Monday, November 07, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 10

இந்த 2011ம் ஆண்டின் நவராத்திரி அலங்கார நிறைவுப்பதிவாக நாம் பார்க்கப் போவது விரை மலர் குழல் வல்லி, மரை மலர் பதவல்லி விமலி திருமயிலை கற்பகவல்லியின் மஹேஸ்வரி திருக்கோல கொலு ஆகும்.





நவதானிய கோலத்தில் நவ கிரகங்கள்

( ஊஞ்சல் மண்டபம்)


எல்லா விழாக்களுமே வெகு சிறப்பாகத்தான் கொண்டாடப்படுகின்றது திருமயிலையில். ஆகவே தான் என்பாக இருந்த அங்கம் பூம்பாவையை எழுப்ப அன்னையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப் பிள்ளையாம் ஞானசம்பந்தப்பெருமான் பதிகம்பாடியபோது ஒவ்வோரு பதிகத்திலும் ஒவ்வொரு விழாவைக்கூறி காணாமல் போதியோ பூம்பாவாய்! என்று பாடி பெண்ணாக்கினார். அவ்வளவு சிறப்பு இன்றும் ஒவ்வொரு விழாவிலும் கயிலையே மயிலையான திருமயிலையில் உள்ளது . இப்பதிவில் நவராத்திரி விழாவின் முழு கோலகலத்தையும் காண்கின்றிர்கள் அன்பர்களே.


மையமாக சூரியன்




ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கயிலைக் காட்சி நாள் தோறும் திருக்கயிலை நாதருக்கு ஒவ்வொரு விதமான கோலம். இன்றைய தினக்கோலம். நவதானியக் கோலம். கோளறு பதிகத்தில் காழி சம்பந்தர் பாடியது போல ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளீ சனி பாம்பிரண்டுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல என்றபடி நவகிரங்கள் ஒன்பதும் ஐயனை வணங்கும் காட்சியை கான்கின்றீர்கள்.








மயிலாப்பூர் ஐதீகம்



(கொலு மண்டபம்)




முக்கிய கொலு கொலு மண்டபத்தில்,வேண்டும் வரம் அருளும் கற்பகவல்லி அன்னை நாளும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் கொலுக்காட்சி அருலூகின்றாள். அன்னையுடன் லக்ஷ்மியும், சரஸ்வதியும் உடன் கொலு இருக்கின்றனர். அம்மண்டபத்தில் , மயிலாப்பூர் ஐதீகமான , மலையரசன் பொற்பாவை பார்வதி தேவி மயில் உருவில் புன்னை மரத்தடியில் சிவ பூஜை செய்யும் காட்சி.








பொம்மைக்கொலு
(முன் மண்டபத்தில்)



ஐயனின் முன் மண்டபத்தில் பொம்மைக்கொலு அந்த அற்புத பொம்மைக்கொலுவில் திருமயிலாப்பூர் ஐதீகம் பொம்மையாக இடம் பெற்றுள்ள காட்சி,


மலைமகள் கற்பகத்துடன் கொலுவிருக்கும்
செல்வம் வழங்கும் அலைமகள்

கூடவே கல்வி அருளும் கலை மகள்
நவராத்திரி சமயத்தில் திருமயிலையில் வந்து தரிசிக்க கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் நாம் பெறலாம்.





திருநாளைப்போவார்நாயனார் வரலாறு

(முன் மண்டபத்தில்)





முன்மண்டபத்திலேயே தினமும் ஒரு நாயன்மார் வரலாறு சித்தரிக்கப்படுகின்றது. இன்றைய தினம் திருநாளைப் போவார் வரலாறு. திருப்புன்கூரிலே திருநாளைப் போவாருக்காக நந்தி விலகிய காட்சி .







நகரும் நந்தி




நந்தி விலகும் வண்ணம் அற்புதமாக மோட்டர் வைத்து அமைத்திருந்தனர். ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கம் நந்தி நகருன் வண்ணம் அமைத்திருந்தது அருமையாக இருந்தது.





மாஹேஸ்வரியாக கற்பகவல்லி







ஐயனைப் போலவே மானும் மழுவும் ஏந்தி, ஐயனுக்குரிய ரிஷப வாகனத்தில் சுகாசனத்தில் எழிலாக சர்வாபரண பூஷிதையாக, சகல செல்வங்களும் தரும் இமய கிரிராஜ தனயை , எழிலாக மாஹேஸ்வரியாக கொலு விற்றிருந்து அருளும் அற்புத காட்சி.





அன்னையின் முக அழகு








அன்னைக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை தொடர்ச்சியாக நதைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கொலு மண்டபத்திலும் யாளி முதலிய பல்வேறு அலங்காரங்கள். மண்டபத்தில் முன்னே பல்வேறு தூண்களில் பொம்மைகள் மற்று பல்வேறு கோணங்களில் அம்மனின் தரிசனம் பெற கண்ணாடிகள் அமைத்துள்ளனர்.






அன்னையின் பின்னழகு


( எத்தனை சடைகள் அன்னைக்கு)



வெள்ளீஸ்வரம் காமாக்ஷி அம்மன்


மாஹேஸ்வரி அலங்காரக்கொலு

மானும் மழுவும் இத்திருக்கோவிலில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதை கவனித்தீர்களா?அன்பர்களே.







இத்திருக்கோவில் திருமயிலை தெற்கு மாடவீதியில் அமைந்துள்ளது. திருமயிலையைப்போலவே மலைமகள், அலைமகள், கலைமகள் கொலு, திருக்கயிலைக் காட்சி என்று சிறப்பாக இக்கோவிலிலும் நவராத்திரி கொலு கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.


கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!



Youtubeல் பதிவேற்றிய அன்பர் rmsundaram1948 அவர்களுக்கு மிக்க நன்றி.

Labels: , , ,

Wednesday, November 02, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 9

நவராத்திரி விழாவானது நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ் நாட்டில் வீட்டில் கொலு, கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம். சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை என்றால் கர்நாடகத்தில் இதுவே அன்னை சாமுண்டீஸ்வரியின் தசரா விழா, குஜராத்தில் ஒன்பது நாட்களும் இரவில் கர்பா என்னும் நடனமாடி அன்னையை வழிபடுகின்றனர். வடநாட்டில் அம்மன் ஆலயங்களில் ஒன்பது நாட்களும் நவதுர்க்கை வழிபாடி மற்றும் இராமர் இராவணனை வென்ற ராம்லீலா, விஜய தசமியன்று, இராவணன், கும்பகர்ணன், மேகநாதன்( இந்திரஜித்) மூவரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன . இதுவே கிழக்குப் பகுதிகளான வங்காளம், அஸ்ஸாமில் துர்கா பூஜாவாக கொண்டாடப்படுகின்றது. சஷ்டி நாள் தொடங்கி துர்கை அம்மனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று நாட்கள் சிறப்பாக பூஜைகள் செய்யப்பட்டு விஜய தசமியன்று, அம்மன் சிலைகள் ஆற்றீல் கரைக்கப்படுகின்றன. மலைமகள் அன்னை பார்வதி திருக்கயிலாயம் விட்டு தனது பிறந்த வீடாண இமயமலைக்கு( பூலோகத்திற்கு) தனது குமாரர்களான கணேசன் மற்றும் கார்த்திகேயன், மகள்களான லக்ஷ்மி, சரஸ்வதியுடன் தாய் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். கல்யாணம் செய்து புக்ககம் சென்ற மகள் தாய் வீட்டிற்கு வந்தாள் எப்படி நாம் சீர் செய்வோமோ அதுபோல இங்கே துர்க்கைகு பூஜைகள் நடைபெறுகின்றது. இப்படங்கள் எல்லாம் மும்பை மாநகரில் இந்த வருடம் நடைபெற்ற துர்காபூஜையின் படங்கள், இதை அனுப்பியவர் அடியேனுடன் பணிபுரியும் திரு. அலோக் குமார் ராய் கர்மாகர் அவர்கள். அன்னையின் அற்புத தரிசனம் கண்டு களியுங்கள்.

சாந்தாகுரூஸ்
லோகன்ட்வாலா
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பந்தல் மற்றும் அன்னைக்கு சிறப்பு அலங்காரம் பாருங்கள்.

பூனம் நகர்

இமயகிரிராச தனயை, பார்வதி, மலைமகள், வரை மகள், சைல சுதா, இமவான் புத்ரி, பர்வதவர்த்தினி, மலை வளர் காதலி உமை, கிரி கன்யா, கிரிஜா, பர்வதபுத்ரி, இமயத்தன்றும் பிறந்தவள் அன்னை துர்க்கைக்கு செய்திருக்கும் அலங்காரத்தின் பிரம்மாண்டத்தைப் பாருங்கள்.

பொவாய்
அன்னைக்கு இமவான் வழங்கிய சிங்கம், மகிடனை சுற்றியுள்ள பாம்பு, அன்னையின் மகள்களான சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி ஆகியோரை சாந்தாகுரூஸ் பந்தலின் இப்படத்தில் தெளிவாக்க் காணலாம். வேண்டுமென்றால் பெரிதாக்கிப் பாருங்கள்.
உத்யான் கோகுல்தாம்
கணேசர், லக்ஷ்மி, துர்க்கா, சரஸ்வதி மற்றும் கார்த்திகேயன் மூஞ்சுறு, ஆந்தை, சிம்மம், அன்னம், மயில் வாகனங்களுடன்.
சிவாஜி பார்க் – தாதர்
அன்னை திருக்கயிலாயத்திலிருந்து வருவதால் சிவபெருமான் இங்கே சிறிதாக மேலே காட்டப்பட்டுள்ளார். பூர்ண கும்பத்தில் தேங்காயை அப்படியே உரிக்காமல் வைத்திருப்பதையும் கவனியுங்கள். கார்த்திகேயனின் (முருகன்) ஆயுதமாக வில், அம்பு ( வேல் அல்ல ) உள்ளதையும் கவனியுங்கள். வாழை மரமாக தாங்கள் பார்ப்பது கணேசனின் மனைவி அபராஜிதா, விஜயதசமியன்று அபராஜிதாவிற்கு சிறப்பு பூஜை நடைபெறும். 

  அபிராமி பட்டர் அருளிய
அபிராமி பதிகம்

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச தனயை மாதேவி நின்னைச் சத்தியமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத் தமருக்கு இரங்கி மிகவும் அகில மதில் நோயின்மை கல்விதன தானியம் அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய் சுகிர்த குணசாலி! பரிபாலி! அநுகூலி திரி சூலி! மங்கள விசாலி! மகவுநான் நீ தாய் அளிக்கொணாதோ? மகிமை வளைதிருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே!

அம்மன் அருள் வளரும் .........

Labels: ,

Tuesday, November 01, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 8

காரைக்காலில் இருந்து அன்பர் பொன்.மனோகரன் அனுப்பிய கொலுக் காட்சிகள் இப்பதிவிலும் தொடர்கின்றன.


முதலில் காரைக்காலில் அன்னை மலைமகள் பார்வதி உலக உயிர்களுக்கிரங்கி தவம் செய்த வரலாற்றைப்பற்றி அறிந்து கொள்ளளாமா? பொன்னி நதி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை வளநாட்டிலே ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது உயிர்கள் எல்லாம் உய்யும் பொருட்டு எம் அம்மை ஜகத்ஜனனி சாகம்பரியாக, தானே பூவுலகிற்கு அரி சொல் ஆற்றங் கரையிலே (அரிசலாறு) திருக்கயிலை மலையிலிருந்து தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய இறையருளால் மழை பெய்து எங்கும் சுபிக்ஷம் ஏற்பட்டது. பின் அங்கேயே அம்மையும் சௌந்தராம்பிகை என்னும் திருநாமத்துடன், கைலாயநாதருடன்(திருக்கயிலையிலிருந்து வந்தவர் என்பதால்) திருக்கோவில் கொள்கின்றாள். இந்த புண்ணிய தலத்திலும், இவ்வாலயத்திற்கு எதிரே சோமநாயகி உடனமர் சோமநாயகி ஆலய வளாகம் உள்ளது,இவ்வளாகத்தில்தான் காரைக்காலம்மையாரின் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நின்று அன்னம் பாலிக்கும் கோலத்தில் காரைக்காலம்மையார் அருள் பாலிக்கின்றார். இக்கொலு இவ்வாலய வளாகத்தில் வைக்கப்பட்ட கொலுவாகும்.




ஐயன்





அன்னை சிவபூஜை செய்யும் கோலம்




கொலுவின் பல்வேறு பொம்மைகள்











தவழும் கண்ணன் கோல கொலு









ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய
துக்க நிவாரணி அஷ்டகம்

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெயஜெய ஸ்ரீதேவி


ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
ஜெயஜெய ஸ்ரீதேவி


ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெயஜெய ஸ்ரீதேவி


ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (8)



அம்மன் அருள் வளரும் .........




Labels: , , , ,

  • Other Articles
  • Unicode enable