and most of the places given here have different modern names).
* * * * * * *
சக்தி பீடங்கள்



KAMAKYA SAKTHI PEETAM காமாக்யா திருக்கோவில்

நமது பாரத தேசமெங்கும் பல வடிவங்களில் அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. வடநாட்டிலே மாதா என்றும், வைஷ்ணவோ தேவி என்றும் வணங்கப்படுகின்றாள் அன்னை. கிழக்குப் பகுதியில் காளியாக தன் பக்தர்களால் போற்றப்படுகின்றாள். மேற்கு பகுதியிலே அம்பா மாதாவாகவும், மஹா லஷ்மியாகவும் அருள் பாலிக்கின்றாள். நம் தென்னாட்டிலே எம் அம்மைக்குத்தான் எத்தனை ரூபங்கள் எண்ணிய ரூபத்திலே எழுந்தருளி நம்மை எல்லாம் காத்து நிற்கின்றாள். தாய் வழிபாடு சிந்து சமவெளி காலத்திலேயே இருந்தத்ற்கான சான்றுகள் உள்ளன. இந்து மதத்தின் அறு சமயங்களுள் தாயை வழிபடும் சாக்தமும் ஒன்று. எவ்வாறு தன் பக்தர்களை அரணாக இருந்து காத்திட எம் தாய் கோவில் கொண்ட மிகுந்த புண்ணிய தலங்கள் தான் சக்தி பீடங்கள். அவை மொத்தம் 51, எத்தனையோ கோவில்களிலே எம் அம்மை குடி கொண்டிருந்தாலும் இந்த கோவில்களின் சிறப்பு என்ன என்பதை இக் கட்டுரையில் காண்போமா?


கல்கத்தா காளி (Calcutta Kali)
இந்த சக்தி பீடங்களின் தோற்றம் எம் ஐயன் செய்தருளிய அஷ்ட வீரச் செயல்களுல் " தட்சன் சிரம் கொய்த" வீர செயலுடன் தொடர்புடையது. அப்போது அம்மைக்கு பெயர் சதி தேவி, அவள் பிரம்ம தேவரின் மகனான தட்ச பிரஜாபதிக்கு மூத்த மகளாகப் பிறந்ததால் தாட்சாயிணி என்றும் அழைக்கப்பட்டாள். அம்மை கல்யாணப் பருவத்தில் தன் தந்தையின் விருப்பத்திற்க்கு மாறாக சிவபெருமானையே மணக்க வேண்டும் என்று கடுமையான தவம் செய்தாள். அம்மையின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமானும் முதியவர் வேடத்தில் வந்து அம்மையை சோதித்தார். சிவன் பித்தன், பேய் உலவும் காட்டில் வசிப்பவன், இறந்தவர்களின் சாம்பலை உடலெங்கும் பூசித்திரிபவன், பாம்புகளை அணிந்தவன் எனவே அவன் அதி ரூப சௌந்தர்ய வல்லியான உனக்கு பொருத்தமானவன் இல்லை என்று பலவாறு கூறி அம்மையின் உறுதியை ம'ற்ற ஐயன் முயற்சி செய்தார். ஆனால் அம்மை சிவனையே மணப்பேன் என்பதில் உறுதியாக இருந்ததால், தன் சுய ரூபத்தைக் காட்டி அம்மையை எவருக்கும் தெரியாமல் கூட்டிச் சென்று எம் ஐயன் மணந்தருளினார் இவ்வாறு சதி தேவி சிவனை மணந்தது தட்சனுக்கு பிடிக்கவில்லை.

அந்த கோபத்தினால் தட்சன் சிவபெருமானை கடவுளாக கருத விரும்பவில்லை. கோபத்தில் அவன் ஒரு யாகம் நடத்த திட்டமிட்டான். அதற்காக சிவ பெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு அனுப்பவில்லை. அழைப்பு அனுப்பாதது மட்டும் இல்லாமல் யாகத்தின் போது சிவனுக்கு தர வேண்டிய அவிர் பாகத்தையும் கொடுக்க மறுத்தான் அவன். இவ்வாறு சிவ பெருமானை அவமானம் செய்ய வேண்டும் என்று தட்சன் தொடங்கிய யாகத்தில் மற்ற தேவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


Sri Sailam Bramarambal ஸ்ரீ சைலம் பிரம்மராம்பாள்

சதி தேவி ஐயனின் அனுமதி பெற்று தன் தந்தையின் மனதை மாற்றுவதற்காக யாகம் நடத்தும் இடத்திற்கு வருகின்றார். தட்சனிடம் அவனது அறியாமை எடுத்துரைத்து, சிவ பெருமனை யாகத்திற்க்கு அழைக்குமாறும் அவருக்கு தர வேண்டிய முறையான அவிர் பாகத்தை தருமாறும் கூறுகிம்றாள். ஆனால் ஆணவம் கொண்ட தட்சன் அவளது அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் கோபம் கொண்ட அம்மை அவனது யாகம் அழிய தானே அந்த யாகத் தீயில் குதித்தாள். அதே சமயம் சிவபெருமான் அனுப்பிய வீரபத்ரரும் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் யாகத்தை அழித்து, முறையில்லாத யாகத்தில் கலந்து கொண்ட வானவர்கள் அனைவரையும் தண்டித்தார். மேலும் தக்கனுடைய சிரத்தை கொய்து அதில் ஆட்டின் தலையை பொருத்தினர் .இதை மாணிக்க வாசகர் தனது பாடலிலே எவ்வாறு கூறுகின்றார் பாருங்கள்

சந்திரனை தேய்த்தருளி தக்கன் தன் வேள்வியினில்

இந்திரன் தோள் நெரித்திட் எச்சன் தலையரிந்து

அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல் தகர்த்து

சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டுகந்த .......
முறையில்லாத தக்கன் செய்த யாகத்திலே கலந்து கொண்ட சந்திரனை மெலிவித்து, இந்திரனது புயங்களை தாக்கி, யாகத் தலைவனின் தலையை கொய்தொழிந்து, வானிலே செல்லும் விளக்கமுடைய பகலவனது பற்களை உடைத்து விண்ணவர்களை சிதறியோடபடி செய்தார் என்றபடி நாம் அறம் பிழைத்ததால் வருவது துன்பமே, எனவே நாமும் அறவழி ஒழுக வேண்டும் என்பதை கூறுகிறார்.



இந்த தக்க சிரம் நமக்கு உணர்த்தும் நீதிகள் மூன்று முதலாவது குண்டலினி யோகமான அக வேள்வியிலும், புற வேள்வியாகிய யாகத்திலும் சிவபெருமானே வேள்வித்தலைவன் என்பது. " கண் சுடரோன் உலகேழும் கடந்த அந்தண் சுடரோன் ஓமத்தலைவன் " என்பது தான் விதி. இரண்டாவது "ஆணவம் அழிவையே அளிக்கும்". ஆணவம் கொண்ட தக்கன் தன் ஆணவத்திற்க்காக தனது உயிரையே இழந்தான். மூன்றாவது" வானவரே ஆயினும் அறம் பிழைத்தால் தண்டனை அடைவர்". அரி, பிரமன்,சூரியன், சந்திரன், நாமகள், அக்கினி, இந்திரன் ஆகியோர் தக்கனுடன் சேர்ந்து தருக்கிய நிலையில் நிலை தடுமாறி போது மூக்கு, கை, தோள் ஆகியவற்றை இழந்தனர். ஏனைய மற்ற தேவர்கள் அனைவரும் சூர பத்மனிடம் அடிமைப்பட்டு துன்பம் அனுபவித்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் தவறை உணர்ந்து இறைவனிடம் சரணாகதி அடைய ,சிவ சக்தி ஐக்கியம் மீண்டும் ஏற்பட்டது, உலகத்தோர்க்கு நன்மை செய்ய ஒரு தலைமகனாம் குமரன் தோன்றினான் அவன் சூர சம்ஹாரம் செய்ய தேவர்கள் அனைவரும் துன்பத்திலிருந்து விடுபட்டனர்.


கொல்லூர் மூகாம்பிகை Kollur Moogambikai
சதி தேவி யாக குண்டத்தில் குதித்து யாகத்தை அழித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டதை பார்த்த சிவபெருமான் தன் உடலின் பாதியான கௌரியின் உடலை எடுத்துக் கொண்டு "ருத்ர தாண்டவம்" ஆடத்தொடங்கினார். ஆறவா உன் ஆடும் பதத்தின் கீழே அனுதினமும் அமர்ந்திருக்க வேண்டும் என்று வேண்டி ஆடும் ஐயனின் திருவடிக்கீழேயே அமர்ந்த காரைக்காலம்மையர், எம் ஐயனின் ஆனந்தக் கூத்து இவ்வாறு இருக்கும் என்றார் " பிரபஞ்சமாகிய அரங்கத்தில் நீ ஆடுகையில் உன் அடி பெயர்ந்தால் பாதாளம் பேரும், அடிகளை மாற்றும் போது மலை முகடுகள் பேரும், கை அபிநயம் மாற்றுகையில் வான் திசைகள் பேரும், ஆனால் நீ பிரபஞ்சத்திற்க்கு எந்தவித சேதமுமின்றி நீ அசையாது அனைத்தையும் அசைய வைத்து ஆடும் சூட்சும நடனம் ஆடுகின்றன" என்பார். இவ்வாறு அனந்த நடனம் ஆடும் போதே இவ்வாறு நடைபெருமென்ற'ல் கோபத்துடன் எம் ஐயன் ஆடும் போது அண்ட சராசரங்களூம் நடுங்கின. வேதனை பொறுக்க முடியாத தேவர்கள் அனைவரும் மஹா விஷ்ணுவை வேண்டினர், சிவபெருமானை சாந்தப்படுத்த ஒரே வழி சதி தேவியின் உடலை சிவ பெருமானிடமிருந்து பிரிப்பதுதான் என்பதை உணர்ந்த விஷ்ணு "வாழி நீ திருவாழியே' என்று ஆழ்வார்களால் போற்றப்பட்ட ஸ”தர்சன சக்கரம் நாம் வாழ்த்த முடியாத கொடூரத்தை செய்தது. நம் அன்னையின் புனித தேகத்தை சிதைத்து பாரத கண்டத்தின் நான்கு திசைகலிலும் சிதறி விழுமாறு செய்தது திருமால் ஏவிய சக்கரம். பிற்பாடு சக்தி பீடங்களான சகல தல்ங்களுக்கும் உறைவிடமான அவளது சரீரம் தேவ பாஷையில் உள்ள 51 அக்ஷ்ரங்களும் உருவாக்கிய வடிவாகும். எனவே அவளது உடல் 51 இடங்களில் விழுந்து 51 சக்தி பீடங்களாகின.



இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த் சக்தி பீடங்கள் எவை என்று பார்ப்போமா?

1. காம ரூபம் (அஸ்ஸாம்) அம்மையின் மர்மஸ்தானம் விழுந்த இடம் தாந்த்ரீக வழிபாட்டிற்க்கு சிறந்த தலம். காமாக்ஷ’

2. காசி மணி கர்ணிகா பீடம். இது யோக பீடம் ஆகும். அம்மை இங்கே கமண்டலம் மற்றும் அஷமாலை தாங்கிய விஷாலாஷ’யாகவும், அன்னபூரணியாகவும் அருள் பாலிக்கின்றாள்.


3.நேபாளம் (க்ருஹாகேஷ்வரி),

4. ரௌத்ர பர்வதம்.

5.காஷ்மீரம் வைஷ்ணவ தேவி அம்மையின் இடக்கரம் விழுந்த இடம். இங்கு மஹா காளி, மஹா லஷ்மி, மஹா சரஸ்வதி என்னும் முப்பெரும் தேவிகளாக அம்மை அருள் பாலிக்கின்றாள்.

6. கான்யா குப்ஜம் (உத்திரப் பிரதேசம்).


Kasi Anna Poorani காசி அன்ன பூரணி



7.பூர்ணகிரி (இமாலயம்)

8.அற்புஜாஜாம்( அம்பாஜி ராஜஸ்தான்)

9.ஆம்ராதகேஸ்வரம்.



Kanchi Kamkshi காஞ்சி காமாட்சியம்மன்






10 ஏகாம்பரம் (காஞ்சி) அம்மையின் நாபிக் கமலம் விழுந்த இடம் காமாக்ஷ’

11. காஞ்சிபுரம் - முக்கூடல்.

12. காம கோடி (காஞ்சி) அம்மையின் மேகலையான காஞ்சி விழுந்த இடம். இத்தலத்தில் மட்டுமே மூன்று சக்தி பீடங்கள் உள்ளன..


HOLY KAILASH & MANASAROVAR திருக்கயிலாயம் மானசரோவர்



13. கைலாசம்(இமாலயம்).

14. ப்ருகு பீடம்

15. கேதாரம் (இமாலயம்)


16. சந்தரபுரம்

17. ஸ்ரீ பீடம்

18. ஓங்காரம்(மத்தியப் பிரதேசம்)

19. ஜாலந்தரம் ( பஞ்சாப்)

20. மாளவம்( சௌராஷ்டிரா)

21. குலாந்தகம்

22.கொட்டகம்(தேவகோட்டம்)

23. கோகர்ணம் (கர்நாடகா)

24. மாருதேஷ்வரம்

25. அட்டஹாசம்.

26. விரஜ

27. ராஜக்ருஹம்

28. மஹாபதம்

29. கொல்லகிரி (கொல்லாபுரம்) மூகாம்பிகை

30. ஏலாபுரம்

31. காலேச்வரம்

32. ஜயந்தி.

33. உஜ்ஜயினி (மத்தியப் பிரதேசம்) காளிகா

34.யோகினி

35. க்ஷ"ரிகா

36.ஹஸ்தினாபுரம்

37. உட்டீசம்

38. ப்ரயாகை (அலகாபாத்) லலிதா

39.ஷஷ்டீகம்

40. மாயாபுரம் (ஹரித்வார்,ஸ்ரீ மனசா தேவி சதியின் தலை விழுந்த இடம்)

41.மலயம். (திபெத்)

42.ஸ்ரீ சைலம் (ஆந்திரப் பிரதேசம்) பிரமராம்பாள்

43. மேரு (இமாலயம்)

44. கிரிபீடம் (ஜுனகாத்) அம்பா



Amba அம்பா



45. மஹேந்திரம்

46. வாமனம்

47. ஹ’ரண்யபுரம்

48. மஹாலஷ்மிபுரம் (கோலாப்பூர்) மஹாலஷ்மி

49.அத்ரிஸ்தானம்.

50 சாயா பீடம்

51. சத்ரடம்.

இந்த பரந்த பாரத தேசமெங்கும் அரணாக இருந்து நம்மை காத்திட எம் தாய் கோவில் கொண்ட மிகுந்த புண்ணிய தலங்களான இந்த சக்தி பீடங்களை கண்டு தரிசித்து நன்மை அடைவோமாக.


ஓம் சக்தி


* * * * * * *


Let us see about some of the temples dedicated yo Mother Goddess ans other related stories this year.

2 Comments:

Blogger Unknown said...

Vanakkam,
i am astrokumar, devotee and Research writer of "Mahameru peetam" of vennavasal, Koradacheri, Dist Tiruvarur, Tamilnadu.

Thanks for the 51 sakthi peetam informations.

with regards
s.kumar

10:18 AM  
Blogger S.Muruganandam said...

welcome Astro Kumar.

Thank you give your blog ID.

4:39 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal